காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது எந்தன் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்வது
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
----------
போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினெலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை இருடினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்