எல்லாரும் "நீ சொல்லேன், நீ சொல்லேன்"னு சொல்லி எஸ் ஆகிடுறீங்க..... நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்பா....
முதல் ஈர்ப்பு வேற, முதல் காதல் வேற.... என் முதல் ஈர்ப்பு என்பது நான்கு வயதில், பக்கத்து வீட்டு சாந்தி அக்கா (?) மேல வந்தது.... அப்போ அது ப்ளஸ் டூ முடிச்சிட்டு வீட்ல இருந்துச்சு.... நான் எல்.கே.ஜி.... ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் அவங்க வீட்லதான் இருப்பேன்.... எனக்கு சாப்பாடு ஊட்டிவிடும், கதை சொல்லும், கடைக்கு கூட்டிட்டு போகும்..... அப்படி நாங்க சந்தோஷமா திரிந்த நாட்களில் ஒரு வில்லன் வந்தான்.... சாந்தி அக்காவை கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு போய்ட்டான்.... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு......
முதல் காதல் பற்றி நான் முன்பே சொல்லிருக்கேன்.... விஜயுடனான என் காதல்.... படிக்கலைனா ப்ளாக்'ல படிச்சுக்கொங்க.... அடுத்து வேற யாராச்சும் சொல்லுங்கப்பா....
இது தான் காதல் வரும் பருவமோ என்னவோ பதினேழு கடப்பது ரொம்பவே கஷ்டமா இருந்துது
நாங்கள் எல்லாம் கலை கல்லூரியில் சேர்ந்து வகுப்புகள் தொடங்கி சில நாள்கள் ஆயிருக்கும்
எங்கள் கவனம் எபோதும் பொறியியல் கல்லூரி மாணவிகள் மீது தான் .அதை ஒரு பெருமையாக கருதுவோம் .
ஒரு நாள் கல்லூரி விடுப்பு விட வேறு வழியின்றி திரைப்படம் பார்க் என்று திரிந்தோம்.
ஒரு பலான திரைப்படத்திற்கு நண்பர்கள் அழைக்க எனக்கோ பயம் , போஸ்டரே இரண்டு மூன்று நாள் தூங்க விடாது போல ஒரு ரத்த சிவப்பு நிறத்தில் இருவர் அருகருகே படுத்து தூங்கி ? கொண்டிருப்பது போல இருக்க வேண்டாம் என மறுத்துவிட்டேன் .( சரி! சரி! விடுங்க ..வீட்டுக்கு தெரிஞ்சிடுமோன்னு தான் போகலை! )
நல்ல பிள்ளையாக அருகில் இருந்த ஒரு ஏ சீ திரையரங்கில் அன்று வெளியான ஒரு திரைப்படத்திற்கு கஷ்டப்பட்டு சீட் வாங்கி உள்ளே நுழைந்தேன் படம் பேரு ஆட்டோ கிராப் .
எனக்கு அருகில் சில பொறியியல் பெண்டுகள் அரட்டையோ அரட்டை
அன்பைத்தேடி அரட்டை எல்லாம் தூக்கி சாப்பிட்டு கொண்டு இருக்க எனக்கோ ஒரே வெக்கம் போப் காரன் வாங்கி கொறித்து கொண்டு மெதுவாக நோட்டம் விட ஒரு தேவதை தெரிந்தது . ஆம் . உண்மையில் அவ்வளவு அழகு பெண்ணை அதற்க்கு முன் பார்த்ததில்லை . என்னவோ தெரியவில்லை .மீண்டும் மீண்டும் அவளை பார்க்க ஆசையாய் இருந்தது
அவள் முகம் என் நெஞ்சில் பதித்து கொள்ள நினைத்தேன் .அவளும் என்னை திரும்பி திரும்பி பார்த்ததாக ? பட்டது .
இருந்தாலும் கருப்பு கலந்த அரை சிவப்பு நிறத்தில் நான் ஒல்லியாய் மீசை கூட அரும்பு விடாமல் என்னை வழிய நிற்க அவளோ ராஜாஸ்தான் மார்பில் முகமாய் ஜொலிக்க எனக்கே நம்பிக்கை இல்லை
இருந்தாலும் படம் முடிந்த திரையரங்கை விட்டு பஸ் நிலையம் நகர நானும் தொடர்ந்தேன் .
திரும்பி திரும்பி பார்த்து உசுபெத்தினால் . அவள் போகும் பஸ் எல்லாம் தெரிந்து வைத்து கொண்டேன் .
அப்ப்புறம் என்ன பாவம் ...எங்கள் தமிழ் பேராசிரியர் தான் இதனால் பெரிதும் பாதிக்க பட்டார் (?)
ஆமாம் .நான் கடைசி வகுப்பாக இருக்கும் அவர் கிளாஸ்க்கு அட்டென்ட் செய்வதே இல்லை .
இருக்கும் எல்லா ஜீன்ஸ் கட் சோர்ட் எல்ல்லாம் தோச்சி அயன் பண்ணி ஒரு நாளைக்கு பத்து தடவை முகம் கழுவி ...பேர் அண்ட் லவ்லி அப்பி ...நிறைய சூயிங்கம் சாப்பிட்டு ....
இவ்வளவும் அவள் தோழிகளுடன் அடிக்கும் அரட்டைக்கு இடையே விடும் சில லூக்குகளுக்காக ..
அவள் பாதத்தில் விழுந்து கிடக்க மனசு அடித்து கொள்ள இரவுகளில் அவள் என் வீட்டில் என் படுகையில் உட்பட கோட்டம் அடிபதாக கனவுகள் வர ....சிலிர்த்து போவேன் .
சமயத்தில் கனவுகளில் அவளை கட்டிபிடித்து சூடாவதும் ஒத்தை நரம்பாய் நான் படுக்கையில் நெளிந்து "அது" சூடாக வெளியாகி கப்பல் கவிழ்ந்தது போல அடுத்த நாள் சோகமாவது எல்லாம் வாடிக்கை ஆனது ..
சில மாதங்கள் ஓடின . அவள் காணவில்லை .
அவள் தோழிகளிடம் விசாரித்த போது அவள் அப்பா மாற்று பெற்றுவிட்டதால் அவளும் வேறு கல்லூரிக்கு பொய் விட்டதாக சொல்ல நொந்து நூடுல்ஸ் ஆனேன் .
மனசுக்குள்ளே காதல் வந்துச்சா ...வந்துச்சே வந்துச்சே என்று புலம்பி தவித்தேன் .
எங்கூரு பெருமாள் கோவிலில் சில நாள்கள் அங்கால பரமேஸ்வரி பிரகாரத்தில் சில நாள்கள் கண்ணீர் விட்டேன் .அங்கு தன யாரும் வர மாட்டார்கள் ..
இட்ஸ் கான் ..மனசில் இப்போ சொல்லும்போது கூட ஒரே கிரீன் ஷெட் .வொந்டெர்புல் கேர்ள் . ஒரு முறை அவளை முத்தமிட்டால் போதும் .நான் செத்து போக தயார் .
இப்படி எதையாவது ஏடாகூடமா போட்டா.. அப்புறம் எங்க இருந்து முதல் காதல சொல்றது?? சொல்ல வர்றவங்க.. ஜெர்க் ஆகி ஓடிரப் போறாங்கய்யா..!////////////அவர கலாய்க்கரதுக்குத்தான் அப்படி போட்டேன்.....................,சிக்க வச்சு வேடிக்க பாத்துராதிங்க மக்களே......
கூல் டவுன் பா .. ஒன்னு ஒப்புக்கணும் .. மக்களே என்கிற வார்த்தை கேட்டாலே ரோதீஸ் நினைப்பு தான் வருது ..சோ படேன்ட் வாங்காமலே அது உங்களுக்கு தான் சொந்தம் என்று பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறேன் மக்களே ..ச்சே!! ச்சே !! நானும் போட்டிக்கு வர பிடாது ..
அது என்னப்பா என் முதல் காதலை தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க?.... பாசக்கார பயலுக, விட்டுட்டு சாப்புடவே மாட்டானுக..... விஜய் பற்றித்தான் நான் முன்பே சொல்லிட்டேனே...... ஆனால், விஜய் க்கு முன்பு முத்துவை போலவே நான் சொல்லாமல் போன காதல் ஒன்று உண்டு.... நான் அப்போ பதினொன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்.... அந்த பொண்ணு பத்தாவது.... அவ பேறு பிரவீனா (இந்த பெயரே எனக்கு ரொம்ப காலத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது).... அவ வேற பள்ளி, நான் வேற பள்ளி.... என் வீட்டு பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு ஹிந்தி டியூசன் வருவா அவ.... பார்த்ததுமே மணி அடிச்சுச்சு, பல்ப் எரிஞ்சுச்சு.... தினமும் அவ டியூசன் வரும் நேரம் வெளியில் நின்னு பாப்பேன்..... கொஞ்ச நாள் கழிச்சு பார்வல், கொஞ்சம் சிரிப்பாக மாறுச்சு.... சொல்லவா வேணும் நமக்கு.... உடனே அந்த டியூசன் கதியா கிடந்தேன்.... ஹிந்தி படிக்க இல்ல.... அந்த ஹிந்தி மிஸ் புள்ளை கூட விளையாடுற சாக்குல அங்கேயே இருப்பேன்.... அதுக்கு முன்னாடி வரை அந்த மிஸ் புள்ளை எப்போ என் வீட்டுக்கு வந்தாலும் எதாவது டார்ச்சர் பண்ணி அழவைப்பேன்... இப்போ அப்டி பண்ணமுடியுமா?... அந்த குழந்தையோடு கொஞ்சி விளையாடுவேன்.... அப்படியே மெல்ல மெல்ல அந்த பொண்ணு கூட பேச ஆரமிச்சேன்.... அது என்னை என் ஸ்கூல் பெற சொல்லி கூப்பிடும், நானும் அந்த பொண்ணு ஸ்கூல் பேர் சொல்லி கூப்பிடுவேன்..... அதனால எங்க ரெண்டு பேருக்கும் பேரு பெரிய விஷயமா இல்ல..... ஒருவருஷமும் அப்படியே ஓடுச்சு.... காதலை அவளைத்தவிர வேற எல்லா நண்பர்களிடமும் சொன்னேன்..... அப்புறம் அந்த பொண்ணு டியூசன் விட்டு நின்னுடுச்சு.... என் இன்னொரு பெண் தோழி மூலமா என் காதலை அவகிட்ட சொல்ல சொன்னேன்.... அவ சொன்னதா சொன்னா.... பின்னாடிதான் தெரிஞ்சுது, அந்த பெண் தோழி பிரவீனா கிட்ட எதையும் சொல்லவே இல்லைன்னு.... என்ன பண்றது?... அப்படியே போச்சு.... அந்த பொண்ணோட தங்கை என் ஸ்கூல்ல படிக்கிறது அப்புறமா தெரிஞ்சுது..... இன்டர்வல் பீரியட்ல தினமும் அவளுக்கு சாக்லேட் கொடுப்பேன்..... நான் எதுக்கு கொடுக்குறேன்னு அவளுக்கு தெரியாது.... அவ கேக்கவும் இல்ல..... என்னைக்காவது யூஸ் ஆகும்னு கொடுத்த சாக்லேட் கடைசி வரைக்கும் ஒன்னும் நடக்கல.... அப்புறம் நான் அவளை பார்க்கவே இல்ல..... எல்லாம் ஒரு பசுமையான நினைவா இன்னும் இருக்கு..... பிரவீணா.... பிரவீனா.....
@ arasu . You are not correct. Autograph release anapo vera oru frd oda poneenga. I know very well. So ithu enna padam. Who is that girl
//படம் பேரு ஆட்டோ கிராப் .// தினமலர் பத்திரிகையில் வருவது போல ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற வரிய சேத்துக்க சொல்லுவோமா .
//அங்கால பரமேஸ்வரி பிரகாரத்தில் // உங்கள் ஊரில் பெருமாள் கோயில் ஏது என்றெல்லாம் மடக்க கூடாது . வேணும்னா பிள்ளையார் கோயில் வச்சிக்குவோம்
//Who is that girl // இதற்க்கு பதில் இவ்வளவும் அவள் தோழிகளுடன் அடிக்கும் அரட்டைக்கு இடையே விடும் சில லூக்குகளுக்காக என்கிற என் வரி தான் . நான் தான் பேசினதே இல்லைன்னு சொல்லுறேன். அப்புறம் பெற கேட்டா எப்படி
அய்யா .. இது ஒன்றும் வரலாறு அல்ல . கல்வெட்டு பதிப்புகள் எதுவும் இல்லை . எப்பவோ ஒரு பீல் வந்துச்சி . அதை மொட்டையா சொல்லுறது நல்லா இருக்காதுன்னு தான் கொஞ்சம் அப்படி இப்படி சொன்னேன். சரியா ..