Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓரினச்சேர்க்கையும் இங்கிலாந்து ராணியும்!


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
ஓரினச்சேர்க்கையும் இங்கிலாந்து ராணியும்!
Permalink   
 


டும் டும் டும் டும் டும்


நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! சல்லாப மனிதர்களுக்கோர் அறிய வாய்ப்பு! இங்கிலாந்து ராணியின் அதிரடி உத்தரவு!

நமது நாட்டில் இனி ஆணும் ஆணும் காதலிக்கலாம். பெண்ணும் பெண்ணும் காமம் கொள்ளலாம்.

நாட்டில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து ராணியால் இனிதே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

டும் டும் டும் டும் டும்

மண்ணின் மைந்தன்: "இது என்ன அநியாயம்? இது அக்கிரமம். புனிதமான உணர்வுகளையெல்லாம் வக்கிரமான சட்டமியற்றி கொச்சையான உறவுகளாக மாற்ற நினைப்பதா? இது என்ன இங்கிலாந்து என்று நினைத்துக் கொண்டாளா உன் ராணி. இதை தம்பட்டம் அடித்து சொல்ல உனக்கே கூச்சமாக இல்லை? அருவறுப்பாக இல்லை? நீயும் இந்த மண்ணின் மைந்தன் தானே மடையனே!"

காவலாளி: ஏய்! நீ என்ன புரட்சிக்காரனா! ராணிக்குத் தெரிந்தால் உன் தலை சீவப்படும்! உடனே இங்கிருந்து போய்விடு.

ண்ணின் மைந்தன்: ஐந்தாயிரம் வருடங்களுக்கும் பழமையான செம்மைப்படுத்தப்பட்ட புனிதமான எங்கள் கலாச்சாரத்தை அழிப்பதே தனது வேலை என எண்ணி சட்டம் இயற்றுகிறாள் உன் ராணி. இதைக்கண்டும் வாய்மூடி அடிமையாக இருக்கச் சொல்கிறாயா! வெள்ளைத் தோல் மாயை கொண்டவனே! வெள்ளைக்காரன் சொல்வது தான் நாகரீகம் என்று எண்ணுபவனே! உன் ராணியிடம் போய்ச் சொல், இந்நாட்டில் இது போன்ற இழிசட்டங்கள் இயற்றத் தேவையில்லையென்று.

காவலாளி: சல்லாபமாயிருப்பவர்களுக்கு துணைபோகும் சட்டம். உனக்கு ஏன் வலிக்கிறது?

ண்ணின் மைந்தன்: ஏன்? நீ சட்டம் இயற்றாவிட்டால் அவர்கள் சல்லாபிக்கப்போவதே இல்லையா? இல்லை இது போன்ற இழி மனிதர்களை இங்கே யார் தடுத்தார்கள்? இவர்கள் இருட்டறைக்குள் எட்டிப்பார்த்தவர்கள் யார்? அல்லது இது வரை இவர்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சொல்லி என்றாவது கைது செய்திருக்கிறீர்களா? மக்கள் தங்கள் தர்மத்திற்க்கு கட்டுப்பட்டுத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்களை யாரும் சீண்டாத பொழுது தேவையில்லாமல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நல்ல கலாச்சாரத்தில் வாழ்பவர்களை முறையற்ற வாழ்வுக்குத் தூண்டுகிறீர்கள். இந்த பாரதத்தின் கலாச்சார ஆணிவேரை அசைத்துப்பார்க்கத் துணிகிறீர்கள். ஒரு நாள் இந்த கேவலமான போக்கிற்க்கு நீயும் உன் ராணியும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

காவலாளி: மூடனே! அதிகப்பிரசங்கி. அரசியின் சட்டத்தை அவமதிக்கிறாயா! உன்னை ராணியின் முன் நிறுத்துகிறேன் பார்.

ண்ணின் மைந்தனை இழுத்துச் சென்று இங்கிலாந்து ராணியின் முன் நிறுத்தினான் காவலாளி.

இங்கிலாந்து ராணி: என்ன பிரச்சனை?

காவலாளி: மகாராணி! இவன் மண்ணின் மைந்தன். ஓரினச்சேர்க்கை செய்யுங்கள் என்று நீங்கள் இயற்றிய உயர்வான சட்டத்தை அவமதித்துப் பேசுகிறான்.

இங்கிலாந்து ராணி: மண்ணின் மைந்தா! உனக்கு ஓரினச்சேர்க்கை பிடிக்காதா? அல்லது உனக்கு ஒத்துப்போக சரியான ஆண் கிடைக்கவில்லை என்ற கோபமா?

ண்ணின் மைந்தன்: தூ... வெட்கம் கெட்டவளே! கூச்சமில்லாதவளே! நாயைப்போல் வாழும் உங்கள் வாழ்க்கையைப் பேயைப்போல் வந்து எந்நாட்டில் திணிக்கப்பார்க்கிறாயே! தர்மமும் இந்நாட்டின் கலாச்சாரமும் உன்னையும் சேர்த்து வாழவைக்கும். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்ட நினைக்காதே!

இங்கிலாந்து ராணி: என்னடா பெரிய தர்மமும் உனது கலாச்சாரமும்! நீங்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்று உங்கள் ஊர்க்காரர் பெரியாரே சொல்லிவிட்டார். கருணாநிதியும் அதையே தான் வழிமொழிகிறார். உங்கள் சொந்தநாட்டுக்காரர்களே எங்கள் பக்கம் தான்! இங்கிலாந்து நாட்டுச் சட்டத்தை நீ ஏற்றுக்கொள்ள வேண்டியது உனது தலைவிதி. 

ண்ணின் மைந்தன்: அவர்கள் தர்மத்தை எப்படி வேண்டுமானாலும் பழிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எனக்கு இல்லை. இந்த நாட்டின் தர்மங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளுடைய கலாச்சாரமும் உன்னால் நசுக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்!.

இங்கிலாந்து ராணி: ஏய்! நீ அதிகம் பேசுவாய் போலிருக்கிறது. இதோ பார். மிருகங்களுக்குக் கூட ஓரினச்சேர்க்கை உண்டு என்றும் இது ஒரு இயற்கையான உணர்ச்சி என்றும் நிபுணர்களே சொல்லியிருக்கிறார்கள். எதுவும் தெரியாமல் எக்காளமிடாதே..

ண்ணின் மைந்தன்: மமதை கொண்ட ராணியே! புணர்ச்சியின் உணர்ச்சிகள் இயற்கையானதே என்று உணர்ந்து, அத்தகைய உணர்ச்சிகள் உண்டாவதற்க்கான காரணமும் அறிந்து அவற்றை முறைப்படுத்தி முழுமையான மனிதனாக ஒருவன் வாழ என்ன செய்யவேண்டும் என்பதனை வகுத்து முறையாக அதன் படி வாழ்பவர்கள் நாங்கள். நீ எனக்குச் சொல்லித்தராதே!

இங்கிலாந்து ராணி: ஹும்! நீ சாகாமல் போக மாட்டாய்! இதோ.. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்...எங்கே ஓரினச்சேர்க்கையை நீங்கள் கலாச்சாரம் கொண்டு எப்படிக் கட்டுப்படுத்தினீர்கள் என்று நான் திருப்தியடையும் வகையில் சொல் பார்க்கலாம். என் மனம் அதை ஏற்றுக் கொண்டால் உன்னை விடுவிக்கிறேன். இல்லையேல் உன் தலை கொய்யப்படும் ஜாக்கிரதை.

ண்ணின் மைந்தன்: முதலில் அது உண்டாகும் காரணத்தை புரிந்து கொள். எல்லா மனிதர்களுக்கும் பதின் வயதுகளின் ஆரம்பத்தில் தோன்றும் ஒரு பரவச உணர்ச்சி தான் ஓரினக் கவர்ச்சி. அது உடலுறவுக்கு ஏங்கும் உணர்ச்சி அல்ல. 

அது உடல் மாற்றத்தைக் கண்டு பரவசம் கொண்டு தம்மைப்போல் உள்ள சக மனிதனுக்கும் அதுவே தானா என்று ஆராய முற்படும் முயற்ச்சி. ஆணுக்கு ஆண் முழுமையாக தங்களை அறிந்து கொள்ளவும், அதே போல் பெண்ணுக்குப் பெண்ணும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒரு ஆர்வக் கோளாரின் வெளிப்பாடு. 

