சில நேரங்களில் வார்த்தைகள் ஒன்றை முந்தி ஒன்று வர முயற்ச்சித்து எதுவும் வெளியாகாமல் நெஞ்சுக்குழியில் சிக்கிக்கொள்ளும் .எல்லா வார்த்தைகளும் உள்ளே கைதாக வெறும் கண்ணீர் மட்டும் கன்ன மேடையில் தனி அவார்த்தனம் செய்யும் . அங்கே நடக்கிறது கொலை . மிக அழகான வரிகள் ..
கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்துக்கும் மேலா.. இந்த இழைக்குள் நுழைவதும் பின் வெளியேறுவதுமாக.. வார்த்தை வறண்டு.. என் வசம் இழந்து.. “ஏன்?” “ஏன்?” என்கிற கேள்விக்கணைகள் மாத்திரமே தொக்கி நிற்க.. அதீத வருத்தத்தில் தொலைந்திருந்தேன்..
ஆழ்ந்து யோசிச்சா ஒண்ணு புரியது. உணர்வுக்கொலைகள் நடக்காம இருக்கவும், அப்படியே தப்பித்தவறி அதுக்கு நாமளே இலக்காயிட்டாலும்.. “தானத்தில் சிறந்த நிதானத்த” கைக்கொள்ளணும்!
கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்.. வேற வழியில்ல.. ஒரு பாடமா தெரிஞ்சிக்கிட்ட விஷயமிது. அதுக்காக ஓவர் நைட்ல மனத்திண்மை அதிகரிக்க வாய்ப்பில்ல தான்.. இனி அதுக்காக முயற்சியாவது செய்வேன்ற நம்பிக்கை மனசுக்குள்ள வேரூன்றியிருக்கு!!