ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயரினும் ஓம்பப் படும். மனம் வழுக்கும் வாழ்வை வகுத்தான் வள்ளுவன்.
பாலியல் வன்கொடுமை. போலிச் சாமி பின் தொடரல் கூலி பணியாளன் கூழை பறித்தல் ஊழல் பெருக்கம் உயிர் கொலை வளரும் இந்தியா...
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இச்சகத்தினை அழித்திடுவோம். சொன்னான் யுகத்தினை வென்ற பாரதி.
மலம் தின்னும் மனிதர் எலிக்கறி உண்ணும் உழவர் எச்சிலை சுரண்டும் சிறுவர் பசியில் தெருவில் கிழவர்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்று சங்கே முழங்கு தங்கத் தமிழ் எழுதினான் தாசன்.
அழியும் மொழியிலோன்று - எங்கள் ஆருயிர் தமிழென்று அறிக்கை விடுகிறது ஐநா...
யாவும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவர் கணியன் பூங்குன்றனார் வாழும் ஊரில் அகதிகளாவீர் - மக்கள் கதறி அழுது ஏங்கின்றனர்.
கண்ணோடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது, உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் மின்னும் காதல் வண்ணம் தீட்டி எண்ணம் எல்லாம் எழுதினான் கம்பன்.
கருகலைப்பு அவசியப்படும் வரை கையிருப்புள்ள கடைசி ஆணுறை களையப்படும் வரை கசப்பதில்லை நவீன காதல்.
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி - பேனா பிரம்போடுதான் அடித் துரைத்தார் பட்டுகோட்டை.
உனக்கு வாக்கபட்டவள் சேல போல வாக்குரிம- அத காசுக்கு விக்கும் ஈனபயலுக தான் எரும.
பத்துப்பாட்டு கேட்ட தமிழன் குத்துப் பாட்டு கேட்கிறான் ஆவேசபடுகிறார் அப்துல் ரகுமான்.
கண்ணீர் விட்டு பாடு - நமக்கு தண்ணீர் தட்டுப்பாடு - திரை தலைவர் உருவம் குளிக்க தாய்பசு பாலுற்றுதட தலைமுறை.
நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள் நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்? வாளெடுத்து இதயம் கிழிக்கிறார் வைரமுத்து.
பெண்ணுறுப்பு கிழித்து பிள்ளை எடுத்து வெளி எறிந்தட வெறி பிடித்த மத இன சாதி கலவரம்.
பக்கத்து ஊரான் உடம்பை பங்கிட்டு வெட்டுதட இன்றைய தேதி நிலவரம்.
//தமிழின் தலையெழுத்தை மாற்றும் முன் உன் கையெழுத்தை தமிழுக்கு மாற்று.
இங்கிலாந்து தேசம் இனிய தமிழில் கையொப்பமிடுவதில்லை.//
எனக்கு இப்படி ஒரு சந்தேகம் ரொம்ப நாளாவே இருக்கு... கையெழுத்த இன்ன மொழியில தான் இடணும்னு எதும் வரைமுறை இருக்கா..? நான் கேக்கறது சட்டரீதியா.. விவரம் தெரிஞ்சவங்க... விளக்குங்க..!
விளக்குவோம்ல!! ஆமாம்ப்பா ஆமாம் . தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே கையெழுத்து இட முடியும் .வேறு மொழியில் கையெழுத்திட அனுமதி இல்லை . இந்த சட்டம் வந்து பத்து வருடங்கள் ஆகிறது ..