பின்னர் நான் மட்டும் தனித்தவன் அல்ல. எல்லோரும் என்னைப்போல் தான் என்று உணர்ச்சிகள் ஒரு நிலைக்குத் திரும்பும் போது மனிதனின் வயது பதின் வயது துவக்கத்திலிருந்து பதினைந்தைத் தொட்டிருக்கும். பதினைந்து வயதைத் தொடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்போது தங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதைப்போல் எதிர் பாலரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலெழும். இது தான் இயற்க்கை. 

இந்த உணர்ச்சி தான் ஆணையும் பெண்ணையும் இயற்க்கையான புனர்ச்சிக்குக் கொண்டு செல்லும். காதலும் காமமும் இந்த வயதில் தான் தலை தூக்கும். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையத்துடிக்கும் வயது. இந்த வயதில் காதலும் காமமும் முறையான உறவான திருமணம் என்ற சடங்கின் மூலமாக நிகழ்த்தப் பட்டு இல்லற வாழ்க்கை என்னும் தர்மத்திற்க்குள் நுழைந்து இயற்கையாக உண்டாகும் முறையான உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கும் படி எங்கள் கலாச்சாரம் கட்டுக்கோப்பாக இயற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி: சரி அப்படியானால் ஓரினச்சேர்க்கை உருவாவது ஏன்?

ண்ணின் மைந்தன்: ஒரு ஆண் தன்னை முழுமையான ஆண் என்பதை உணரத் தவறும் போது. ஒரு பெண் தன்னை முழுமையான பெண் என்பதை உணரத் தவறும் போது, அவர்களின் உணர்வு ஒரே பாலினரிடமிருந்து மாறி எதிர் பாலினரை ஏற்கத் தடுமாறும். அவ்வாறு தடுமாறும் சமயங்களில் ஒருவருடைய மனம் சக பாலினரிடமே தம்முடைய உணர்வுக்கு ஆதரவை எதிர் பார்க்கும். அப்படிப்பட்ட இணக்கமான ஒரு ஆதரவு சக பாலினரிடம் இருந்தே கிடைக்கும் பொழுது அதையே இன்பமாகக் கொண்டு விடுகின்றனர். 

அதிலிருந்து விடுபட மனம் மறுக்கிறது. இது தான் உலகம், இதுவே இன்பம் என்று மனம் முடிவு செய்துவிடுகிறது. ஆணுக்கு பெண்ணின் அவசியமும், பெண்ணுக்கு ஆணின் அவசியமும் தேவையில்லை என்ற எண்ணம் தலைதூக்கி விடுகிறது. 

இது இயற்கையான இல்லற வாழ்விலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறது. இவ்வாறான வாழ்க்கை சமூகத்திற்கு ஒவ்வாது. குடும்ப வாழ்க்கைக்குக் கேடு விளைவிக்கும். குடும்பம் குடும்பமாக வாழும் சமூகத்தின் நடுவே இப்படிப்பட்டவர்கள் வாழ்வது அந்த சமூகத்தின் மற்ற தரப்பினரின் வாழ்க்கையை பாதிக்கக் கூடியதாக அமையும். 

அதனாலேயே அவ்வாறானவர்களை சமூகத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று ஒதுக்க நேர்கிறது. அனால் இங்கிலாந்து ராணியே! ஒட்டு மொத்தச் சமூகமும் ஓரினச்சேர்க்கையாளர்களாகவே ஆக வேண்டும் என்று நீ விரும்புகிறாய். இது சரிதானா? நீயே யோசித்துப்பார்!

இங்கிலாந்து ராணி: சரி, இத்தகைய உணர்ச்சிகளை உங்கள் கலாச்சாரம் மூலமாக எப்படித் தடுக்கிறீர்கள்?

ண்ணின் மைந்தன்: சுலபம். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ தங்களுடைய பாலுணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்தால் போதும். 

