இந்த உலகத்தில் மிக கடினமான வயது என்னை பொறுத்தவரை இருபத்தைந்து தான்.
கடினமாக உழைக்க தயாராய் இருக்கலாம். ஆனால் சரியான வேலை கிடைக்காது
எவ்வளவு பொறுப்புடன் நடந்து கொண்டாலும் வீட்டை பொறுத்த வரை பொறுப்பற்றவன் என்ற பெயர் தானாக ஒட்டி கொள்ளும்.
நிறய நண்பர்கள் கிடைப்பார்கள் .எண்ணி சொல்ல முடியாது .ஆனால் அதில் எப்பவுமே உண்மை இருக்காது .
வியாபார திறமைகளுக்கான களம் கண்ணில் தெரியும் . ஆனால் கைக்கு எட்டாது .
அப்படியே முயன்று பெற்றால் கூட அது யாரோ ஒரு நாற்பது வயசு மாமாவின் சாதனை பட்டியலில் சேரும்
நாம் வேடிக்கை பாப்போம் ..
அறிவியலில் மனித வாழ்வை மூன்றாக பிரிகிறார்கள்
முன் இனபெருக்க பருவம் , (1-14) இனபெருக்க பருவம் (15-28) பின் இனபெருக்க பருவம் (29-42)
திருமணம் செய்ய பின் இனபெருக்கபருவம் வரை காத்திருக்கும் பெருசுகள் கூட ஒரு வகையில் செக்ஸ் ஒரிண்டசன் குழப்பங்களுக்கு காரணம்.
செக்ஸ் நட்பு உழைப்பு எல்லா ரீதியிலும் சுரண்டப்படும் ஏமாற்றப்படும் நாம் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் ..
ஏன் என்றால் அது தொழில் நியதி.
உள்ளுக்குள்ள நெருப்ப வச்சிக்கிட்டு சிரிக்கிற கொடுமை இருக்கே அது விபசாரத்தை விட கேவலம்
நொந்த மனசோட , செத்து போன உணர்வுகளோட , கையாலாகாத விரக்தியோட ஏமாற்றங்களை மனசில் வச்சிக்கிட்டு வெளியில் பாம்பே டை சூட்ல நோர்த் ஸ்டார் ஷூ போட்டு zodiac belt , ரய்மாண்ட்ஸ் டை , ராய்வான் கிளாஸ் மாட்டி கையில் வேச்டார் கிட வச்சி திரியிற ஆயிர கணக்கான இருபத்து சொச்சங்களை அடுத்தமுறை கொஞ்சம் இரக்கத்தோட பாருங்க ...