Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முற்பகல் செய்யின்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
RE: முற்பகல் செய்யின்
Permalink   
 


பாவம்ப்பா அம்மா .. உண்மையா சொன்னது குத்தமா ... வீட்டுல சோத்த உருட்டிகிட்டே ஏறவானத்தை பார்க்கிறது ..பேஸ்ட் வைக்காமல் பல் விளக்குறது .. தண்ணியே தொறக்காம சோப்பு போடுறது ... எல்லாம் தொடர்ந்து வரும் ..ஒன்னு வந்தா ... அருமை பா ...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
முற்பகல் செய்யின் - 10
Permalink   
 


ஓங்கோலில் கண்விழித்தேன்.. பசித்தது.. ப்ளாட்ஃபார்மில் வாழைப்பழம் மட்டுமே கிடைக்க.. பசியாறி.. பின் மீண்டும் மேலே ஏறினேன்.. இம்முறை தூக்கமில்லை.. 

இந்நேரம் மனோன்மணி தவித்துப் போவாள்.. முபாரக்கிடம் ஃபோன் மூலம் விசாரித்திருப்பாள்.. கண்ணீர் கன்னம் நனைத்தது.. 

“ஏண்டா கௌதம்.. உன்னால.. எவ்வளவு சித்ரவதை.. நல்லா தானடா இருந்த.. ஜேவலின் த்ரோ-ல நீ ஃபர்ஸ்ட் வந்தப்ப... டிபார்ட்மெண்ட் டிபார்ட்மெண்ட்டா அந்த கப்-அ காமிச்சனேடா.. ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தப்ப.. மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் ஹெச் ஓ டி.. வயித்தெரிச்சல்ல பேசினான்.. ஒரு லேப் அசிஸ்டெண்ட் பையன் இவ்வளவு மார்க் எடுத்தது ஆச்சர்யமா இருக்குன்னு.. அருமை பெருமையா தானடா வளத்தேன்... ஒருவேள.. நம்ம புள்ள நல்லா படிக்கறான்.. அவனுக்கு என்ன குறை-ன்னு.. மமதைல.. நான் தான் கொஞ்சம் கண்டுக்காம இருந்துட்டேனோ.. எப்படிடா உன்ன கோட்ட விட்டேன்..”

ஒரு கேள்விக்கும் விடை கிட்டவில்லை... குமுறலாய் இருந்தது..  

விஜயவாடாவில் வண்டி நின்றதும்.. கிளம்புவதற்கு இன்னும் இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்று அறிவிப்பு கேட்டேன்.. இறங்கி ப்ளாட்ஃபார்ம் பெஞ்சில் அமர்ந்தேன்.. 

நள்ளிரவைத் தாண்டிய அந்த நேரத்தில் யாரோ ஒரு பையனை ஆர் பி எஃப் லத்தியால் மிரட்டி மிரட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்.. அழுக்கான கந்தையில்.. பையன் ப்ளாட்ஃபார்ம் வாசி என்பதை சொல்லாமல் சொன்னான்.. கௌதம் வயது தானிருக்கும்.. பாவமாக இருந்தது..

“இந்தப் பையன மாதிரியெல்லாம் இல்லாம...  வீடு வாசல்.. போட்டுக்கத் துணி.. நேரத்துக்கு சாப்பாடு.. அதுலயும்.. இஷ்டப்பட்ட சாப்பாடு.. எல்லாமே தானா அமைஞ்சதால.. கஷ்டம் தெரியாம வளத்தது தான் தப்பாயிடுச்சோ.. முளைச்சி மூண இல விட்றதுக்குள்ள லவ்வு.. அதுவும் ஒரு பையனோட.. சே.. நினைக்கவே அருவருப்பா இருக்கு..”

இதை நினைத்த மாத்திரத்தில்... சரத் பாபு.. என் நினைவில் சம்மனில்லாமல் ஆஜரானான்.. 

இரண்டாம் செமஸ்டரின் துவங்கி சில நாட்களுக்குள்ளேயே... அவனிடம் நான் தேடிய வடிகாலினால்.. என்மேல் எனக்குண்டான வெறுப்பு.. அவன் மீது வசவாக உமிழச் செய்தது.. அதுவே பின் மூன்றாம் பருவநிலையின் போது.. கை நீட்டும் அளவுக்கு ஆனது... 

ஒருநாளும்.. என்னை எதிர்த்து எதுவும் சொல்ல மாட்டான்.. அவ்வப்போது அவனை நினைத்து அழுவேன்.. அழுகையின் முடிவில் அவனை எப்படியாவது அப்புறப்படுத்த நினைத்து.. அதை முயற்சித்து.. முடியாமல் பின்வாங்கி.. அவன் அண்மைக்காக ஏங்கி.. ஒரு கட்டத்தில் இது வாடிக்கையாகிப் போனது.. எனக்கல்ல.. அவனுக்கு.. !

ஒரு வார இறுதியில்.. நான் அன்று நல்ல மனநிலையில் இருந்ததால்.. என்னை வற்புறுத்தி அவனோடு ஆம்பூர் அழைத்துச் சென்றான்.. ஆம்பூர் தாண்டி அரங்கல்துருகத்தில் இருந்தது வீடு.. வீடு என்று சொல்லக்கூடாது.. கரூரில் இவ்வளவு பெரியதாக கல்யாண மண்டபத்தை தான் பாத்திருக்கிறேன்... அந்த சின்னஞ்சிறிய ஊரில்.. அவ்வளவு பெரிய வீடு அவன் குடும்பத்துக்கிருந்த செல்வாக்கை பறைசாற்றியது.. வசதிக்குக் குறைவில்லாத கூட்டுக்குடும்பம்.. இவனது அறையைப் பார்த்து பிரமித்துப் போனேன்.. கரூரில் எங்கள் மொத்த வீட்டையும் விட பெரிதாக இருந்தது.. என் மேலேயே எனக்கு வெறுப்பாக இருந்தது.. யாரோ அவனை அழைக்க.. என்னை அறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு.. வெளியே சென்றான்... கட்டிலில் சாய்ந்தவாறு யோசித்துக்கொண்டிருந்தேன்.. 

உள்ளே நுழைந்தவன்... “என்னடா.. ஒரு மாதிரி இருக்க.. உடம்பு சரியில்லையா..  இல்ல.. எங்க ஊர் பிடிக்கலையா..?” 

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா.... நான் நல்லா தானிருக்கேன்.. ஏன் சரத்.. இப்படி?”

“என்ன... எப்படி?”

“இல்லடா.. உன்ன இங்க தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க.. நீ ஏண்டா.. என்கிட்ட.. அப்படி.. சே... எனக்கே என்ன புடிக்கலடா..”

“எனக்கு உன்ன புடிச்சிருக்கு... நீ என்ன பண்ணாலும் உன்ன பிரியக்கூடாதுன்னு தோணுது...  அதனால எனக்கு எதுவும் பெருசாப்படலடா..”

மீண்டும் சென்னை திரும்பியதும்.. பழைய குருடி.. கதவைத் திறடி.. கதை தான்..!

அம்மாவின் வற்புறுத்தலால்.. அந்த வருட நோன்பிக்கு என்னோடு கரூர் வந்தான்... எனக்காக.. என் வீட்டு வறுமை ச(சு)கித்தான்.. 

ஆனாலும் அவன் என் மீது காட்டிய அளவுகடந்த பாசம் என் அறிவுக்கு எட்டவேயில்லை.. அவனை வடிகாலாக மட்டுமே பார்த்தேன்..!!

(தொடரும்)



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: முற்பகல் செய்யின்
Permalink   
 


//“எனக்கு உன்ன புடிச்சிருக்கு... நீ என்ன பண்ணாலும் உன்ன பிரியக்கூடாதுன்னு தோணுது... அதனால எனக்கு எதுவும் பெருசாப்படலடா..”//


அடிக்கிறானே அடிக்கிறானே,இப்படிப்பட்ட நல்லவன அடிக்கிறானே........






__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஹ்ம்ம்.... அழகான பயணம்...... தெளிவான கதையோட்டம்..... இந்த காதலே இப்படித்தானே..... ஆனால், சின்ன சின்ன அவமானங்கள் கூட காதலில் மட்டும் ஒரு தனி சந்தோஷத்தை கொடுக்கும்..... எவ்வளவு பெரிய பிடிவாதக்காரனா இருந்தாலும், காதல்னு வந்துட்டா அடங்கித்தான் போகணும்..... சரத் எவ்வளவு காலம் இதை ரசிக்குரான்னு பார்க்கலாம்.....


அடிக்கடி கேப் விடாம எழுதுங்க கதாசிரியரே.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

இல்லடா.. உன்ன இங்க தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க.. நீ ஏண்டா.. என்கிட்ட.. அப்படி.

“எனக்கு உன்ன புடிச்சிருக்கு... நீ என்ன பண்ணாலும் உன்ன பிரியக்கூடாதுன்னு தோணுது..

கண்ணை மூடி மனசில் வாங்கி ரசிக்கிறேன் .வேற சொல்ல முடியாது .

கே லவ் அநேகமாய்  Stereo டைப் ஆ தான் இருக்குமோ




__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

 “காபி.. காபி.. காபி.. சாய்.. காபி.. காபி.. காபி..” சுப்ரபாதமாய் செவியை நிறைத்தது..

கோழித் தூக்கம் துறந்து கண் விழித்தேன்.. அந்த கம்பார்ட்மெண்ட் அரைவாசி காலியாக இருந்தது.. மேலடுக்கில் இன்னும் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை.. தங்கள் குறட்டைகளால் ஊர்ஜிதம் செய்தார்கள்.. 

கீழே இறங்கி.. முகங்கழுவி.. வாசல் வந்து எட்டிப் பார்த்தேன்.. நிடதவோலு ஜங்ஷன்!

காபி வாங்கினேன்.. வண்டி நகர.. மீதி சில்லறையை.. மெல்லோட்டமாக ஓடி கொடுத்தான் அந்த நாணயமான வியாபாரி.

உள்ளே செல்ல பிடிக்காமல் வாசலிலேயே நின்று கொண்டேன்.. காலைத் தென்றல் சற்று முரட்டுத்தனமாகவே முகத்திலறைந்து கேசம் கலைத்தது.. கொவ்வூர் தாண்டியதும்.. அகண்ட கோதாவரி இனிதாய் வரவேற்றது.. பாலம் கடந்த போது ஏற்பட்ட டம டமா சத்தம்.. காதில் மெல்லிய இரைச்சலை ஏற்படுத்திய காற்று.. எனை மறந்து கோதாவரியில் மனம் லயிக்க.. யாரோ முதுகு தட்டுவது போலிருக்க.. திடுக்கிட்டுத் திரும்பினேன்.. 

“ஹை பாவா.. பாக உண்ணாரா” கிண்டல் தொனிக்கும் பார்வையுடன் ஒரு அரவாணி நலம் விசாரித்தாள்.. தண்டுவடம் சிலிர்த்தது.. சிறு வயது முதலே காரணமின்றி.. பயப்படும் விஷயம்.. கையை விநோதமாய் தட்டி காசு கேட்டாள்.. அவள் கரவொலி கலவரப்படுத்தியது.. 

பேக்கில் காசிருக்கிறது.. எடுத்துதான் தரவேண்டும் என நான் சைகை செய்ய.. அவள் வழிவிட்டு என்னை பின்தொடர்ந்தாள்.. வேலட்டில் முன்னே நீட்டிக் கொண்டிருந்த பத்து ரூபாயை எடுத்து.. அதைக் கொடுக்க மனதில்லாமல்.. சில்லறையைத் தேட.. அவள் வெடுக்கென்று அந்த ரூபாய்த் தாளை உரிமையாய் பிடுங்கிக் கொண்டாள்.. நன்றி சொல்லி நகர முற்பட்டவள்.. நின்று.. திரும்பி.. என் பாதம் தொட்டு கண்ணில் ஒற்றி.. ஏதோ சொல்லி.. சடுதியாய் மறைந்து போனாள்..

நடப்பதொன்றும் புரியாமல் நான் குழம்ப, எதிர் சீட் நரை மண்டை.. “உங்கள பாத்தா.. அதுக்கு அவங்க அப்பா முக ஜாடை தெரியுதுன்னு சொல்லுது.. பாவம்.. என்ன சூழ்நிலைல வீட்ட விட்டு வந்துச்சோ.. இப்படி பிச்சை எடுத்துப் பொழைக்குது..”

நெஞ்சை அடைப்பது போல் உணர்ந்தேன்.. கௌதம் ஞாபகம் வந்தது.. “ஒருவேள அவனும்.. இது மாதிரி... அதனால தான் ஒரு பையன விரும்புறானோ..?.. கடவுளே.. இப்பவே என் மூச்ச நிறுத்திடு.. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு புள்ள... அவனும்.. இப்படி ஒரு... ஐயோ.. நினச்சிக் கூட பாக்க முடியலையே.. கருப்பண்ணா.. ஏன் சோதிக்கற..?” 

“சார்.. சார்.. என்னாச்சு சார்.. கண்ணத் தொடைங்க சார்... அந்த பொண்ணே கூட இப்படி ஃபீல் பண்ணல... நீங்க என்ன சார்... இதுக்கு போய் இப்படி ஃபீல் பண்ணிகிட்டு... இந்தாங்க இந்த தண்ணியக் குடிங்க...” 

அண்ணாந்து பிஸ்லெரியை வாயில் கவிழ்த்தேன்.. ஆசுவாசப்படுத்தி.. கர்சீஃபால் கன்னம் துடைத்தேன்.. மனதில் வெறுமை உணர்ந்தேன்..

“எங்க போறீங்க சார்..?”

“காக்கிநாடா..”

“அடடே.. நானும் தான்.. இளைய பொண்ணு வீட்டுக்கு... மாப்பிள்ளைக்கு அங்க தான் வேலை...”

நான் பதிலேதும் சொல்லாமல் அவர் முகம் பார்த்தேன்.. 

 “சொந்த ஊர்.. நத்தமலை.. காட்டுமன்னார்கோவில் பக்கம்.. கடலூர் ஜில்லா.. வந்ததுண்டா கடலூர் பக்கம்?”

இல்லை என்பதாய் தலையசைத்தேன்..

“பரம்பர பரம்பரயா வெத்தலக் கொடிக்கா தான் பொழப்பு.. சம்சாரம் தவறுனதுல இருந்து.. ஊர் வாசம் வெறுத்துப் போச்சு.. இப்படி சென்னைக்கும் காக்கிநாடாவுக்குமா அல்லாட்றேன்.. பெரிய பொண்ணு சென்னைல இருக்கு...”

துணை இழந்த சோகம் அப்பட்டமாய் தெரிந்தது.. என் கவலை மறந்து அவரை ஆதூரமாய்ப் பார்த்தேன்.. உணர்ச்சிகள் எவ்வளவு எளிதாய் தொற்றிக் கொள்கின்றன!

 “பொண்ண கட்டிக் கொடுத்த வீட்ல கைநனைக்கறான்னு என்னை என் ஒரமொறையெல்லாம் கேவலமா பேசுது.. அதுக்கு பயந்தும் ஊருக்குப் போறதில்ல... நிலம் நீச்சு எல்லாத்தயும்.. பங்காளிகளுக்குள்ள ஃபைசல் பண்ணிட்டு.. வந்த பணத்த ஆளுக்குப் பாதியா பொண்ணுங்களுக்கு கொடுத்துட்டு அதுங்க வீட்லயே காலந்தள்றேன்.. என்ன பண்றது.. மூச்சடங்கற வரைக்கும் வயித்துக்குப் போட வேண்டி இருக்கே..” சொன்னவர்.. ஜன்னல் தாண்டி வெளியே வெறித்துப்பார்த்தார்..

பாவம்.. ஒரு மூன்றாவது மனுஷனிடம் கூட தன் சோகத்தைப்  பட்டியலிடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. 

ஜன்னலுக்கு வெளியே.. குடியிருப்புப் பகுதிகள் கொஞ்சமாக.. பின் நெருக்கமாகத் தோன்றி.. ஒரு பெரிய ஊரின் இருப்பை உறுதி செய்தது.. 

நான் என்ன ஊர் என்று பார்க்கும் ஆவலில்.. வெளியே.. எட்டி அங்குமிங்குமாக.. பார்த்து.. பெயர்ப்பலகையில் ஊர் பெயர் வாசிக்க முயன்றேன்.. வண்டியின் வேகத்தில் பெயர்கள் சடுதியாய் மறைந்தன...

