Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்பே சிறந்த வரம்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
அன்பே சிறந்த வரம்
Permalink   
 


1 கொரி. 13: 4-13

4 அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. 5 அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. 6 அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. 7 அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.
8 அன்பு முடிவற்றது. தீர்க்கதரிசன வரங்கள் முடிவுடையவை. பல மொழிகளைப் பேசும் வரங்களும் உண்டு. அவற்றிற்கும் முடிவுண்டு. அறிவென்னும் வரமும் உண்டு. ஆனால்அதுவும் முடிவு கொண்டது. 9 நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. 10 முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும்.
11 நான் குழந்தையாய் இருந்தபோது,குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன். 12 அதுவேநம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான்முழுக்க அறிவேன். 13 எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது.

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையாருக்கு எழுதின நிருபத்தில் வரும் இந்த அதிகாரம் அன்பைப் பற்றி சிலாகித்து கூறியிருப்பார். மூல மொழியாகிய கிரேக்க மொழியில் (Agape) அகேப் என்னும் பதம் அன்பு என்ற பதத்திற்கு நிகராக பயன்படுத்தப்பட்டுள்ளது.. 

இதன் விரிவான அர்த்தம் இறைவன் தம் படைப்புகளின் மீது கொண்ட அன்பு.. பிரதிபலன் பாராத, தக்கார் தகவிலார் பாராத அன்பு.

துறைமுக நகரமான கொரிந்தின் வசதி படைத்த மக்களுக்கு அன்பின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியதன் அவசியத்தை அப்போஸ்தலனாகிய பவுல் உணர்ந்திருப்பார் போலும்..

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதன்முறையாக அமெரிக்க அதிபரான போது மக்கள் முன் ஆற்றிய முதல் உரையில் இந்த அதிகாரத்தின் பதினோராவது வசனத்தை மேற்கோள் காட்டினார்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் இளவரசி டயானாவின் ஈமச் சடங்கின் போது இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்தது குறிப்பிடத்தக்கது! 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Vasakangalin arththathaiyum! Mukiyathuvathaiyum kuriyatharku nandri nanba

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard