இது முழுக்க முழுக்க ஜாலியான கற்பனைகளுக்கு உரிய இழை.... யாரும் தப்பா எடுத்துக்க மாட்டிங்கன்னு நம்பிக்கைல தொடங்குறேன்.... மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்க, மாற்றிடலாம்...
இங்கு உள்ள நம் நண்பர்களை வழக்கமான பெயர் வைத்து கூப்பிட்டு போர் அடிக்குது..... அதுவும் அர்த்தமே புரியாம "ரோத்திஸ்" பத்து கோடி மக்களுக்கும் பொதுவான பெயரான "தமிழன்" இப்டி எல்லோருக்கும் இருக்கும் பெயரை விட்டுட்டு, அவங்களுக்கு தோதான பெயரை சொல்லுங்க..... முத்துக்கு "நாகப்பாம்பு"னு பெயர் வைக்கலாம்.... வேற காரணங்களை நீங்கள் கற்பனை பண்ணினா நான் பொறுப்பில்லை..... பாம்பைவிட அதிக படங்களை எடுத்து, அவற்றை வினியோகஸ்தர்களே இல்லாமல் வெளியிட்ட முத்துவுக்கு இந்த பெயர் நல்லா இருக்கும்னு தோணுது......
தம்பி "sat"க்கு "குட்டி வலம்புரி ஜான்"ன்னு பெயர் வைக்கலாம்....
"வல்லாரை கீரையை வதக்கி, அதை மண்ணெண்ணெய் ஊற்றி கிளறி, மண்புழுவாய் மசித்து, கசாயமாக எடுத்து காயவைத்து காலில் தேய்த்தால், காலில் ஒட்டியிருக்கும் அழுக்கு காணாமல் போகும்" என்பது போன்ற அரிய தகவல்களை கொடுத்து, ஒரு குட்டி சேலம் வைத்தியர் ரேஞ்சுக்கு செய்வதால்....
அடுத்தடுத்த நபர்களுக்கு அப்புறம் சொல்றேன், நீங்களும் உங்களுக்கு தோன்றிய பெயர்களை சிபாரிசு செய்யுங்க.....
///பாம்பைவிட அதிக படங்களை எடுத்து, அவற்றை வினியோகஸ்தர்களே இல்லாமல் வெளியிட்ட முத்துவுக்கு இந்த பெயர் நல்லா இருக்கும்னு தோணுது......// கொஞ்சம் இடைவெளிக்கு பின் நம்ம எழுத்தாளர் செம ஜாலி மூடுல இருக்குறாங்கன்னு மட்டும் தெள்ள தெளிவா புரிஞ்சி போச்சி .. சிங்கை வேங்கை ன்னு வைக்கலாம் இந்திரன் சந்திரன் காப்புரிமை பெற்றவருக்கு!! வேற ஒரு வழி ..அதாவது எங்க லெக்சரர் ஒருவர் எப்போதும் வகுப்பில் பேசும்போது as well as we can say என்ற வார்த்தையை பயன்படுத்துவார் ..அதனால் அவர் பெயரே as well as we can say தான் .
அப்படி பார்த்தால் ரோதீஸ் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை . " பார்க்கலாம் " சோ அவருக்கு அதையே பெயராக வைக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாட்டிக்கொள்ள தயாராய் இல்லை .
அடுத்து இந்த தளத்திலும் முன்பு கடலை தளத்திலும் ரோதீசின் பதவி பெயர் கான்சிலடர் ..( யப்பா )
இதை பற்றி நம்ம ஆக்ஸ்போர்ட் சமாதானம் செய்பவர் என்று பொருள் தருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் சொல்வதால் அவருக்கு நவீன நாட்டாமை பட்டம் கொடுக்கலாம் ..
ரெண்டு மணிநேரம் ஆன்லைன் ல வரலேன்ன இவன் அக்கபோரு பெருசா இருக்கேன்னு ரோதீஸ் வந்து திட்ட போறார் ...எப்படி சம்ளிகிரேன்னு " பார்க்கலாம் "
தொடரட்டும் நம்ம பதினாறு ..வைபவம் ..அதுதாங்க பெயர்சூட்டுவிழா . அடுத்து தமிழன் ... அட்டகாசமா ஒரு முழு நிர்வாண சிறுவன் படத்தை போட்டுவிட்டு அதற்க்கு ஜாலியா " நல்ல தள்ளு " என்றோ " இரட்டை வாழைபழம் " ன்றோ " சிங்கம்ட நீ " என்றோ ஜகா வாங்கும் தமிழன் கூடவே எப் பீ யில் எடுத்தது என்று நழுவுவது சகஜமோ சகஜம் ...சோ நழுவல் பார்டி
இதற்க்கு அவுகளுக்கும் எனக்கும் நடந்த ஒரு சிறு செய்தி பரிமாற்றம் உதாரணம் .. '
நான் :" என் கணக்கை யாருங்க நீக்கியது ...தலைமை ஒருங்கிணைப்பாளர் அவங்களே .."
next option ...எங்க காலேட்ஜில் அதிகமா பிரிட்டிஷ் இங்க்லீஷ் பேசினால் அவுகளுக்கு பேரு பீட்டரு ...அமெரிக்கன் இங்கிலீஷ் கலட்டி விட்டால் அவுகளுக்கு பேரு ஆட்டோ மீட்டரு ... இவரு தமிழ் தமிழ் என்று உருகுவதால் ட்யூட்டரூ
//முத்துக்கு "நாகப்பாம்பு"னு பெயர் வைக்கலாம்.... வேற காரணங்களை நீங்கள் கற்பனை பண்ணினா நான் பொறுப்பில்லை..... பாம்பைவிட அதிக படங்களை எடுத்து, அவற்றை வினியோகஸ்தர்களே இல்லாமல் வெளியிட்ட முத்துவுக்கு இந்த பெயர் நல்லா இருக்கும்னு தோணுது......//
நிஜமா இது தான் காரணமா?
அடிக்கடி பாம்பு விஷம் கக்குற படங்கள வெளியிடறதுனாலயோ-ன்னு நினச்சிட்டேன்..
Rotheiss பெயர்க்காரணம் சொல்றேன்... கேட்டுக்குங்கப்பா.. இது ரோதீஸ் எல்லாம் இல்ல... ரோட் ஹைஸ் -- ரெட் ஹாட்னு அர்த்தம்... ”ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ்மகனின் பொன்னே சிலையே”ன்னு... ஒரு கட்டத்துல காதல்ல மூழ்கி இருந்தப்ப.. ஐ டி, பாஸ்வேர்ட்-னு எல்லாமே ஜெர்மன் மயமா இருந்தது.. காதல் தகையல... ஜெர்மன் மட்டும் இன்னி வரைக்கும் தகைஞ்சுடுச்சு...
பட்டம் சூட்டறதுல நம்ம ஆளுங்கள விஞ்ச முடியாதுய்யா.. நடத்துங்க.. நடத்துங்க..!!
Rotheiss பெயர்க்காரணம் சொல்றேன்... கேட்டுக்குங்கப்பா.. இது ரோதீஸ் எல்லாம் இல்ல... ரோட் ஹைஸ் -- ரெட் ஹாட்னு அர்த்தம்... ///எங்களுக்கு தெரியாதுங்கரதுக்காக என்ன வேணுன்னாலும் சொல்லுவிங்க
மறுபடியும் சொல்லிட்டேன்..... இங்க யாரும் யாரையும் தப்பா எடுத்துக்காதிங்க..... கலாய்ப்பது பிடிக்கலைனா சொல்லிடுங்கப்பா, அவர்களை விட்டுட்டு மற்றவர்களை டார்கட் பண்ணலாம்..... என்னை எந்த எல்லை வரை வேணாலும் கலாய்க்கலாம், அதே எல்லையை தாண்டி நானும் கலாய்ப்பேன் என்பதையும் சொல்லிடுறேன்.....
ரோதிஸ் அண்ணன் என்னமோ ஜெர்மன் பாடமல்லாம் கத்துக்கொடுக்குராறு...... விரைவில் அதற்கான உண்மையை கண்டுபிடிக்க "உண்மை அறியும் குழு" அமைத்திருக்கிறோம்.... அதற்கு தலைவராக "தமிழன்" செயல்படுவார்......
மேலும் தமிழனுக்கு பெயர் வைத்த முத்து ஒரு லாஜிக்கை மீறிவிட்டார்....
ஒரு தமிழன், பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் பேசினால் பீட்டர்.... தமிழன், அமெரிக்கன் ஆங்கிலத்தை பேசினால் ஆட்டோமீட்ட்ர் எல்லாம் சரிதான்..... இது ரெண்டும் லாஜிக்.... ஆனால், தமிழன் தமிழில் பேசுவது எப்படி இந்த எல்லைகளுக்குள் அடங்கும்.....
விதிமீறலில் ஈடுபட்ட "ஸ்னேக் பாபு" முத்துவுக்கு கடுமையான கண்டனத்தை சொல்லிக்கொள்கிறேன்.....
இதை "கவுன்சிலர்" அண்ணன் அவர்கள் சொல்ல சொன்னார் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்....
//"ஸ்னேக் பாபு" முத்துவுக்கு கடுமையான கண்டனத்தை சொல்லிக்கொள்கிறேன்.....
இதை "கவுன்சிலர்" அண்ணன் அவர்கள் சொல்ல சொன்னார் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்....// கலைகிறது ஒகே ஆனால் சாப்பிட ஒரு முட்டையும் ஒரு க்ளாஸ் பாலும் குடுத்து பட்டினி போட்டுடாதேங்க விஜய் .
சில அரசியல் சார்ந்த பத்திரிகைகளில் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி பெரும் ஊழல் வாதி என செய்தி வரும்
அடுத்த வாரம் வாசகர் கடித்ததில் யாராவது ஒரு வாசகர் " ஐயா அவருடைய சகலை எங்க ஊரில் இருக்கிறார் .அவரும் ஊழல் செய்வதில் சளைத்தவர் அல்ல " என்று இடுகை இட்டு காலரை தூக்கி விட்டு கொள்வது தமிழ் பண்பாடு
அப்படி தான் இருக்கு குட்டி உன் கமென்ட் .
ஆனாலும் நான் வாய தொறக்க மாட்டேன்பா ..நான் ற்றௌசெர் போடுறது இல்லைன்னு சொன்னால் அது அமெர்கன் ஆங்கிலம் ,பான்ட் என்பது பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்றல்லாம் நிறைய கரமார் கிளாஸ் எடுத்துடுவேன்னு தெரிஞ்சும் அதை பத்தி பேசுவனா என்ன
ஆனால் உன் குதிரை மாதிரி பிடரி முடி இன்னும் இருக்கா !!..
என்ன ஏறோப்லன் லேன்ட் ஆகுரப்போ எல்லா முடியும் மேல் நோக்கி பறந்து ஒரு கோபுரம் மாதிரி ஆகி சக பயணிகளை மிரட்டி இருக்குமே !
பிறகு கீழே இறங்குன பின்னே எல்லா முடியும் முக மூடி போல ஆகி கண்ணு மண்ணு தெரியாமல் திணறி இருப்பியே ..
//என்னை எந்த எல்லை வரை வேணாலும் கலாய்க்கலாம், அதே எல்லையை தாண்டி நானும் கலாய்ப்பேன் என்பதையும் சொல்லிடுறேன்.....// கிளிமாக்ஸ் உங்களுக்கு தான் விஜய் . அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோம்ன்னு நினைகிறீங்களா ..
சரி நான் முன்மொழிந்ததை, குட்டி வழிமொழிந்து விட்டார்.....
முத்துவுக்கு இன்று முதல் "ஸ்னேக் பாபு" முத்துனு பேர் வச்சிடலாம்..... மாற்றுக்கருத்து உள்ளவங்க இன்னைக்கே சொல்லிடுங்க.... மாற்றுக்கருத்து இல்லாத பட்சத்தில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும்.....
premium sero pencil fit ஜீன்ஸ் பொருந்துற மாதிரி இம்சை அரசன் பேரு தமிழன் அவர்களுக்கு பொருந்துது ... ஹா ஹா ... ஆனாலும் என் பேரில் பாதி அவருக்கு தந்துட்டியேலே ... அதாங்க அரசன் ...
என்னப்பா பட்டம் சூட்ட சொன்னா பட்டாபிஷேகமே பண்ணிடுவிங்க போல!!! வேண்டாம்! தமிழா இது ரொம்ப ரிஸ்க்கான பட்டம். இருந்தாலும் பிடித்திருக்கிறது, மிகவும் பிடித்திருக்கிறது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
என்னப்பா பட்டம் சூட்ட சொன்னா பட்டாபிஷேகமே பண்ணிடுவிங்க போல!!! வேண்டாம்! தமிழா இது ரொம்ப ரிஸ்க்கான பட்டம். இருந்தாலும் பிடித்திருக்கிறது, மிகவும் பிடித்திருக்கிறது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!