பெரியவர்.. “என்ன ஊர்னு பாக்கறீங்களா.. கோதாவரி தாண்டியாச்சுல்ல... அப்படினா இது ராஜமுந்திரி தான்.. வண்டி நிக்கும் இங்க”

(தொடரும்)



-- Edited by Rotheiss on Tuesday 11th of December 2012 09:43:38 PM

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
முற்பகல் செய்யின் - 12
Permalink   
 


மூன்றாமாண்டு முடியும் தறுவாயில்.. மேற்கொண்டு அப்ரெண்டிஸ்ஷிப் பண்ண அவனே ஏற்பாடு செய்தான்.. எல்லா இடங்களிலும்.. எல்லா மட்டங்களிலும்... அவனது குடும்பத்தாருக்கு செல்வாக்கிருந்தது.. தரமணியில் பதிவு செய்து.. நினைத்தபடியே.. இணைப்பு பெட்டித் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி சேர்ந்தோம்.. பெரம்பூருக்கு அருகிலேயே.. அயனாவரத்தில் அவன் மாமாவின் வீட்டு மாடியறையில் தங்குமிடம்.. உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்! ஏதோ ஒரு மத்திய கிழக்கு வேலை விளம்பரம் போல.. அவ்வப்போது இரவுகளில் ஆட்டம் போடும் என் ஆண்மைக்குத் தீனிபோட்டு அணைத்துக்கொள்ள அவனது அண்மை.. அவ்வளவு சுகவாசியாய்.. அந்த வருடம் முழுவதும் பொழுதைக் கழித்தேன்..!

இவ்வளவும் அவனால்... நெல்லுக்கு இரைத்த நீர்.. அவனோடு ஒட்டுண்ணியாய் இருந்த காரணத்தால்... இந்த புல்லுக்கும் பாய்ந்தது.. இன்னும் சொல்லப் போனால்.. அபரிதமாகப் பாய்ந்தது.. புல்லும் புஷ்டியாய் வளர்ந்தது.. 

புது சினேகமாய்.. அவனது மாமா பையன்.. முத்தியால்ராஜ்..! எங்களை விட இரண்டு வயதே இளையவன்.. பிஞ்சிலே பழுத்து வெம்பிய அக்மார்க் சென்னைவாசி.. முத்தியாலோடு நான் பேசினாலே.. சரத்தின் முகம் வேறுபடும்.. இதை நான் உணர்ந்திருந்தாலும்.. பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.. 

ஒரு நாள் மொட்டைமாடியில்.. நானும் முத்தியாலும்..! திருட்டு தம்மைக்கூட   எந்த விதமான.. அவசரமோ.. குற்ற உணர்வோ இல்லாமல்.. வெகு நிதானமாய்.. உள்ளிழுத்து.. நேர்த்தியாய்... வட்ட வட்டமாய்.. புகையை வெளியேற்றினான்.. அதை ஏதோ... கயிற்றில் நடக்கும் வித்தையை ரசிப்பது போல் ரசித்துக் கொண்டிருந்தேன்.. என் பார்வையின் தீவிரம் உணர்ந்திருப்பான் போலும்..

“ட்ரை பண்றியாடா?”

அரை மனதோடு ஆமோதித்தேன்.. 

"முதல்ல.. பேர்ல இருந்து ஆரம்பிக்கலாம்.. எங்க.. சொல்லு பாக்கலாம்.. கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்...”

சொன்னேன்..

“குட்.. தமிழ்-ல சொல்றதா இருந்தா.. தங்கராஜா.. புகையிலைச்சுருட்டி.. இது அவசியமில்லை.. சும்மா.. நாலெட்ஜ் கோசரம்.. சரியா.. “ கண்ணடித்து சிரித்தான்..

அதன் அளவீடுகள்.. வடிகட்டியின் அளவீடு.. நிக்கோட்டின் அளவு.. தயாரிப்பாளர் பெயர் எல்லாம் சொன்னான்.. சுட்டி மாணவனைப் போல் கவனமாகக் குறித்துக் கொண்டேன்.. 

“ம்ம்.. உதட்டால ஹோல்ட் பண்ணிக்கனும்.. சரியா.. லாலிபாப் மாதிரி சப்பி.. எச்சில் பண்ணிடாத.. ஒண்ணே ஒண்ணு தான் கைவசம் இருக்கு.. இது தான் எனக்கும்..ம்ம்ம்.. அதே மாதிரி... எடுத்த உடனே.. வட்டமா எல்லாம் விட முடியாது.. மெல்ல.. உள்ள இழுக்காம.. வாய்ல வச்சி இழுத்து.. அப்படியே.. வெளிய விட்று..”

செய்தேன்.. 

“வெரி குட்.. யூ காட் இட் மேன்.. இப்போ என்ன பண்ற.. மெல்ல உள்ள இழு.. லேசா செருமலா இருக்கும்.. பயந்துக்காத..”

பாராட்டு கேட்ட சந்தோஷத்தில்.. சற்று வேகமாகவே.. உள்ளே இழுக்க... தாங்க முடியாத இருமல்... 

“கூல் டவுன்.. கூல் டவுன்..” பதறினான்..

ஒன்றும் கூலாகவில்லை... என் இருமல்.. தூங்கிக் கொண்டிருந்த சரத்தைத் தட்டி எழுப்பி.. மாடிக்கு கூட்டி வந்தது.. 

வந்தவன்.. நிலைமையைப் புரிந்து கொண்டு.. பளார்.. என்று முத்தியாலுக்கு ஒரு அறை விட்டு .. தெலுங்கில் ஏதோ கத்த.. அவன் கீழே ஓடிப்போனான்.. 

நான் அதுவரை பார்த்திராத புது சரத்.. பயத்தில்.. இருமல் மட்டுப்பட்டு.. நடுங்க ஆரம்பித்திருந்தது... பாதி எரிந்திருந்த சிகரெட்டைக் கையில் எடுத்தான்.. 

“இனி.. இந்த சனியன.. உன் கையால தொடுவ..?” என் முகத்துக்கு நேரே கையைக் கொண்டு வந்தவன்.. சட்டென.. அவன் கழுத்தில் வைத்து பொசுக்கினான்.. வெலவெலத்துப் போனேன்.. 

“பைத்திக்காரனாடா நீ..” கையைப் பற்றி.. இழுத்து.. ரூமில் வந்து.. மருந்து தடவினேன்.. முதன்முறையாக.. அவனுக்கு நான் செய்த பணிவிடை.. 

வட்டமாக கழுத்தில் பதிந்திருந்தது.. 

“என்ன மனுஷண்டா நீ.. இப்படியா.. சுட்டுப்ப.. பார்.. எப்படி பொத்துடுச்சுன்னு..” 

அவன் எதுவும் பேசவில்லை.. வலி பொறுக்கிறான் என்பது மட்டும் அவன் கன்னம் நனைத்த கண்ணீரால் தெரிந்தது.. 

அந்த இரவு தூக்கமில்லை.. அவனது அதீத அன்பு என்னை சங்கடப்படுத்தியது.. எப்படியாவது பிரிய வேண்டும்.. அது தான் இருவருக்குமே நல்லது என்று நம்பினேன்.. 

அப்படி நினைத்தது.. அத்தனை எளிதாக.. அந்த தொழிற்பயிற்சி வருட முடிவில்.. கிட்டியது.. 

அது.. எனது லேப் அசிஸ்டெண்ட் வேலைக்கான அரசாணை!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
முற்பகல் செய்யின் - 13
Permalink   
 


 

ராஜமுந்திரியில்.. பெரியவர் பிஸ்கெட் பாக்கெட் இரண்டு வாங்கினார்.. 

“பேரபிள்ளைக்கு.." சிரித்தார்.. “போனதும்.. கைய தான் பாப்பான்.. வெறுங்கையோடவா போறது.. அதான்..”

எனக்குமே அப்போது தான் உரைத்தது.. “என்ன புடிக்கும் அவனுக்கு..?” யோசித்தேன்.. 

படிக்கும் வயதில் இதே கேள்விக்கான பதில் நானாக இருந்திருப்பேன்.. 

சிரித்தபடியே.. நானும் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றும்.. சிப்ஸ் பாக்கெட் ஒன்றும் வாங்கினேன்..

என் முகமலர்ச்சி பார்த்தவர்.. சந்தோஷமாய் பேச ஆரம்பித்தார்.. 

 “ஆமா.. காக்கிநாடால.. எங்கன்னு சொல்லவேயில்லயே..”

“நாகர்ஜுனா ஃபெர்டிலைசர்ஸ்..”

“அட.. மாப்பிள்ளையும் ஃபெர்டிலைசர்ஸ்-ல தான் வேலை செய்றாரு... ஆனா.. கோதாவரி ஃபெர்டிலைசர்ஸ்ல.. ஒண்ணு பண்ணலாம்.. நீங்களும் நம்மளோடவே.. இறங்கிடுங்க.. “

“எதுக்குங்க சிரமம்... நானே பாத்துக்கறேன்..”

“ஒரு சிரம்மும் இல்ல.. உங்க இடம் தாண்டி தான் நாங்க போகணும்.. இன்னும் ஒன்னர மணி நேரத்துல போர்ட் ஸ்டேஷன் வந்துடும்..”

காக்கிநாடா டவுண் ஜங்ஷன் வந்ததுமே.. பெட்டி படுக்கையை எடுத்து தயாரானார்.. நானும் அவரை பின்பற்றினேன்.. 

“என்ன இது.. ஒரே ஒரு பேக் தானா..?” 

அவஸ்தையாய்.. “ஆமாங்க.. திடீர் பிரயாணம்.. அதான்.. இப்படி”

அடுத்து .. போர்ட் ஸ்டேஷனில் வண்டி தன் பயணத்தை முடித்ததும்.. இறங்கினேன்.. அக்கறையாய்.. என்னையும் அழைத்துக்கொண்டு வாசல் நோக்கி நடந்தார்.. 

 “மாமா.. ” பின்னாலிருந்து குரல் கேட்டுத் திரும்பினோம்.. “நான் உங்கள.. பின்னால தேடிகிட்டிருந்தேன்.. இறங்கினதும்.. கூப்பிட்டிருக்கலாமே..”

“பரிச்சயமான இடம் தானேன்னு  நடக்க ஆரம்பிச்சிட்டோம்..” என் பக்கமாக திரும்பி..”இவர் தான் சின்ன மருமகன்.. சொன்னேனே.. கோதாவரி ஃபெர்டிலைசர்ஸ்..”

முகமன் கூறினேன்..

“சார்.. யார்னு..”

 “வண்டில தான் பாத்தோம்.. சார் நாகர்ஜுனா போறாராம்.. அதான்.. போற வழி தானேன்னு.. நம்மளோடவே வர சொன்னேன்..”

“அதுக்கென்ன.. தாராளமா வாங்க.. சார்”

கம்பெனி வண்டி போலும்.. என்னை இறக்கிவிட்டு.. “அவசியம் வீட்டுக்கு வரணும்.. இது என் கார்ட்” 

வாங்கி.. கைகூப்பி.. மெயின் கேட் நோக்கி நடந்தேன்.. கேட் பாஸ் பெற்றுக்கொண்டு.. ரிசப்ஷன் அடைந்தேன்.. 

 “எஸ் சார்..”

“ஐ அம் லுக்கிங் ஃபார்.. ஒன் மிஸ்டர்.. சரத் பாபு”

“சார்.. தேர் ஆர் நியர்லி.. ட்வெண்டி சரத் பாபுஸ் வொர்க்கிங்க் ஹியர்.. சரத் பாபு கொண்டூரி.. யலமஞ்சிலி சரத் பாபு.. அக்கினேனி.. கோனேரி.. தடிமலா.. சோ.. ஹூ ஆர் யூ லுக்கிங் ஃபார்..”

நினைவுபடுத்தி.. “பசபதாலா சரத் பாபு.. ஃப்ரம் ஆம்பூர் தமிழ்நாடு.. “

“ஓ.. எனி அப்பாய்ன்மெண்ட்”

இல்லை என்றேன்.. 

எரிச்சலாய்ப் பார்த்தாள்.. “வாட் இஸ் தட் ரிகார்டிங்?”

தர்ம சங்கடமாக உணர்ந்தேன்.. என்னவென்று சொல்வது.. 

அவளே தொடர்ந்தாள்.. “சார்.. யுவர் நேம் ப்ளீஸ்..” சொன்னேன்.. “லெட் மீ இன்பார்ம் ஹிஸ் பி ஏ ஃபர்ஸ்ட்.. அம் நாட் ஷுயர்.. இஃப் யூ கேன் சீ ஹிம் டுடே.. எனிவே.. யூ டேக் யுவர் சீட் ஃபர்ஸ்ட்..”

நன்றி கூறி.. லாபியில் அமர்ந்தேன்.. ”அப்பாய்மெண்ட் இல்லாம பாக்க முடியாதபடியான நிலைல இருக்கறான்.. பழைய கோபத்தை மனசுல வச்சி.. பார்க்காமலேயே திரும்பி போக சொல்லிடுவானோ??.. இனி மூஞ்சிலயே முழிக்காதடான்னுல்ல சொல்லியிருந்தேன்.. சே.. நானெல்லாம் ஒரு மனுஷன்..”

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
RE: முற்பகல் செய்யின்
Permalink   
 


என்னப்பா இது .. நம்ம வாழ்கையே கஷ்டமா தான் இருக்கு .. கதைகள்  தான் வடிகால் என்று நினைத்தால்  வாழ்க்கையுடன் நெருங்கி  சில நெருடலான விஷயங்களை  பதிவில் கொண்டு வந்து இருக்கீங்க.. 

சோகத்தில் ஒரு சுகம் இருக்கும் என்பது உண்மை தான் ..

சின்ன பசங்க லேசா ஊசி எடுத்து  மெதுவா உடம்பில் குத்தி பார்த்து வலிக்குது என்று சொல்லி ரசிப்பானுகளே ..அப்படி  ஒரு சுகம் ...

 அந்த  அரவாணி  பிச்சை கேட்க்கும்  இடம் .. இவர் கண்கலங்கி நிற்கும் இடம் எல்லாம்  ஸ்பீட் ப்ரேக் போட்டு  கண்ணை மூடி சிந்திக்க வைக்குது ..

தேங்க்ஸ் டியர் ... ஒரு அரை மணி நேரம் என்னை வேறு உலகிற்கு அழைத்து சென்று வந்ததற்கு ...

ஆனாலும் பயமா இருக்கு  ரோதீஸ்.. சீக்கிரம் எழுதுங்க..



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

பிரிந்த ஆடுகள் இப்போ ஒண்ணுக்கொண்ணு பார்த்துக்க போகுது, என்ன பேசுராங்கன்னு பார்க்கலாம்...... உணர்வுகளை எல்லாம் படமாவே காட்டிட்டிங்க..... கடலூர்'காரரும் நல்ல மனுஷனா இருக்கார், அவருக்கும் கதையில ஒரு டுவிஸ்ட் கொடுங்க....... கலக்கல் அண்ணாச்சி....



/////“ம்ம்.. உதட்டால ஹோல்ட் பண்ணிக்கனும்.. சரியா.. லாலிபாப் மாதிரி சப்பி.. எச்சில் பண்ணிடாத.. ஒண்ணே ஒண்ணு தான் கைவசம் இருக்கு.. இது தான் எனக்கும்..ம்ம்ம்.. அதே மாதிரி... எடுத்த உடனே.. வட்டமா எல்லாம் விட முடியாது.. மெல்ல.. உள்ள இழுக்காம.. வாய்ல வச்சி இழுத்து.. அப்படியே.. வெளிய விட்று..”////
இவ்வளவு மோசமா இரட்டை அர்த்த வசனங்கள் எழுதுறீங்களே???.... கண்ட்ரோல் பண்ணிக்கோங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

msvijay wrote:


/////“ம்ம்.. உதட்டால ஹோல்ட் பண்ணிக்கனும்.. சரியா.. லாலிபாப் மாதிரி சப்பி.. எச்சில் பண்ணிடாத.. ஒண்ணே ஒண்ணு தான் கைவசம் இருக்கு.. இது தான் எனக்கும்..ம்ம்ம்.. அதே மாதிரி... எடுத்த உடனே.. வட்டமா எல்லாம் விட முடியாது.. மெல்ல.. உள்ள இழுக்காம.. வாய்ல வச்சி இழுத்து.. அப்படியே.. வெளிய விட்று..”////
இவ்வளவு மோசமா இரட்டை அர்த்த வசனங்கள் எழுதுறீங்களே???.... கண்ட்ரோல் பண்ணிக்கோங்க....


 அடப்பாவி மனுஷா.. இதெல்லாம் ஓவர்யா.... நான் அப்படி சொல்லவேயில்ல... விஜயின் திருவிளையாடல் ஆரம்பமா??????????????



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

இது நல்லால்ல பார்த்துக்கோங்க.... நீங்க சொன்ன விஷயத்தைதான் நான் மேற்கோள் காட்டிருக்கேன்...... வாயை திறந்தால் "வெண்ணிற ஆடை மூர்த்தி" மாதிரி இரட்டை அர்த்த வசனமா பேசிட்டு, கடைசில "நான் அப்டி சொல்லவே இல்ல"னு சொல்வீங்க...... இதற்கெல்லாம் அசரமாட்டான் இந்த பழனிச்சாமி, தலைகீழாகத்தான் குதிப்பேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தெரிஞ்சு எழுதுனிங்களோ,தெரியாம எழுதுனீங்களோ..........இந்த வரிகளுக்கு உலகத்தோட மிக உயரிய விருதே கொடுக்கலாம்

/////“ம்ம்.. உதட்டால ஹோல்ட் பண்ணிக்கனும்.. சரியா.. லாலிபாப் மாதிரி சப்பி.. எச்சில் பண்ணிடாத.. ஒண்ணே ஒண்ணு தான் கைவசம் இருக்கு.. இது தான் எனக்கும்..ம்ம்ம்.. அதே மாதிரி... எடுத்த உடனே.. வட்டமா எல்லாம் விட முடியாது.. மெல்ல.. உள்ள இழுக்காம.. வாய்ல வச்சி இழுத்து.. அப்படியே.. வெளிய விட்று..”////

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

இன்னிக்கு எல்லாருக்கும் என்ன ஆச்சு... ஊர்ல குளிர் ஜாஸ்தியோ..??

ராத்திரியாயிடுச்சுன்னா... மூட் தலைக்கேறி.. நன்னெறி கதை கூட செக்ஸ் கதையாயிடுதா??????????????????

அதுலயும்... எழுத்தாளர்.. ஓவர் ரவுசு!!!!!!!!!!!!!!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா?... ல்லையா?.... லையா?.... யா?...

இவரே ரெண்டு அர்த்தத்துல ஒரு கருத்தை சொல்லிட்டு, அதை நாங்க திருப்பி சொன்னதுக்கு "என் கைய புடிச்சு இழுத்துட்டான்" கணக்கா எங்க மேல குறை சொல்றாரே.....
பஞ்சாயத்த கூட்ட வச்சிடாதிங்க அண்ணாச்சி......

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

கண்டமனூர் ஜமீன் கண்டம் பண்ணின மாதிரி.. எதுக்கு இத்தன கூப்பாடு.. இத்தன எக்கோ எஃபெக்ட்..????

இன்னிக்கு நான் தூங்கின மாதிரி தான்.. தனியா உக்காந்து சிரிச்சிகிட்டிருக்கேன்யா..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

msvijay wrote:

இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா?... ல்லையா?.... லையா?.... யா?...

இவரே ரெண்டு அர்த்தத்துல ஒரு கருத்தை சொல்லிட்டு, அதை நாங்க திருப்பி சொன்னதுக்கு "என் கைய புடிச்சு இழுத்துட்டான்" கணக்கா எங்க மேல குறை சொல்றாரே.....
பஞ்சாயத்த கூட்ட வச்சிடாதிங்க அண்ணாச்சி......


  அட பாவி மக்கா .. அர்த்த ராத்திரியில்  இப்படி தனியா சிரிக்க வைகிரீங்கலே ...  ஏற்கனவே கொஞ்சம்  சந்தேக படுறாங்க .. இப்போ உறுதி பண்ணி காலையில் மனநல மருத்துவர் கிட்டே  அழைச்சிட்டு போக போறாங்க ...



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இதோ வந்துட்டேன்..................,அண்ணா நீங்களே நாட்டாமையா இருந்துட்டு இப்படி பண்ணலாமா........

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஊருக்கு ஒரு பஞ்சாயத்துன்னா நாட்டாமை தீத்து வைப்பாரு.... அந்த நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்துன்னா.........

அடிவாங்கிய சொம்பு, ஆலமரம், பவானி ஜமுக்காளம் இதை தயார் பண்ணி வைங்கப்பா, பஞ்சாயத்த கூட்டி பைசல் பண்ணிடுவோம்.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

உங்க தீர்ப்பு என்னன்னு எனக்குத் தெரிஞ்சி போச்சு..

மைனர் *ஞ்ச சுட்டுட்டேன்.. தான????????????

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

Rotheiss wrote:

உங்க தீர்ப்பு என்னன்னு எனக்குத் தெரிஞ்சி போச்சு..

மைனர் *ஞ்ச சுட்டுட்டேன்.. தான????????????


 அதல்லாம் அந்த காலத்து தீர்ப்பு.....

இப்போவல்லாம் ஒரே வெட்டு, ரெண்டு துண்டாகிடும்......

 

 

 

 

 

 

 

நாக்கு......



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

//அதல்லாம் அந்த காலத்து தீர்ப்பு.....

இப்போவல்லாம் ஒரே வெட்டு, ரெண்டு துண்டாகிடும்......















நாக்கு......//

எதுக்கு இவ்வளவு பெரிய கேப் இதுல...

இப்ப புரியுதா வெ.ஆ.மூர்த்தி யாருன்னு..????


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

///Rotheiss wrote:

உங்க தீர்ப்பு என்னன்னு எனக்குத் தெரிஞ்சி போச்சு..

மைனர் *ஞ்ச சுட்டுட்டேன்.. தான????????????

msvijay wrote:

அதல்லாம் அந்த காலத்து தீர்ப்பு.....

இப்போவல்லாம் ஒரே வெட்டு, ரெண்டு துண்டாகிடும்......///////



டபுள் மீனிங் மேளா

__________________



புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

So nice story and very intresting replys

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: �2�4�2�3�2�7�2�5�2�0�2�9�2�8�2�5 �2�4�2�8�2�5�2�5�2�5�2�1�2�9�2�5
Permalink   
 


Sarath babu va kongu naatu karan meet panna poran . . . . . . Thiku thikunu irukku

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
RE: முற்பகல் செய்யின்
Permalink   
 


கதை அருமை .ஆவலுடன் அடுத்த பதிப்பை எதிர் பார்கிறேன்

__________________

praveen



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


images?q=tbn:ANd9GcTlKIckP9qZBlQrvMvYVFNjmYEwff-3fHaF_ZOpoSHVweTwVTwjvg



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
முற்பகல் செய்யின் - 14
Permalink   
 


 

ஐந்து நிமிடமேனும் கடந்திருக்கும்.. 

“மிஸ்டர்.. நா.. வா.. லடியான்..” என்னை நோக்கி கை நீட்டியபடியே வந்தான் அந்த இளைஞன்..

“எஸ்..” கை குலுக்கினேன்

“நம்ம கூட வாங்க..” ...தொடர்ந்தேன்.. 

“சரத் சார் கிட்ட சொன்னேன்.. நீங்க வந்திருக்குன்னு.. சார்.. இப்போ.. ப்ளாண்ட்ல இர்க்காரு.. த்ரீ டேஸ் முன்னால ஒரு மேசிவ் கெமிக்கல் ஸ்பில்லேஜ்.. லக்கிலி.. நோ கேஷுவாலிட்டிஸ்.. சார் இன்னிக்கு ஃபைனல் அசெஸ்மெண்ட் எடுக்கறதுக்கு டைரக்டா போயிருக்கார்..” நடந்தபடியே விவரித்தான்..

“ஓ.. அப்போ.. வர நேரமாகுமா..?” 

“நோ.. நோ.. தர்ட்டி மினிட்ஸ்ல வந்துடுவார்..” சட்டென்று நின்றான்.. “அம் சாரி.. நான் மால்தேஷ்.. சாரோட பி.ஏ...நேட்டிவ் தும்கூர்.. தமிழ் மேனேஜ் பண்ற அளவுக்குத் தெர்யும்..”

லிஃப்டுக்காகக் காத்திருந்து.. நான்காவது மாடி அடைந்தோம்.. சீஃப் மேனேஜர் (ஓஎஸ்ஹெச்) என்ற பெயர்பலகை தாங்கிய கதவை சுட்டிக்காட்டி.. இது தான் சாரோட ஆஃபீஸ் ரூம்.. ஐ வில் ப்ரிங் யூ த்ரூ த அதர் டோர்..” அருகிலிருந்த அறையினுள்ளே அழைத்து சென்று.. அங்கிருந்த மற்றொரு கதவைத் திறந்து.. அறையை ஒளிர விட்டான்.. பிரம்மாண்டமாக இருந்தது அந்த அறை.. மேசையில் அவன் பெயர், கல்வித் தகுதி அறிவித்தது ஒரு நேம்ஸ்டாண்ட்.. அறையின் ஒரு மூலையை “ட”வடிவிலான பெரிய சோஃபா.. ஆக்கிரமித்திருந்தது.. 

“நீங்க.. இங்க வெயிட் பண்ணுங்க.. பக்கத்துல தான் என் ரூம்.. எதாவது வேணுமானா நாக் பண்ணுங்க.. பைதிவே.. எனி ட்ரிங்ஸ்.. ஹாட் ஆர் கோல்ட்..?”

“இட்ஸ் ஓகே.. அவர் வந்துரட்டுமே..”

தோளைக் குலுக்கி..“அப்டு யூ” என்றவாறு விடைபெற்றான்.. 

சோஃபாவில் சரிந்தேன்.. எப்படி எதிர்கொள்வது.. என்ன பேசுவது.. எப்படி ஆரம்பிப்பது என்று மனது ஒத்திகைப் பார்த்தது. கடிகாரம்.. முற்பகல் பத்தரை என்று சொன்னது.. “குடிக்க எதாவது கேட்டிருக்கலாமோ..?” பசி வயிற்றைக் கிள்ளியது.. இரவு.. வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டது போதவில்லை.. தலையை பின்னால் சரித்து.. கால்நீட்டி.. கண் மூடினேன்.. இரவு சரிவர தூங்கவில்லை.,. கண்ணெரிந்தது.. பயணக் களைப்பு அயர்ச்சியைக் கொடுத்தது..!

 

ஒன்றாகவே தான் விண்ணப்பித்திருந்தோம்.. ஆனாலும் அழைப்பாணை என்னவோ.. எனக்கு மட்டும் தான் வந்திருந்தது.. குரோம்பேட்டையை ஒட்டி இருந்தது பணியிடம். அந்த பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையில் லேப் அசிஸ்டெண்ட் வேலை. அது ஒருவருக்கான பணியிடம் என்பதாலும் .. அதுவும் எனக்கே அது கிடைத்திருப்பதாலும்.. அவனால்.. உள்ளடி வேலைகள் செய்ய இயலாமல் போனது.. 

அப்பாடா.. ஒரு வழியாக.. தப்பித்தோம்.. என்று நினைத்திருந்த வேளையில்.. அவன் பட்ட படிப்பின் இரண்டாவது ஆண்டில் நேரடியாக நுழைந்து அதிர்ச்சி கொடுத்தான்.. நான் அப்போது நேருநகரில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்தேன்.. என்ன தான் அவனைப் பிரிவது என்று முடிவு செய்தாலும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லா தீர்மானமும் காணாமல் போய்விடும்..  தவிர்க்க நினைத்தாலும் வெறுக்க முடியவில்லை.. நல்லவன்... என்னை உண்மையாய் நேசிக்கும் நல்லவன்.. என்னுடனேயே தங்கிக் கொண்டான்..  

அவனது நடவடிக்கைகளில் அப்போதெல்லாம் நிறையவே முன்னேற்றம்.. நானாக அவனைத் தொட்டால் தான் எதுவும் உண்டு என்பதெல்லாம் போய்.. அவனாகவே உரிமை எடுத்துக் கொள்ள.. வயதின் வேட்கையால்.. நானும் இணங்கிப்போனேன்...  தரமணியில் பட்டயப் படிப்பின் போது விடுதி வாசத்தில் ஏதோ ஒரு இரவு நான்... அவன் மனதில் விதைத்த விதை.. அவனுள் வேர் பிடித்து, இலை துளிர்த்து, கிளை பரப்பி, விழுதூன்றி... ஆல விருட்சமாய்.. வளர்ந்திருந்ததை நான் உணரவில்லை.. என் பார்வையில்.. அவன் என் உணர்வுகளுக்கான வடிகால்.. அவ்வளவே.. செக்ஸ் என்ற ஒன்றைத் தாண்டி அவனிடம் எதையும் நான் காணவில்லை.. 

இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் வேலை நிரந்தரமாக.. கல்லூரிக்கு நடக்கும்  தொலைவிலேயே ஒன்றரை க்ரௌண்டு இடம் வாங்கினேன்.. எல்லாம் அவன் யோசனை தான்.. நானும் அவனுமாகத் தான் நிலம் பார்த்து வந்தோம்.. அடுத்து வங்கிக் கடன், தடையில்லா சான்றிதழ்.. எல்லாம் இவன் செல்வாக்கில் எளிதாகக் கிட்டியது.. வீட்டு கட்டுமானத்தின் போதும் பெரிதும் உதவினான்.. கிரஹப்பிரவேசத்தின் போது.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. என் மொத்த குடும்பத்துக்கும் டிரெஸ் எடுத்து வந்தான்.. 

அம்மா உச்சி குளிர்ந்தாள்.. “ஏன் கண்ணு.. நீ மட்டும் பொண்ணா இருந்திருந்தியானா.. நாவலுக்கே ஒன்னிய கல்யாணம் கட்டி வச்சிருப்போம்.. எப்பவும் அவன் கூடவே இருந்துடலாம்..”

“இப்ப மட்டும் என்னங்கம்மா ஆயிடுச்சி... கூடவே இருந்துட்டாப் போச்சு..” அவன் சிரித்துக் கொண்டே பதில் சொல்லி.. என் முகத்தை ஏறிட.. அவஸ்தையால் நெளிந்தேன்.. எனக்கு உள்ளூர பதறியது.. இவன் நினைப்பது எதுவுமே சித்தியாகப் போவதில்லை என்பது திண்ணம்.. ஆனால் அதை எப்படி சொல்லி புரிய வைப்பது என்பது மட்டும் புரியவே இல்லை..

கிரஹப்பிரவேசம் அன்று.. அம்மா பால் காய்ச்ச.. பொடித்த ஏலக்காயை அதில் தூவினான்.. ஏலக்காய்ப் பால்.. அவன் ஃபேவரைட்! 

“இது எதுக்கு கண்ணு..?” அம்மா குழப்பத்துடன் பார்த்தாள்.. 

“ஒண்ணுமாகாதுங்கம்மா.. பாருங்களேன்.. கமகமன்னு இருக்கும்.. வெறுமனே குடிச்சா அவ்வளவு நல்லா இருக்காதும்மா..”

ஆம்... வாசனையாகத் தானிருந்தது.. நாசியைத் துளைத்து.. மூளையைத் தூண்டியது.. 

ஆவலாய் கண் திறக்க.. மெல்லப் புரிந்தது.. 

கையில் ஆவி பறக்கும் சூடான ஏலக்காய்ப் பாலுடன்.. சோஃபாவின் அருகே ஒரு சேரில் என்னையே பார்த்தவாறு அமர்ந்திருந்தது... ச.. ச.. சரத்... ஆம்.. சாட்சாத் சரத் பாபுவே தான்..!

(தொடரும்)

 



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: முற்பகல் செய்யின்
Permalink   
 


பாத்துட்டான்......பாத்துட்டான்............?!



ஒரு மந்தையிலிருந்து பிரிந்து சென்ற ஆடுகள்.........,இரண்டும் சந்தித்த போது.........என்ன பேச போறாங்களோ......



சீக்கிரம் சொல்லுங்க......

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

சோ நைஸ் பா .. எப்படி இருக்கும் ? எனாலே இமேஜ் பண்ணி பார்க்க முடியலே? நீங்களே விவரிங்க.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Wow late a vanthalum romba arumaiya vanthiruku kathai! Rendu pearum yeanna peasa poranga! Romba aarvama iruku. Am so excite to read the next epi.

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

When is yr next part dear,pls dont be late.



__________________
nada


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

பரபரப்பான கட்டம் வந்துவிட்டது........ உணர்வுப்பூர்வமான காட்சிகளை எதிர்பார்க்கிறேன்..... ரொம்ப டென்சன் ஆகி வழக்கம்போல டபிள் மீனிங் விஷயங்களை சேர்த்துடாதிங்க...... சரத்பாபுவை ஒரு "பளார்"னு அறை கொடுக்க சொல்லுங்க..... அந்த அடி, ஒவ்வொரு செக்ஸ் விரும்பிகளின் கன்னத்திலும் பிரதிபளிக்கணும்.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

ungaloda வழக்கம்போல டபிள் மீனிங்
விஷயங்களை சேர்ங்க.
Thani thanmaiya illakathinga.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

அறுசுவைனா ஆறு சுவையும் வேனும் அவருக்கு அது பிடிக்காது இவருக்கு இது பிடிக்காதுனு சொல்லி கண்டதையும் போட்டு பந்தியயும் கைப்பக்குவத்தையும் கெடுத்துக்காதீக

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Dinesh

//ungaloda வழக்கம்போல டபிள் மீனிங்
விஷயங்களை சேர்ங்க.
Thani thanmaiya illakathinga. //

அப்படியெல்லாம் இல்லீங்க... msvijay சும்மா கலாய்க்கறாரு... அவர் லொள்ளுக்கு அளவில்லை..! 



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

மாம்பழம் ஒரு ரூசினா மாங்காயும் ஒரு ரூசி தாம்மா இலைமறைவும் காய்மறைவும் எழுத்துக்கு அவசியம் தான் விஜி அவரும் உன்னாட்டம் கதை எழுதினா அது நீ எழுதினாப்ல இனிப்பா மாம்பழமாட்டும் இருக்கும் இதுவே அவரா அவராட்டம் எழுதினா திருட்டு மாங்கா ரூசியிருக்கும் ரென்டுமே ஈடு இனை இல்லாதது

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நான் யாருடைய எழுத்து சுதந்திரத்திலும் தலையிட்டதில்லை...... அது அவருக்கும் தெரிந்ததால் மட்டுமே ரோத்திஸ் அவர்களிடம் இந்த கருத்தை சொன்னேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நான் கருத்து உன்னை கலக்கமுற செய்திருந்தால் என்னை மன்னித்திடு விஜி ஒரு எழுத்தாளனின் கோபத்தையும் சாபத்தையும் மட்டுமின்றி அவர்தம் மனக்காயத்தால் விளையும் பாவத்தையும் தாங்கும் சக்தி எனக்கில்லை

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

so excite to next epi

__________________

praveen



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி
Permalink   
 


praveenkumarDineshmsvijayroynadaBasherArasu25thamizhan

images?q=tbn:ANd9GcSEifWck7bpvnTcTrBb7UJ-etMd6cVotzJ7TajZEW-wo25X8RXw



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
முற்பகல் செய்யின் - 15
Permalink   
 


தூங்குவதற்கு முரண்டுபண்ணும் குழந்தைகள் அம்மாவிடம் செல்லமாய் இரண்டு அடி வாங்கிய பின்.. அழுதுகொண்டே தூங்கி.. தூக்கம் விட்டு எழுந்து.. அன்னையின் முகத்தைத் தொட்டிலூடே கண்டதும்.. வாங்கிய அடி எதுவும் நினைவில்லாமல்.. வெள்ளை மனதுடன் உதிர்க்கும் உண்மை சிரிப்பாய்.. அவனும் புன்சிரிப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. 

எழ முயன்றேன்.. கையமர்த்தினான்.. 

“உட்காருடா.. ஒண்ணும் அவசரமில்ல.. மொதல்ல.. இந்த பாலக் குடி.. எதுவும் வேணாம்னு சொல்லிட்டியாமே.. பார்.. எவ்ளோ டயர்டா இருக்கேன்னு”

அதே பழைய கவனிப்பு... வாங்கி ஒரு மிடறு விழுங்கியதும்... கண் கலங்கியது.. 

வாய் திறந்து ஏதோ சொல்ல முனைந்தேன்.. 

“நீ.. எதுவும் இப்ப சொல்ல வேணாம்... குடிச்சி முடிச்சதும் நிதானமா பேசு..” 

மெல்லக் குடித்தவாறு அவனை ஏறிட்டேன்.. உத்யோகத்திற்கு ஏற்ற தோரணையான உடல் வாகு.. முகத்தில் அதிக மாற்றமில்லை.. தலைமயிர் மட்டும் ஊடுபயிராய் நிறைய நரை வாங்கி இருந்தது.. ஆனால் அதுவுமே.. ஒரு கவர்ச்சியாய் இருந்தது.. மொத்ததில் அஜானுபாகுவாய் இருந்தான்.. ஒரு நிறுவனத்தின் உயரதிகாரி என்பதற்கு இலக்கணமாய் இருந்தது அவன் தோற்றம்.. புன்னகை மாறாமல் கை கட்டிக் கொண்டு என்னையே பார்த்தான்... 

மிடறு மிடறாய் விழுங்கினேன்..  

கிரஹப்பிரவேசம் முடிந்து ஊர் திரும்பியதும்.. அப்பா.. வரன் பார்க்க ஆரம்பித்தார்.. அது சம்பந்தமாக அவர் எனக்கு எழுதிய கடிதத்தை இவனிடம் காட்டிய போது தான் எங்களுக்கிடையேயான பிரிவு பிள்ளையார் சுழியுடன் ஆரம்பமானது..

“சோ.. என்னடா முடிவு பண்ணியிருக்க..?”

“இதுல முடிவு பண்றதுக்கு என்னடா இருக்கு..? வேலை நிரந்தரமாயிடுச்சி.. வீடும்.. இதோ.. நல்லபடியா கட்டி.. குடி வந்தாச்சு.. அடுத்ததா என்ன பண்ணனும்னு அவருக்குத் தெரிஞ்சதோ அத தான் பண்ணியிருக்கார்.. இது உலக வழக்கம் தானே..”

“ஓஹோ.. இப்பத்தான் உனக்கு உலக வழக்கு.. நடப்பெல்லாம் தெரிய வந்துச்சா..?” 

அவன் எதைப் பற்றி பேசினான்.. என்று எனக்கொன்றும் புரியாமலில்லை.. “அத ஏண்டா பெருசு பண்ற.. அது ஏதோ.. வயசுக் கோளாறு.. சரி.. இப்ப அந்த பேச்சு எதுக்கு.. விடு.. நேரமாச்சு.. வா.. கிளம்பலாம்.. “

“இல்ல.. நீ போ.. நான் வரல.. எனக்கு லீவ் சொல்லிடு.. “ அவன் வகுப்பை புறக்கணித்து வீட்டிலேயே இருந்து கொண்டான்.. நான் மட்டும் அலுவலகம் சென்றேன்.. அன்றைக்கெல்லாம்.. வேலை செய்ய மனதேயில்லை.. எதுவும் தவறுதலாக முடிவெடுத்து விடுவானோ என்று மனது அடித்துக் கொண்டது.. ஒரு புறம்.. அவன் அப்படி செய்யக்கூடியவன் இல்லைதான் என்று மனது சமாதானம் சொன்னாலும்.. அவசியமே இல்லாமல்.. ஒரு பயம் ஆட்டுவித்தது.. மாலை வீடு திரும்பும் வரை இருப்புக் கொள்ளவில்லை.. 

மாலை.. எங்கோ கிளம்பும் பாவனையில் எனக்காக ஹாலிலேயே காத்துக் கொண்டிருந்தான்.. உள்ளே நுழைந்ததும்.. அவனாகவே ஆரம்பித்தான்..

“இன்னிக்கெல்லாம்.. நல்லா யோசிச்சி பாத்தேண்டா.. நீ சொல்றது சரி தான்.. உங்க வீட்ல உனக்கு வரன் பாக்க ஆரம்பிச்சது ஒண்ணும் தப்பில்ல தான்.. ஆனா...” 

சற்றே நிம்மதியாயும்.. கொஞ்சம் பயத்தோடும் ஏறிட்டேன்..

“நான் இன்னும் அமைதியாய்.. இருந்தா தப்பாயிடும்.. அதனால..”

“அதனால..?”

“அதனால.. நேர்லயே போய் பாத்து சொல்லிடலாம்னு இருக்கேன்..”

வயிற்றில் அமிலம் சுரந்தது.. “என்ன சொல்லப் போற..”

“நாவல் இல்லாம எனக்கு வாழ்க்கையில்ல.. அதனால.. கல்யாண பேச்ச இத்தோட விட்ருங்க.. எங்கள வாழ வைங்கன்னு..” வெகு நிதானமாய் சொன்னான்..

அவன் நெஞ்சுரம் கலவரப்படுத்தியது.. “உனக்கே உன் பேச்சு.. சரியாப்படுதா.. அவங்கள விடு... மொதல்ல.. எனக்கு இதுல விருப்பமான்னு கேக்கணும்னு உனக்குத் தோணலையா... ?”



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
முற்பகல் செய்யின் - 16
Permalink   
 


"உன்ன என்ன கேக்கறது... விருப்பமில்லாம தான்.. இவ்வளவு நாளும்..”

“நிறுத்துடா.. நீ திரும்ப திரும்ப.. அதையே சொல்லாத.. அத மறந்துடு.. “

“என்னடா.. ஈஸியா மறந்துடுன்னு சொல்ற.. அப்ப அதெல்லாம்.. என்ன பிடிக்காம தான் செஞ்சியா..?” அவன் முகத்தில் கவலை அப்பிக் கொண்டது.. 

எனக்குமே இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. நெருங்கி அவன் தோள் தொட்டேன்.. 

“உன்ன பிடிக்காமல்லாம் இல்லடா.. உன்ன ஒரு நண்பனா ரொம்ப பிடிக்கும் தான்.. ஆனா.. நாம எப்படிடா.. ஒண்ணா.. அதையெல்லாம் நினச்சிக் கூட பாக்க முடியல.. ஊர் உலகம் என்ன பேசும்..”

“நாலு சுவத்துக்குள்ள நடக்கற விஷயத்துக்கு ஊர் உலகத்துக்கிட்ட நியாயம் கேட்க முடியாது தான்.. ஒத்துக்கறேன்.. ஆனா.. உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல்ல.. அதக் கேட்டுப் பாரு..”

“இப்ப.. நீ.. எதுக்கு சின்ன விஷயத்த இவ்வளவு பெருசு படுத்தற..”

“எதுடா சின்ன விஷயம்.. உனக்கு அப்படித் தோணுதா..? எனக்கு சத்தியமா இல்லடா.. நீ தான் எனக்கு எல்லாம்னு..நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்..”

“டேய்.. டேய்.. நிறுத்துடா.. யார்கிட்டனா.. இத சொல்லிப்பாரேன்.. சிரிப்பாங்க.. நீயா ஏதேதோ கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பா..?”  மொத்தப் பழியும் அவன் மீது கவிழ்த்தேன்..

கண்ணீர் கரை கடந்து வழிந்தது.. “சரிடா.. நீ தப்பே பண்ணல.. நானே தான் கற்பனை வளத்துகிட்டேன்னு வச்சிக்கோ... இப்ப.. எனக்கு என்னடா.. பதில்..?”

எரிச்சலானேன்.. “நீ என்ன கர்ப்பமாவா இருக்க.. இல்ல அப்படி ஆகத்தான் முடியுமா.. ஜஸ்ட் லைக் தட் விட்டுத் தள்ளுவியா.. அத விட்டுட்டு.. ஒரு பொ*ட மாதிரி.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டு..” என்னையும் மீறி விழுந்தது அந்த வார்த்தை..! ஒரு வேளை.. அப்படித்தான் அவனை அவ்வளவு நாளும் நினைத்திருந்தேனோ.. என்னவோ...  

எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தது.. என் உள்ளத்தில் அவனைப் பற்றி அப்படி ஒரு மதிப்பீடு இருக்கப் போய் தான் விஷமாய் கக்கி இருக்க வேண்டும்..

அவன் கோபமாய் ஏறிட்டுப் பார்த்தான்.. பதிலேதும் சொல்லாமல்.. அறையினுள் புகுந்து கொண்டான்.. அந்த இரவு.. ஹாலில் படுத்தான்.. உள்ளறையில் தூக்கமின்றித் தவித்தேன்..

அவனை நினைத்தால் பாவமாக இருந்தது.. அதுகாறும் அவனால் விழைந்த என் வாழ்வியல் மாற்றங்களை நினைவு கூர்ந்தேன்.. ஆனாலும் முடிவில்.. என் செயலை நியாயப்படுத்தவே செயதேன்.. அவன் பக்கத்து நியாயம் எனக்கு சற்றும் விளங்கவில்லை.. ஒருக்கால் விளங்கினாலும்.. ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவே ஒப்பாது... ஒரு ஆணோடு.. வாழ்க்கை முழுவதும்.. கற்பனை செய்யக்கூட அருவறுப்பாக இருந்தது..

காலை.. வழக்கம் போலவே இருவரும் கிளம்பினோம்.. பேசிக் கொள்ளவேயில்லை..  அன்றைய தினம் இறுதியாண்டு மாணவர்களுக்கு லேப் வகுப்பு எதுவுமில்லாததால்.. அன்று முழுவதும் கல்லூரியில் அவனை சந்திக்க வேண்டி வராது என்பதால் சற்று நிம்மதியுடன் வேலை ஓடியது..

பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு.. ஹெச் ஓ டி... அழைப்பதாக முபாரக் வந்து சொன்னான்.. 

அறைக்கதவைத் தட்டி.. அனுமதி கேட்டு.. உத்தரவு பெற்று.. உள்ளே நுழைந்தேன்.. 

"சார்.. வர சொன்னீங்கன்னு.."

"ஆமா.. உட்காருப்பா.. சொல்றேன்.." அமர்ந்தேன்.. "இந்த லெட்டர்ல என்ன எழுதி இருக்குன்னு கொஞ்சம் பாரு.."

(தொடரும்)



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: முற்பகல் செய்யின்
Permalink   
 


அருமை அண்ணா.........

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சீக்கிரம் நிகழ் காலத்துக்கு வாங்க

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

interesting!!!!!

__________________

praveen



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Really tutching part.verry nice.



__________________
nada


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ரொம்ப உணர்ச்சிகரமா இருந்துச்சு....... சரத் பாபு கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறாரோ?.... அது என்ன லெட்டர் புதுசா?...... அந்த பாலில் பாய்சன் கலந்து கொடுத்திருக்கலாம்ல?..... ஏமாத்திட்டு போறவன்'லாம் எதுக்கு இருக்கணும்?...... க்ளோஸ் பண்ணிடுங்க அவர் கதையை.....
மற்றபடி ரொம்ப அழகா, தெளிவா கதையை சூப்பரா கொண்டு போறீங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Romba nallah irukku ma story
//எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தது// unmaiyana varigal

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

சற்றே நீண்ட இடைவெளிவிட்டு இந்த கதையை படித்த காரணத்தால் பதிய வேண்டிய கருத்தும் சற்றே நீண்டதாக ஆகிவிட்டது...

 

முதலில் இதை வெறும் ஒரு கதையாக என்னால் பார்க்க முடியவில்லை... அந்த விதத்தில் நண்பர்கள் சிலர் இங்கு கூறியுள்ள கருத்தை நானும் ஏற்கிறேன்... இதை நான் கூற காரணம் நம்மில் பல "சரத் பாபு"க்கள் காதல் என்ற பெயரால் ஏமாற்றப்பட்டு, உடல் சுகத்துக்காக மட்டுமே தன்னை பயன்படுத்திகொள்ளும் BI களிடம் சிக்கி... அவர்களுக்கு MOOD வரும்போதெல்லாம் சுகத்தையும் தந்து, அவர்களின் எல்லைமீரல்களால் ஏற்படும் வலிகளையும் பொறுத்துக்கொண்டு... அவர்களின் கோபம், உதாசீனமில் தொடங்கி அடி, உதை வரை அனைத்தையும் பொறுத்து கொண்டு ஒரு FAITHFUL PARTNER இருக்கும் "சரத் பாபு" போன்ற GEM OF PERSONALITY க்கு இறுதியில் கிடைக்கும் பெயர் - "பொ*ட"

 

“உனக்கே உன் பேச்சு.. சரியாப்படுதா.. அவங்கள விடு... மொதல்ல.. எனக்கு இதுல விருப்பமான்னு கேக்கணும்னு உனக்குத் தோணலையா... ?

 

ஒரு ஆணோடு.. வாழ்க்கை முழுவதும்.. கற்பனை செய்யக்கூட அருவறுப்பாக இருந்தது.."

 

மேல உள்ள வரிகளை படித்த போது எனக்கு கடும் கோபம் உண்டானது... நியமாக சரத் இதற்கு பதில் கேள்வியாக "இதை இப்ப சொல்ற நீ.... ஒவ்வொரு வாட்டியும் என்கூட படுக்கறதுக்கு முன்னாடி அத நீ யோசிச்சி இருக்கணும்...." என்று நாக்கை புடுங்கிகிற மாதிரி நாலு கேள்வி கேட்டுவிட்டு ... தன்னை "பொ*ட" என்று கூறியவனின் முகத்தில் காரிதுப்பிவிட்டு அவனை தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்க வேண்டும்...

 

ருசிகண்ட பூனையாய் போதும் போதுமென ஒருவனை அனுபவித்துவிட்டு... வீட்டில் திருமண பேச்சு எடுத்தபின் உத்தமர் வேஷம் போடும் நன்றி கேட்ட நாய்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்திருக்கும்....

 

ஆனால் அவ்வாறு செய்யாமல் அப்பொதும் அமைதியாய் இருந்து... தானாக விலகி சென்று தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்து கொண்டு... இத்தனை நடந்த பின்னரும் கூட தன்னை பார்க்க வந்தவனை கண்ணியத்துடன் உபசரிக்கும் "சரத் பாபு"வை உண்மையில் கோவில்கட்டி கும்பிடவேண்டும்...

 

உண்மையில் அவனது பண்பும், காதலும் அத்தனை உயர்வானது.... ஆனால் அத்தகைய ஒரு காதலுக்கு துளிக்கூட அருகதை அற்ற ஒருவனை காதலித்தது தான் அவன் செய்த பெரிய தவறு....

 

"இன்னா செய்தாரை ஒறுத்தல்...." என்று தொடங்கும் குறளின் பொருள்பட சரத் பாபுவின் கண்ணியமான உபசரிப்பை கண்டபின், அவன் சரத்துக்கு செய்த பாவங்கள் அவன் மனதை முள்ளாய் குத்தி கிழிப்பது நிச்சயம்...

இதே சரத் இத்தனை வருடங்களுக்கு பின் தன்னை தேடிவந்தவனை சந்திக்க மறுப்பதை போன்றோ அல்லது அவனை கடுமையாக சாடுவதை போன்றோ காட்சி அமைதிருந்தால்... அது நிச்சயம் சரத்தின் பாத்திர படைப்புக்கு உட்டாமல் விலகி நின்றிருக்கும்... அந்த வகையில் சரத்தின் பாத்திரத்தை அதன் இயல்பு மாறாமல் கொண்டுசெல்லும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் நண்பா...     



__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard