Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சரிபாதி பெண்மைக்குத் தந்தவன்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
சரிபாதி பெண்மைக்குத் தந்தவன்
Permalink   
 


ஒன்றானவன்

உருவில் இரண்டானவன்

உருவான செந்தமிழில் மூன்றானவன்

நன்கான வேதத்தில் நான்கானவன்

நமஷிவாய என ஐந்தானவன்

இன்பச்சுவைகளுக்குள் ஆறானவன்

இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்

சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்

தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்

பன்னிருகை வேலவனை பெற்றானவன்

முற்றாதவன்
மூல முதலானவன்

முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்

அவை ஒன்றுதானென்று சொன்னானவன்

தான் பாதி உமை பாதி கொண்டானவன்

சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்

காற்றானவன்

ஒளியானவன்

நீரானவன்

நெருப்பானவன்

நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான

ஊற்றாகி நின்றானவன்

அன்பின் ஒளியாகி நின்றானவன்


__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

திருவிழா ஒலிபெருக்கி சொல்லி தந்த சுந்தரம்பாள் அம்மா பாடல் . வரிகளை படிக்கும் போது காதில் ஒலிக்கிறது ..அருமையான குரல் கருத்து மெட்டு

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard