Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செக்சும் சிகரெட்டும்
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
செக்சும் சிகரெட்டும்
Permalink   
 


புகைப்பதனால் விளைகின்ற தீமை களைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது நீண்டு கொண்டே போகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பதனால் ஏற்படுகின்ற தீமைகள் என்ற உத்தேசமாகச் சொல்லப்பட்டு வந்தவை அனைத்தும் இன்றைக்குப் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டன. இவ்வகை ஆய்வுகள் மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த வரிசையிலே புகையிலையுள்ள நிகோடின் (Nicotine) எனப்படும் நஞ்சினால் ஏற்படக்கூடிய குறைபாடுடைய கரு. கருச் சிதைவு போன்றவைகள் பற்றிய பல ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து தற்போது புகைப்பழக்கம் இனக்கவர்ச்சி ( Sex attraction) யை அழிப்பது டன் ஆண் பெண் உடலுறவைப் பெரிதும் பாதிக்கின்றது எனப்பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து புகைக்கின்ற பல ஆண்கள் உடலுறவில் நாட்டம் இன்றி போகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

அண்மையில் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் சிறுநீரியல் துறைத் தலைவரான டாக்டர் இர்விங் கோல்ட் ஸ்டெய்ன் (Dr.Lrving Goldstein Prof. of Urology, New England Male Reproductive Center, Boston University Medical School) மற்றும் ஆய்வாளர்களால் செய்யப்பட்ட இரண்டு ஆய்வுகளின் மூலம் ஆண்குறி விறைப்பின் மைக்காக மருத்துவம் செய்து கொள்ள வந்த 1011 ஆண்களில் 78 சதவிகிதம் அதாவது 789 பேர்கள் தீவிரமான புகைப்பழக்கமுள்ள வர்கள் என்பது தெரியவந்ததுடன், இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட பொதுவான காரணம் புகைப்பழக்கம் என்பதுதான். புகைபிடிக்காதவர்களிடையே இது போன்ற குறை உள்ளவர்களின் எண்ணிக்கையைப் போல் இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்குறிக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் நிகோட்டினினால் பாதிக்கப்பட்டுக் குறுகிப் போவதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடுமென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது ஆய்வில் ஆண்குறி அளவு குன்றல் ஆகியவற்றிற்கு மருத்துவம் செய்துகொள்ள வந்த 120 புகைப்பழக்க முடையவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். நுண்ணிய கருவிகளைக் கொண்டு அவர்களது ஆண்குறிக்குச் செல்கின்ற இரத்தத்தின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தபோது புகைக்கின்ற சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இரத்தம் செல்கின்ற அளவு குறைந்து கொண்டே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தவிர வேறொரு ஆய்வின் மூலம் “புகைப்பழக்க முடையவர்களின் விந்தணுப் பாகில் விந்தணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து இருப்பதும் அறியப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் விந்தணுப்பாகில் காணப்பட்ட விந்தணுக் களில் பல குறைபாடு உடையவை களாகவும், இயல்பு நிலைக்கு மாறுபட்டவை களாகவும் (Normal) இருந்தன.” (“Tobacco affects Reproduction” Smoking & Health Reporter _ vol-3, No.2.P.3 jan91)

மேலும் அமெரிக்க மருத்துவர்கள் சங்க இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி புகைப்பதை வழக்கமாகக் கொண்ட பெண்கள் பாலுறவில் ஆர்வம் குன்றியவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்களது கருவுறும் திறனும் 43 சதவிகிதம் குறைவு பட்டிருந்தது“ (“Smoking and delayed conception “D.D. Baird & Wicox- JAMA – Vol253 No 20 2979 - 2983)

மற்றுமொரு ஆய்வின்படி புகைக்கின்ற பெண்கள் பிற பெண்களை விட இரண்டாண்டுகள் முன்னரே மாதவிலக்கு நிற்கின்ற நிலையை (Menopause) அடைகின்றனர் என்று தெரியவந்தது. ( “Smoking and Meno pause in Woman” – Annals of Internal Medicine-Vol 103 PP.350-356)

மேற்கண்ட ஆய்வு முடிவுகளிலிருந்து செக்ஸ் எனும் பாலுறவு நிலைக்கும் புகைப்பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத தொடர்பு உள்ளது என்பது உறுதியாகின்றது. ஆண்மைக் குறைவு பற்றி மனங்குமைந்து கவலைப்படுபவர்கள் புகைப் பழக்கமுடைய வர்களாக இருந்தால் உடனடியாக அப்பழக் கத்திலிருந்து மீள முயல வேண்டும். அவர்கள் இழந்த இல்லற சுகத்தை அடைய இதுவே வழி.

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

நல்ல வெளியீடு,
பல அரிய தகவல்கள் வெளியிட்டதற்க்கு நன்றி

__________________

for ct: eds.3333@yahoo.com

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

welcome.... i will post more...

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

nice information

__________________

praveen



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

stop smoking

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard