கடந்த ஒரு வாரமாகவே நமது தளம் இறுக்கமாகவும் சலிப்பூட்டுவதாகவும் தோன்றுகிறது.....
எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா,அல்லது நீங்களும் இப்படித்தான் நினைக்கிறிர்களா....
எது எப்படி இருப்பினும்,கோபம்,அன்பு,ஆசை,வெறுப்பு,வேதனை,பொறாமை(இருந்தால்)அனைத்தையும் உங்கள் அன்பானவர்களிடம் வெளிக்காட்டுங்கள் அல்லது பகிர்ந்துகொள்ளுங்கள்,இதன் மூலம் இறுக்கம் குறையும்...மகிழ்ச்சி பெருகும்.
அப்புறம் பகிர்ந்துக்கப் போற அவசரத்துல ஏன் இந்த தளம் சலிப்பூட்டுவதாக மாறுகிறது என்ற காரணத்தை சொல்ல மறந்துராதிங்க. . .
இந்த நாள் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைமை அருளட்டும்.
//இருப்பினும்,கோபம்இருந்தால்உங்கள் அன்பானவர்களிடம் வெளிக்காட்டுங்கள்// ஒரு திட்டம் போட்டு செயுரீன்கப்பா நீங்க ? ஏற்கனவே ரொம்ப பேரு கோபம் காட்ட தயங்குற மாதிரி !
//கோபம்,அன்பு,ஆசை,வெறுப்பு,வேதனை,பொறாமை(இருந்தால்)அனைத்தையும் உங்கள் அன்பானவர்களிடம் வெளிக்காட்டுங்கள் அல்லது பகிர்ந்துகொள்ளுங்கள்,//
Conciliator-னா என்னன்னு ஒரு புது நண்பர் என்கிட்ட நேத்து கேட்டார்.. இதை எப்படியோ.. தெரிந்து கொண்ட thamizhan ... இந்த பதவிக்கு எதாவது வேலை கொடுத்தா என்னன்னு நினச்சி... மேற்படி தன்னோட உள்ளக்கிடக்கைய வெளிப்படுத்தியிருக்கார்னு நினைக்கறேன்!