உதாரணமாக பதின் வயதைத் தொடும் போது பெண் பூப்பெய்துகிறாள். எங்கள் கலாச்சாரப்படி பூப்பெய்தும் பெண்ணை உடனே மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து அலங்காரம் செய்து அவளைச் சுற்றி நின்று பாட்டு பாடி அவளுடைய அழகை வார்த்தைகளால் சொல்லி , அவளுடைய பெண்மையை உணரச் செய்கிறார்கள். 

மனோரீதியாக அந்தப் பெண் தன்னுடைய பெண்மையை யாருடன் ரசிக்க வேண்டியவள் என்பதை பாட்டால் உணரச் செய்கிறார்கள். 'கட்டழகன் வருவான்', 'காளை உன்னைக் கட்டுவான்','வீரன் உன்னைக் கவர்ந்து செல்வான்' என்றெல்லாம் அவளது பாலுணர்வை ஆண்மீது செலுத்தச் செய்கிறார்கள். இதனாலேயே பருவம் எட்டும் வயதில் ஒரு பெண் தன் பெண்மையை முழுதாக உணர்கிறாள் மேலும் அவள் தன்னுடன் கூட வேண்டியது ஒரு ஆண் தான் என்று முழுமையாக மனதை எதிர் பாலரிடம் செலுத்த தயார் செய்து கொள்கிறாள். மாறாக அவள் பெண்ணைக் காதலிக்க விரும்பமாட்டாள்.

அதே போல் ஒரு ஆண் அரும்பு மீசை முளைத்தவனாக ஆகும் போது அவனிடம் ஆண் என்ற உடற்திமிரை ஏற்றி வைப்பார்கள். வீர விளையாட்டுக்கள், மல்யுத்தம், காளை அடக்குதல் போன்றவை எல்லாம் இப்படி வந்தவை தான். 'ஆம்பளப்புள்ள, நெஞ்ச நிம்த்தி நடப்பா!' என்று உசுப்பேற்றுகிறார்களே! அது ஆணாதிக்கம் உருவாகவும் பெண்ணை அடிமையாக்கவும் இல்லை. அப்படியெல்லாம் இருந்தால் தான் ஒரு ஆண் மனோரீதியாக தன்னை ஆண் என்று முழுமையாக உணரும் சூழல் உண்டாகிறது. (இந்த காலத்தில் ஆண் என்ற திமிர் ரவுடித்தனமும் அடியாள் வேலைக்கும் என்று ஆகிவிட்டது வேறு விஷயம்).

இப்படி ஒவ்வொரு ஆணும் முழுமையான ஆண்மகனாக நெஞ்சு நிமிர்த்தி நடப்பவனாக இருந்தால் அவன் சக ஆண்மகனிடம் தனது உணர்வுக்கு வடிகால் தேட மாட்டான். அவனது உணர்வு பெண்ணைக் கவர வேண்டும் என்பதிலேயே இருக்கும். ஆணும் ஆணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது காந்தத்தின் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்ற தத்துவப்படி இருவரும் விலகிச் சென்று விடுவார்கள். காதல் கொள்ள மாட்டார்கள்.

பெயர் வைப்பதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் காட்டுவதும் ஒருவரை பெயர் சொல்லி அழைக்கும் போதே அவருடைய பாலின உணர்வு ஒவ்வொரு முறையும் உணரப்படுவதற்க்கே.

அதுமட்டுமல்ல ஆடைகளிலும் ஆண் பெண் என்று வேற்றுமை காட்டுவதும் நாம் எதிர் பாலரைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஆணுக்கும் 

பெண்ணுக்கும் உண்டாக வேண்டும் என்பதற்க்கே. உங்கள் நாட்டிற்கு வரும் எல்லோரும் சொல்லும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பதே.

இங்கிலாந்து ராணி: இது என்ன வேடிக்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் சீருடை இருக்குமா என்ன?

ண்ணின் மைந்தன்: ஏன் இருக்கக் கூடாது? உமது காவல் துறைக்கு ஏன் சீருடை? கயவர்கள் கண்டால் கழிந்து ஓட வேண்டும் என்பதற்க்குத் தானே! பள்ளிக் குழந்தைகளுக்கு ஏன் சீருடை? பார்ப்பவர்களுக்கு பரிவு உண்டாக வேண்டும் என்று தானே! ஏன் உமது அமைச்சர்கள் எல்லாம் ஏன் வெள்ளையும் சொள்ளையுமாக அலைகிறார்கள்? அவர்களை பார்த்தவுடன் பொதுமக்கள் பயப்பட வேண்டும் அதற்குத் தானே!

இதில் எல்லாம் எந்தக் காரணத்திற்க்காக சீருடை உள்ளதோ அதே போல் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உளவியல் ரீதியாக புரிந்துணர்வு உண்டாக உடையில் வித்தியாசம் காண்பிக்கப்பட்டது.

இப்படி பல முறைகளில் எங்கள் கலாச்சாரத்தில் ஒரு ஆணை முழுமையான ஆணாகவும் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் உணரச் செய்து அவர்களை முறையான இல்லற வாழ்க்கை வாழச் செய்கிறோம்.

ஆனால் நீயோ தேவையில்லாமல் சட்டமியற்றி எங்கள் கலாச்சாரத்தை அடியோடு உடைக்கப் பார்க்கிறாய்!

இங்கிலாந்து ராணி: ம்ம்ம்! நீ சொல்வதை கேட்கும் போது எனக்கு சரியென்று தான் படுகிறது. ஆனால் இந்த நாட்டை இங்கிலாந்து சாம்ராஜ்ஜியமாக 
மாற்ற வேண்டும் என்று எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் என்னால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்போது ஒரு காவலாளி ஓலை ஒன்றைக் கொடுக்கிறான். இங்கிலாந்து ராணி சத்தமாகப் படிக்கிறாள். "பாரதத்தை ஆளும் இங்கிலாந்து ராணியே! நீ இயற்றிய புதிய சட்டம் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இந்தியாவில் கலாச்சாரம் அடியோடு அழிக்கப்பட்டது என்ற நல்ல செய்தியை விரைவில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். பதில் தேவை. இப்படிக்கு அரசர்"

இங்கிலாந்து ராணி: பார்த்தாயா ஓலையை! இதோ உனக்காக ஒரு வாய்ப்பைத் தருகிறேன். கண்காணாமல் இந்த நாட்டிலிருந்து ஓடி விடு. உயிர் 
மிச்சமாகும். இல்லையேல் நீ செத்து மடியும் காலம் சில வினாடிகளில் வந்து விடும்! என்ன சொல்கிறாய்.

ண்ணின் மைந்தன்: அந்நியநாட்டுப் பிசாசே! இத்தனைக்காலம் எங்களை ஆயுதத்தால் அடிமையாக்கினாய்! இப்பொழுது உன் கலாச்சாரத்தால் அடிமையாக்கப் 
பார்க்கிறாய். நீ ஒழிந்தால் தான் தர்மத்தையும் இந்த நாட்டையும் காப்பாற்ற முடியும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. எங்கள் 
உணர்வுகளை அவமதிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து விட்டு பின்னால் எங்கள் தலைவர்களை குற்றம் சொல்லிப் பயன் இல்லை. ஏன்னென்றால் நீ அவமதிப்பது எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை. அசைக்கப் பார்ப்பது எங்கள் தாய்மை உணர்ச்சியை. இதற்கு நீயும் உன் இங்கிலாந்து நாடும் ஒரு நாள் பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்பதை மறக்காதே!

இங்கிலாந்து ராணி: சீ மூடனே! உனக்கு சாவுதான் ஒரே முடிவு. இவனை சிரச்சேதம் செய்யுங்கள்.

காவலாளிகள் மண்ணின் மைந்தனை அழைத்துச் செல்கிறார்கள். கற்பாறையில் அவன் தலை வைக்கப்பட்டது. 

ஓங்கிய வாள் வேகமாக கீழே இறங்க, குதித்துத் தெறித்தது உதிரம். சிதறி உருண்டது சிகரம். வீழ்ந்தது மண்ணின் மைந்தனின் அங்கம். இன்பமாய் இளித்தாள் இங்கிலாந்து ராணி.

புறாவின் கால்களில் கட்டி ஓலை ஒன்றை அனுப்பினாள்...

"மதிப்பிற்குரிய அரசர் அவர்களுக்கு, 

ஒரு இந்தியப் பூச்சி நசுக்கப்பட்டது. இந்தியா விரைவில் இங்கிலாந்து ராஜ்ஜியம்...! வெற்றிப் பெருங்கூட்டம் விரைவில் நடக்கும், 

உங்கள் தலைமையில்....!

(சில பல காரணங்களுக்காக.. இந்த கற்பனைப் படைப்பின் மூலம் மாற்றம் செய்யப்பட்டே இங்கு பதிவிடப்பட்டுள்ளது)



-- Edited by Rotheiss on Tuesday 4th of December 2012 01:08:14 PM

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: ஓரினச்சேர்க்கையும் இத்தாலி ராணியும்!
Permalink   
 


எவ்வளவு அடிப்படை அற்ற கருத்துகள்...... ஏன் இதுவரை எவரும் இந்த முட்டாள்த்தனமான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?.....

நான் எனது கருத்தை பதிவு செய்துவிட்டேன்.... அநேகமாக அது நீக்கப்படலாம்.....
பதிவு செய்வது எனது கடமை, அதை செய்துவிட்டேன்......


இதுதான் நான் செய்த பதிவு....
"மிகவும் அடிப்படையான தவறு உங்கள் கருத்துக்களில் இருக்கிறது..... ஒருபால் ஈர்ப்பு(GAY, LESBIAN) என்பது வேறு, ஆண் ஆணுடன் உறவு கொள்வது (MSM) என்பது வேறு..... சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் பால் உணர்வுகள் தூண்டப்பட்டு ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உறவில் ஈடுபாடுவது MSM (Male Sex Male) எனப்படும்.... உடல் ரீதியாக அந்த நேரத்து தேவையை பூர்த்தி செய்வதுதான் இது.... இது நீங்கள் சொல்வது போல பதின்வயத்தில் வரலாம்... ஆனால், ஒருபால் ஈர்ப்பு என்பது ஒருவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது.... அதற்கு காரணம் மரபனுதான் என்று ஆய்வுகளில் சொல்கிறார்கள்.... இந்து மத தர்மத்தில் இதனை தவறாக கூறவில்லை.... ஆரிய தாக்கத்திற்கு பிறகு, மனு தர்மங்களினால் இதை தவறென சொல்கிறார்கள்.... அடிப்படை இந்து மதம் என்பது பாலின ஈர்ப்புகளை தவறென சொல்லவில்லை.... மேலும், நீங்கள் சொல்லும் போப் அவர்கள் கூட இதை தவறென்றுதான் சொல்கிறார்.... பால் ஈர்ப்பு என்பது மதத்தோடு தொடர்புடைய விஷயம் அல்ல.... அது ஒருவரின் தனிப்பட்ட உரிமை.... அதை தவறென்று சொல்லவோ, குற்றமாக பார்க்கவோ எவருக்கும் உரிமையில்லை.... பெரும்பாலானவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை குற்றவாளிகளாக பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதே அளவு தவறு ஒருபால் ஈர்ப்பு நபர்களையும் குற்றம் சொல்வதும்.... "

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
RE: ஓரினச்சேர்க்கையும் இங்கிலாந்து ராணியும்!
Permalink   
 


உண்மையில் வருத்தமளிக்கும் பதிவு இது.. இதை 2009-ல் பதிவிட்ட நபர்.. ஓரினச்சேர்க்கை என்பது ஏதோ வெளிநாட்டவர் திட்டமிட்டு பரப்பி வரும் சதி என்றும்.. அது நம் கலாச்சாரத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்பது போலவும் ஒரு மாயையானத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.. !

ஓரினச்சேர்க்கை என்பதே ஒரு மேற்கத்திய பாதிப்பு என இவர் சொல்வது வேடிக்கை!

ஒரு நபர் ஓரின ஈர்ப்பு கொள்வதகான காரணங்கள் என இவர் பட்டியலிடுபவை அரைவேக்காட்டுத்தனத்தின் வெளிப்பாடு.. இந்த பதிவை இங்கு பதிவிட்டதன் நோக்கம்.. நம் சமுதாயத்தால் எவ்வாறெல்லாம் ஓரின சேர்க்கையாளர்கள் பார்க்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதற்கே..


(யார் மனதும் புண்படக்கூடாது என்ற காரணத்தாலேயே.. மதம் சார்ந்த கருத்துக்களும், அரசியல் சார்ந்த கருத்துக்களும் சிறிய மாறுதலுக்குப் பின் வெளியிடும்படி நேர்ந்தது!)

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

I cant understand whether this topic supports homosex or oppose it.......

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

I dont know but I feel disappointed after read this post....

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Neenga adhula oru matter sollirukeenga aanuku pen mela vara attraction dha nature nu.... Appo mathadhu ellam against nature ah.....??

__________________


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

ஓரின சேர்கயோ அல்லது ஈரின சேர்கயோ அது தவறு அல்லது சரி என்று இரு சம்மந்த பட்ட நபர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் . மற்றவர்களுக்காக சமுதாயத்திற்காக அல்லது அப்பா அம்மா குடும்பம் என்று நினைபவர்கள் இதில் கால் வைத்தது தவறு .அப்படி ஒப்புகொள்ளும் இருவரை இந்த சமூகம் பிரிக்கும் ஆனால் முதலில் இந்த சமூகத்தை நோக்கி நாம் கல் எரிய வேண்டும் . பெரியவன் ஆணை எல்லாம் என்றால் இதுவும் அப்படி தான் .

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

முதலில் இது ஒரு முதல் தர கட்டுரை என்பதில் எந்த சந்தேகமும் வரவில்லை .அருமையான பெயர்வு . இங்கு அளித்த ரோதீஸ் அவர்களை பாராட்டலாம். அடுத்து இந்த கட்டுரையில் சொல்லி இருக்கும் விஷயங்கள் அநேகமாக சரியோ என்று தோன்றுகிறது .மூல கருத்து என்னவோ தவறு தான் .ஆனால் சம்பிரதாயங்கள் சடங்குகள் குறித்த விளக்கங்கள் அருமை .

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

// இந்த கட்டுரையில் சொல்லி இருக்கும் விஷயங்கள் அநேகமாக சரியோ என்று தோன்றுகிறது .//

?????????????

என்ன ஆச்சு.. same side goal போடறீங்களா?... நம்ம மக்கள்லாம்.. இத படிச்சிட்டு கொந்தளிச்சிப் போய் இருக்காங்க...?!

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@kutty
அது தவறு அல்லது சரி என்று இரு சம்மந்த பட்ட நபர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்
kutty solvathu correct

__________________

praveen



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

முத்து எதற்காக அப்படி சொல்றார்னு புரியல.... ஒருவேளை அவர் மனதில் இது தவறென்று எண்ணிக்கொண்டிருந்தால், அவர் இதை ஏன் தவறாக நினைக்கிறார்? என்று சொன்னால் அதற்கு நான் பதில் சொல்கிறேன்......

அறிவியல், மதம், கலாச்சாரம் என்று எந்த வாதத்தை முன்வைத்தாலும் அதில் நான் இதிலுள்ள நியாயத்தை முன்வைக்கிறேன்.....
இவ்வளவு காலம் எவ்வளவோ சொல்லியும் நம் அருகில் இருப்பவருக்கு கூட "இது தவறில்லை" என்று உணரவைக்க முடியாத அளவிற்கு இருந்துவிட்டதை எண்ணி என்னையே நொந்துக்கொள்கிறேன்....

மற்ற மதங்களைவிட ஒருபால் ஈர்ப்பை அருகில் வைத்து பார்த்த மதம் நம் இந்து மதம்.....

சிவபெருமானுக்கும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுக்கும் (எந்த அவதாரம் எடுத்தாலும் உள்ளே இருப்பவர் விஷ்ணு என்ற ஆண்கடவுள் தானே?) பிறந்த மகன் ஐயப்பன்.....
சிவனுக்கும் அக்னிதேவனுக்கும் பிறந்த மகன் முருகன்.....
பார்வதிக்கும் கங்கைக்கும் பிறந்தவர் விநாயகர்....
பாரதப்போரில் கிருஷ்ணர் பெண்ணாக உருவெடுத்து அரவானுடன் உறவு கொண்டார்..... எந்த உருவில் வந்தாலும் அது கிருஷ்ணர்தானே....
இதையெல்லாம் எந்த இடத்திலும் நம் மதம் தவறாக பார்க்கவில்லை.....

ஆரிய தாக்கம் உண்டானபோது அவர்கள் உருவாக்கிய மனுதர்மங்களின் படிதான் இதைப்பற்றிய நம் கருத்துகள் மாறத்தொடங்கின..... நமக்கென உள்ள எவ்வித மதகோட்பாடும் இதை தவறாக பார்க்கவில்லை....

இன்னும் நிறைய விளக்க முடியும்..... உங்கள் சந்தேகத்தை சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

//மூல கருத்து என்னவோ தவறு தான் // இது கே செக்ஸ் தவறு என்று இந்த கட்டுரை சொல்வதை எதிர்த்து நான் சொல்லி இருக்கும் வாக்கியம் .
சம்பிரதாயங்கள் சடங்குகள் பற்றி சொல்லி இருப்பவை அர்த்தமுள்ள ஹிந்து மதம் கட்டுரையில் கண்ணதாசன் சொல்லியவை . அதை தான் நான் நன்றாக இருக்கு என்று சொன்னேன் தவிர கே செக்ஸ் தவறு என்று சொல்லவில்லை .
கே செக்ஸ் தவறு என்று நான் சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள் செம காமடியா இருக்கும் .
இந்த நவீன நாடாண்மை பண்ற லொள்ளுக்கு ஒரு அளவே இல்லாமை போச்சி

ரு முறை விஜய் கதைக்கு நான் ரசிச்சி பதில் எழுத அவரோ நீங்க திட்டுறீங்களா அல்லது பாராட்டுரீங்கலானு புரியலை என்றார் . சரி மத்தவங்களுக்கு எளிதில் புரியாத மாத்ரி எழுத ஆரம்பிச்சிட்டோம் ..சோ நாம பெரிய ஆளு தான் போல என்று ஹாபி ஆயிட்டேன் ..ஹீ ஹீ ... நான் இந்த கட்டுரைக்கு ஆதரவானவன் இல்லை .
ஆனால் இதில் சொல்ல பட்டிருக்கும் சில சம்பிரதாயங்கள தான் சரி என்றேன் .
இதை (கருத்துகளை மட்டும் . கட்டுரைய அல்ல )தமிழன் கூட அர்த்தமுள்ள ஹிந்து மதம் என்ற தலைப்பில் வெளியிட்டதாக நினைவு ... ( அந்த ஆளையும் ஆட்டத்துல இழுத்தாச்சி ..அப்பாடா )



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@முத்து.....
எப்பவாவது புரியாதது போல பதிவிடுவது தப்பில்லை.... எப்பவுமே இப்படித்தான் என்றால், நாங்க என்னதான் பண்றது???....
கடவுளை அடைய, வணங்க உருவாக்கப்பட்டவைதான் மதங்களும், சடங்குகளும்...... இன்று கடவுளையே மறந்து மதத்தையும் சடங்குகளையும் தூக்கி வைத்துக்கொண்டு திரிவதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்....
இதை நான் சொல்லும் இந்த நாள் ஒரு விசித்திரமான நாள்..... டிசம்பர் ஆறு, பாபர் மசூதி இடிப்பு நாள்..... ராமனோ, அல்லாவோ தனக்கு கோவில் கட்ட சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை..... ஏனோ ஒரு பிடிவாதத்தால் பகை வளர்க்க நாம்தான் அவர்களை பகடைக்காயாக ஆக்குகிறோம்.......

இனியும் மதங்களின் பெயரை சொல்லி ஒரு தனிப்பட்ட நபரின் உரிமையை பறிக்காதீர்கள்.....
கடவுள் ஒருவரை தவிர ஒருவனின் சுதந்திரத்திலும், உரிமையிலும் எவனுக்கும் உரிமை இல்லை....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Purunjudhu aana purila....

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

No one in tis wrld clearly know & felt abt the religions full meaning & purpose

choosing sexsuality is deponds on two persons who involved in that



__________________


புதியவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink   
 

yenna solla varinga?

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard