Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தனியாக தவிக்கின்றேன்


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
RE: தனியாக தவிக்கின்றேன்
Permalink   
 


இந்த குழமத்தில் நான் பதியும் முதல் கருத்து இது...

"எனக்கே தெரிந்தது நான் அவரை அதிகமாக சோதிக்கிறேன் என்று இருந்தாலும் இந்த விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது....."

"என்னுடைய உணர்ச்சிகளில் இவன் அதிகமாக தான் விளையாடுகிறான் என்பது எனக்கு புரிந்தது.ஆனாலும் அவன் போக்கிலே நானும் போக விரும்பினேன்..."

-- நம்ப மனசுக்கு பிடிச்சவங்கள கடுப்பேத்தி காயவிட்டு பார்க்கறதுல இருக்க சுகமே தனிதான்... அத மேல இருக்க வரிகள்ல அழகா சொல்லிருகீங்க..

அதுவும் SCENE BY SCENE கதை BACK N FORTH போயி அவங்கவங்க POINT OF VIEW அத படிக்கறப்ப இன்னுமே சுவாரசியமா இருக்கு...

GREAT GOING... KEEP ROCKING...

ஆனா ஒரு விஷயம் மட்டும் இந்த TREND SETTER கதையோட ஒட்டாம நிக்கற மாதிரி எனக்கு தெரியறது.. இந்த கதையோட தமிழ் USAGE... அது கொஞ்சம் OLD MODEL தமிழ் SLANGooda போறது இந்த கதைக்கு SPEED BREAKERa இருக்கு... இது என்னோட கருத்து தான்.. ஆனா கதைய படிக்கிற மற்ற வாசகர்கள் என்ன FEEL பண்றாங்கன்னு எனக்கு தெரியல... நீங்க அத கொஞ்சம் கவனிக்கணும்...



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@cupid kutty முதல் கருத்தா இருந்தாலும் முத்தான கருத்து.....



///ஆனா ஒரு விஷயம் மட்டும் இந்த TREND SETTER கதையோட ஒட்டாம நிக்கற மாதிரி எனக்கு தெரியறது.. இந்த கதையோட தமிழ் USAGE... அது கொஞ்சம் OLD MODEL தமிழ் SLANGooda போறது இந்த /கதைக்கு SPEED BREAKERa இருக்கு... இது என்னோட கருத்து தான்.. ஆனா கதைய படிக்கிற மற்ற வாசகர்கள் என்ன FEEL பண்றாங்கன்னு எனக்கு தெரியல... நீங்க அத கொஞ்சம் கவனிக்கணும்...///

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@Rotheiss
மும்பையில்........பொறுங்க சாமி

@thamizhan
தம்பி இன்னும் டிக்கட் வரல

@Basher
நன்றி

@Cupid Kutty
நன்றி முதல் கருத்தை என் கதையில் பதிந்ததற்கு.
உங்களின் கருத்துகள் பரிசீலனையில் எடுத்துகொள்ளப்பட்டுளது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

@thamizhan
உங்களின் ஒத்தூதலுக்கும் நன்றி

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

எதற்காக உன்னை என் மகன் கடைசியாக கூப்பிட்டான் என்று அவர் தந்தை என்னிடம் கேட்டதும் ஒரு நிமிடம் எனக்கு மூச்சு நின்று போனது.என்ன சொல்வது என்று புரியவில்லை “பே” என்று முழித்தேன்.நல்ல வேலையாக உதவிக்கு மருத்துவர் வந்தார் சார் ஒரு நிமிடம் உங்களிடம் பேசவேண்டும் என்று கூறி அவரை அழைத்து சென்றார்.அப்பாடா என்று பெருமூச்சு விடவும் அவரின் அன்னை மீண்டும் என்னருகில்.கத்தி போய் வாள் வந்தது என்பது இது தானா என்று நொந்தவாறே அவரை நோக்கினேன்.என்ன நினைத்தாரோ என்னவோ அல்லது என்ன புரிந்ததோ என்னவோ தம்பி அடுத்த முறை நான் உள்ளே செல்லும்போது என்னுடன் வா வந்து அவனை பார் உன் குரலோ அல்லது உன் அருகாமையோ அவனை ஏதாவது செய்கிறதா என்று பாப்போம் என்று சொல்லவும் என் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் கொட்டியது.அவரை நன்றியுடன் நோக்கி கை கூப்பி தொழுதேன்.


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

முதன் முதலாக விமானத்தில் பயணம் என்பதே ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது அதிலும் இவருடன் பயணம் என்பது ஒரு எல்லையில்லா ஆனந்தத்தையும் தந்தது.அந்த இரு தினங்கள் விடுமுறை எடுத்ததால் அவரைப்பற்றிய சிந்தனைகள் குறைந்தேயிருந்தன.ஆனால் பிரயாணத்தன்று காலையிலே கிளம்பவேண்டி வந்ததும் மீண்டும் துள்ளலான அவரின் நினைவுகள் என் மனதில், அது சிறிது உற்சாகத்தையும் அதே நேரம் சிறிது படபடப்பையும் ஏற்படுத்தியது.நான் எதிர்பாராமலே அலுவலக கார் வந்திருந்தது என்னை அழைத்துச்செல்ல.ஏர்போர்ட் சென்றடைந்ததும் அவரை தேடினேன்.பின்னிருந்து ஷால் வி கோ என்றார் திரும்பிப்பார்த்த நான் ஒரு நிமிடம் அவரின் டிரஸ் சென்ஸ் கண்டு வியக்கவே செய்தேன். தடுமாறியபடியே ஷுவர் சார் என்றேன்.இருவருமாக செக் இன் செய்து கொள்ள விரைந்தோம்
மேய்ப்பனின் பின்னால் செல்லும் ஆட்டுக்குட்டியை போல அவரின் பின்னால் சென்றேன்.எங்கெங்கோ அழைத்து கடைசியாக விமானத்திற்கு கூட்டிச்சென்றார்.ஏதோ ஸ்டேஜ் ஏறப்போவது போல் இருந்தது விமான நுழைவு.விண்டோ சீட் வேண்டுமா என்றார் ஆம் என்பதை போல் தலை அசைத்தேன் நகர்ந்து இடம் கொடுத்து நான் அமர்ந்ததும் அவர் என் அருகில் அமர்ந்தார். இத்தனை பக்கத்தில் அவர், எனக்கு என்னவோ போல் இருந்தது அவரின் நறுமணம் என்னை கிறங்கடித்தது. ஆர் யு ஓகே என்றார் எஸ் என்று தலையாட்டினேன்.சீட் பெல்ட் போட உதவினார்.அவரின் ஸ்பரிசம் ஆண்டவா என்னை காப்பாற்று இவரிடம் இருந்து என்று கத்த வேண்டும் போல் இருந்தது.ஏகத்துக்கும் நெளிந்தேன்.விமானம் கிளம்பவும் அந்த ஜெர்க் சிறிது பயத்தை வரவழைத்தது அவர் என் கையை அழுத்தினார் நான் பயம் நீங்கி சிரித்தேன் பின் அந்த ஒரு மணி நேரமும் எனக்கு அதீத குதூகலத்தை அளித்தது இவரிடம் சிறு குழந்தை போல இது என்ன கடல் இது என்ன ஹெய்ட் இப்படி துருவி துருவி கொண்டே வந்தேன்.அந்த ஏர்ஹோஸ்ட்டஸ் கொண்டு வந்த அனைத்தையும் சகட்டுமேனிக்கு வாங்கி தின்றேன்.ஒரு வழியாக விமானம் மும்பையில் தரையிறங்கியது.மீண்டும் அவரின் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நான்.


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

மும்பை பற்றிய என் நினைவு எனக்கு எல்லையில்லா புன்னகையை வரவழைத்தது.நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை போன்றும் அவனின் நினைவுகள் எல்லாம் ஏதோ கனவுகளை போன்றும் உணர்ந்தேன்.சில நொடிகளில் மீண்டும் பல பல கூக்குரல்கள் அந்த குரல்கள் என்னை நிலைகொள்ளவிடவில்லை மிகவும் பரிதவித்தேன் எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது என் உதடுகள் வறண்டு கிடக்கிறது எனக்கு யாரேனும் தண்ணீர் தர மாட்டார்களா? தாகத்தில் நாக்கு வறண்டது என்னால் எச்சில் கூட வரவழைக்க இயலவில்லை.தவிப்பு கோவமாக மாறியது வேகமாக கையை அசைக்க முயல்கிறேன்.ஆனால் வழக்கம்போல் என்னுடைய முயற்சிகள் வீணானது.இங்கு என்னை கவனிக்க யாரும் இல்லையா என்று சுயப்பச்சாதாபம் தோன்றியது.கண்கள் மீண்டும் கலங்கின..


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

என்னுடைய பின்னாலேயே வந்தான் தாய் பசுவிற்கு பின் வரும் கன்றுக்குட்டியை போல்.அனைத்து போர்மாலிட்டிகளையும் முடித்து அவனை விமானத்தினுள் அழைத்துச்சென்றேன்.அவனுக்கு இது தான் முதல் விமானப்பயணம் என்பதை உணர்ந்ததால் விண்டோ சீட் வேண்டுமா என்று அவனை கேட்கவும் வேகமாக தலையசைத்தான் நகர்ந்து இடம் கொடுத்தேன்.என்னருகில் என்னவன் எனக்கு என்னென்னவோ செய்தது இதற்கு தானே ஆசைபட்டாய் என்று என் மனம் என்னை கேலி செய்தது அதை புறந்தள்ளி விட்டு அவனையே பார்த்தேன்.அவனிடம் மெதுவாக ஆர் யு ஓகே என்றேன் எஸ் என்று தலையாட்டினான். அவனுக்கு சீட் பெல்ட் போட உதவினேன்.அவனின் ஆண்மை முழுவதுமாக உணர்ந்தேன் அவனின் மூச்சுக்காற்றின் உஷ்ணம் மூலமாக. இன்றும் நாளையும் என்னுடன் என்பதே எனக்கு தித்திப்பாக இருந்தது. ஃபிளைட் டேக் ஆப் ஆனதும் சிறிதாக குலுங்கினான் மெதுவாக அவனின் கையை அழுத்தினேன் சிரித்தான். அந்த சிரிப்பு என்னை சிதறடித்தது. பின் அந்த ஒரு மணி நேரமும் அவனின் அதீத குதூகலத்தை கண்டு ரசித்தேன் என்னிடம் சிறு குழந்தை போல இது என்ன கடல் இது என்ன ஹெய்ட் இப்படி துருவி துருவி கொண்டே வந்தான்.அந்த ஏர்ஹோஸ்ட்டஸ் கொண்டு வந்த அனைத்தையும் சகட்டுமேனிக்கு வாங்கி தின்றான்.ஒரு வழியாக விமானம் மும்பையில் தரையிறங்கியது.மீண்டும் அவனை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். என் பெயர் பலகை தாங்கி கொண்டு ஒருவன் நின்றான்.எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வண்டி நேராக தாஜ் ஹோட்டல் சென்றது. ரிசெப்ஷனில் இருந்த பெண் எங்களின் தகவல்களை வாங்கிகொண்டு சார் உங்களுக்கு இரண்டு ரூம்கள் அல்லாட் செய்யப்பட்டுள்ளது என்றாள் நான் அவளிடம் எதற்கு இரண்டு ரூம்கள் வி கேன் அட்ஜஸ்ட் இன் எ சிங்கள் ரூம் என்றேன் அவன் இடைமறித்து இல்லை சார் எனக்கு தனியாகவே ஒரு ரூம் கொடுங்கள் என்றான். அவள் சார் தி ரூம்ஸ் ஹாவ் இன்சைட் என்ட்ரி என்றாள் அண்ட் போத் ஆர் நெக்ஸ்ட் டு ஈச் அதர் என்றாள்,எனக்கு கோபம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இட்ஸ் ஓகே வென் இஸ் தி மீட் என்றேன். சார் தி மீட் இஸ் ஷெட்யூல்ட் போர் 10.30 என்றாள்.தேங்க்ஸ் சொல்லி இருவரும் அவரவர் ரூமிற்குள் நுழைந்தோம்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Kadantha kaala inbam nigalkaala sogam vasikum pothu manathil inam puriyatha oru unarvu. . . . Super tvl

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@ அனைவருக்கும்,
என்னுடைய அடுத்த பதிவு இனி பதினைந்து தினங்கள் கழித்தே இருக்கும் ஆகவே அதுவரை பொறுமை காக்க வேண்டும். நன்றி

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அந்த பையன் ரொம்ப மோசம்.. எதுக்கு தனித்தனி ரூம் கேக்கறான்..??

இந்த பாஸ் கொஞ்ச ராங்கு காட்டினா தான் சரியா வரும்னு நினைக்கறேன்.. “மூடிட்டு பின்னால வாடா..”ன்னா.. வரப் போறான்..

காலம் தாழ்த்தி வந்தாலும்.. எதிர்பார்ப்பை கூட்டும் விதமான பதிவுகள் தந்து.. அத்தோட.. இனி ரெண்டு வாரம் ஆகும்னு வேற அதிர்ச்சி கொடுத்திருக்கீங்க.. வேற வழி.. காத்திருப்போம்..

எமோஷனலா பல இடங்கள்.. !

ஜிவ்வுன்னு சில இடங்கள்..!!





__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@ Rotheiss
உங்களை தவிர எவரும் படிப்பதாக தோன்றவில்லை போலும் படித்து கருத்து பதிந்த உங்களுக்கு நன்றி

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

என் கையை பிடித்து அவரின் அன்னை அழாதேப்பா எங்களின் வலியை போன்றது தான் உன்னதும் என்று எனக்கு தெரியும்.அவன் உன்னை பற்றி அவ்வளவு தூரம் என்னிடம் சொல்லியிருக்கிறான் உனக்கும் அவனை ரொம்ப மரியாதை என்று எனக்கு புரிகிறது.உன் குரல் கேட்டாலோ இல்லை உன் ஸ்பரிசம் பட்டோ அவனுக்கு நினைவு திரும்பலாம் என்று மீண்டும் கூறி என் கண்ணீரை அவரின் கைகள் கொண்டு துடைக்கப்போனார் நான் பதறி அவரின் கையை தடுத்து எனது கர்சீப் எடுத்து தொடைத்தேன்.மீண்டும் டாக்டர்கள் வர மாட்டார்களா என்று அந்த ஐ சீ யு வை நோக்கி கொண்டே இருந்தேன்


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

விமானம் தரையிறங்கியதும் மும்பையின் பிரம்மாண்டத்தை கண்டு வியந்தேன்.அவரின் பெயர் பலகை தாங்கி கொண்டு ஒருவன் நின்றான்.எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வண்டி நேராக தாஜ் ஹோட்டல் சென்றது.பலமுறை டிவியில் மட்டுமே கண்ட ஹோட்டலில் நான் என்பதே வியப்பை தந்தது. ரிசெப்ஷனில் இருந்த பெண் எங்களின் தகவல்களை வாங்கிகொண்டு சார் உங்களுக்கு இரண்டு ரூம்கள் அல்லாட் செய்யப்பட்டுள்ளது என்றாள் அவரை பார்த்து.அவளிடம் அவர் எதற்கு இரண்டு ரூம்கள் வி கேன் அட்ஜஸ்ட் இன் எ சிங்கள் ரூம் என்றார். நான் இடைமறித்து இல்லை சார் எனக்கு தனியாகவே ஒரு ரூம் கொடுங்கள் என்றேன். அவள் சார் தி ரூம்ஸ் ஹாவ் இன்சைட் என்ட்ரி என்றாள் அண்ட் போத் ஆர் நெக்ஸ்ட் டு ஈச் அதர் என்றாள்,அவரின் முகத்தில் கோபம் தெரிந்தது போல உணர்ந்தேன் அவர் அவளிடம் இட்ஸ் ஓகே வென் இஸ் தி மீட் என்றார். சார் தி மீட் இஸ் ஷெட்யூல்ட் போர் 10.30 என்றாள்.தேங்க்ஸ் சொல்லி இருவரும் அவரவர் ரூமிற்குள் நுழைந்தோம்.ரூமை கண்ட நான் ஒரு நிமிடம் மெய்மறந்தே போனேன் அத்தனை பிரமிப்பு ஆனால் இருவரின் அறைகளுக்கும் உட்பக்கம் புகும் வழி மட்டுமே என்னை உறுத்தியது இருப்பினும் சில நொடிகளில் அதை மறந்தே போன நான் குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வெளியில் வரவும் என் ரூமில் அவர் அமர்ந்திருக்கிறார் என்னை அவர் குறுகுறு என்று பார்ப்பதாக தெரிந்தது அப்பொழுது தான் உரைத்தது நான் வெறும் துண்டை உடுத்திக்கொண்டிருந்தேன்.ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும் சார் வெயிட் இன் யுவர் ரூம் ஐ வில் பி ரெடி இன் பைவ் மினிட்ஸ் என்றதும் அவர் தயங்கி வெளியேறினார்.எனக்கு அவரை பார்த்து சங்கடம் தோன்றியது.அப்படி சொல்லியிருக்க கூடாதோ என்று தோன்றியது இருந்தாலும் நான் மிகவும் அன் கம்பர்டபில் ஆக பீல் செய்தது அவருக்கு புரிந்திருக்கும் என்றே நம்பினேன்.நான் உடைகளை மாற்றி அவரின் அறைக்குள் நுழைவதற்கு அடையாளமாக உள்கதவை ஒரு முறை தட்டி மே ஐ கம் இன் என்றேன்.எஸ் என்றவர் உன் அறைக்குள் வருவதற்கு முன் நானும் தட்டினேன் ஆனால் நீ குளித்துகொண்டிருந்ததால் என் சத்தம் கேட்டிருக்காது என்றார்.அவரின் குரலில் ஒரு கடுமையோ இல்லை ஏமாற்றமோ தெரிந்தது போல் எனக்கு தோன்றியது நான் பரவாயில்லை சார் மீட்டிங் போகலாமா சார் என்றேன் இன்னும் நேரம் இருக்கிறது சிறிது பேசலாம் உட்கார் என்றார் நான் ஒரு நிமிடம் யோசித்து அமர்ந்தேன் என்னை நோக்கி வந்தார்.......


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

KATHAI VERRY GOOD.BUT WRITE MORE PLS....



__________________
nada


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Nice tvl guy! Good narration

-- Edited by Basher on Monday 24th of December 2012 12:56:59 PM

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@ roynada
Thanks.the story nearing its completion pls bear with me for few more episodes

@basher
Thanks


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

கலங்கிய கண்களை தொடைக்கவும் யாரும் இல்லை என் மன போராட்டங்களை கண்டுகொள்ளவும் ஒருவரும் இல்லை.சுயபச்சாதாபம் இப்பொழுது சுயவெருப்பாக மாறியது. இந்த உலகமே வேண்டாமென்று தானே நான் இந்த விபத்தை தேடிக்கொண்டேன் இவர்களை யார் என்னை காப்பாற்றச்சொன்னது,எனக்கு எவரும் தேவையில்லை நான் என் வழி நோக்கி தானே செல்கிறேன் எல்லாவற்றுக்கும் மேலாக எவன் என்னவன் என்று எண்ணினேனோ அவனே அத்தகைய சொல்லை கேட்ட பின் எதற்கு இந்த வீண் முயற்சிகள் அனைத்து டியுப்களையும் அறுத்தெறிய என் கைகள் பரபரத்தது.வேகமாக அசைத்துப்பார்தேன் ஏதோ என் கையில் தட்டுப்பட்டதைப்போல உணர்ந்தேன்.......


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

என் ரூமிற்குள் சென்ற நான் சில நொடிகளில் தயாராகி அவனின் அறைக்குள் செல்ல அவன் கதவை மெதுவாக தட்டினேன். பதில் ஏதும் வர வில்லை மெதுவாக திறந்து எட்டிப்பார்த்தேன் அவனை அறையில் காணவில்லை பாத்ரூமில் இருந்து அவன் குளிக்கும் சத்தம் கேட்டது.திரும்பலாமா என்றெண்ணிய நான் அவன் வரட்டும் என்ன டிரஸ் போட வேண்டும் என்று சொல்லலாம் அவனுக்கு இது போன்ற மீட்டிங் புதிதல்லவா என்று அவனின் வரவுக்காக காத்திருந்தேன்.குளித்துவிட்டு வெறும் டவெல்லில் அவன் வெளியில் வந்தான் நான் இருப்பதை அவன் உணரவில்லை போலும். நான் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அவனின் உடல் சந்தனத்தால் இழைத்தது போல் இருந்தது என்ன ஒரு தேகம் ஆண்மகனின் உண்மையான உதாரணம் இவன் தான் போலும் என்றெண்ணினேன். செதுக்கி வைத்த மன்மதனின் சிலையில் குறை காணலாம் இவனின் உடலில் குறை காண்பது கடினம் என்று வியந்தேன் என் குறுகுறு பார்வை அவனுக்கு உரைத்ததோ என்னவோ சட்டென்று திரும்பியவன் நான் இருப்பதைக்கண்டதும் என்ன நினைத்தானோ என்னவோ சார் வெயிட் இன் யுவர் ரூம் ஐ வில் பி ரெடி இன் பைவ் மினிட்ஸ் என்றான்.எனக்கு ஒரு நிமிடம் அந்நியனாக உணர்ந்தேன் நான் அவன் அறையில் இருந்தது தவறா? என்று எனக்குள் ஒரு விவாதம் நடைபெற துவங்கியது,இருபுறமும் எனக்கு எதிராக பேசினார்கள் நான் குற்றவாளி கூண்டில்.அப்பொழுது மே ஐ கம் இன் என்று அவன் என் அறையை தட்டினான்.எஸ் என்ற நான் உன் அறைக்குள் வருவதற்கு முன் நானும் தட்டினேன் ஆனால் நீ குளித்துகொண்டிருந்ததால் என் சத்தம் கேட்டிருக்காது என்று சிறிது கோபத்திலேயே கூறினேன்அவன் பரவாயில்லை சார் மீட்டிங் போகலாமா என்றான் இன்னும் நேரம் இருக்கிறது சிறிது பேசலாம் உட்கார் என்றவாரே அவனை நோக்கி நடந்தேன். அவன் அருகில் சென்றமர்ந்தேன் அவன் என்னருகில் மிக பக்கத்தில் இருந்தான்.குளித்து விட்டு வந்த அவனின் நறுமணமும் அந்த சோப்பின் மனமும் சேர்ந்து ஒரு கிறக்கத்தை எனக்கு தந்தது நான் நிலைதடுமாற போகிறேன் என்று எனக்கே தெரிந்தது அவன் சார் ஆர் யு ஆல்ரைட் என்று கேட்கவும் வெடித்து விடலாமா என்றெண்ணினேன். நினைப்பதை மட்டும் அனைவரும் சொல்லிவிடும் துணிவு வந்து விட்டால் எவருக்குமே இந்த தவிப்பின் சுகம் தெரியாமல் இருந்துவிடுவார் என்று தான் இந்த தயக்கத்தை ஆண்டவன் தந்திருக்கிறார் போலும்.தயங்கியபடியே அவனிடம் வாட் டூ யு தின்க் அபௌட் மீ என்றேன்? உண்மையை சொல்லட்டுமா சார் என்று பீடிகை போட்டான் சும்மா சொல் என்று படபடப்புடன் காத்திருந்தேன்.


__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

தவிப்பின் சுகம்?

நல்ல வார்த்தைப் பிரயோகம்!!

ஆனால்.. எங்களை தவிக்க விடாதீர்கள்..!!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@Rotheiss
நன்றி.இன்னும் சில பதிவுகள் மட்டுமே பிறகு நோ தவிப்பு

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

ஐ சீ யு வை நோக்கி கொண்டே இருந்த நான் இதெற்கெல்லாம் நான் தான் காரணம் என்று இவர்களுக்கு தெரிந்தால் என்னாகும்.என்னை இதே போன்று ஆறுதல் சொல்லாமல் என்னுடைய ஒரே மகனை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டாயே என்று சபிக்க மாட்டார்களா?
ஆனால் இதெற்கெல்லாம் நான் தான் காரணமா?,அவர் தான் நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்து விட்டார்,அவருக்கு முன்கோபம் அதிகம் தான் அது இந்தளவுக்கு கொண்டு செல்லும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை தெரிந்திருந்தால் அவரிடம் வேறு விதமாக பேசியிருப்பேன்.நான் மட்டும் தான் இப்படியா இல்லை எல்லாருமே இப்படி தானா? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்? அனைவருக்கும் ஒரு சந்தர்பத்திலாவது வரும் போல...




__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

சிறிது பேசலாம் என்று சொல்லியவர் என்னருகில் வந்தமர்ந்தார்.மிகவும் ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தார்.நான் அவரிடம் சார் ஆர் யு ஆல்ரைட் என்று தயங்கி தயங்கி கேட்டேன்,என் கேள்வி அவரை மேலும் தர்மசங்கடம் ஆகியதா என்று தெரியவில்லை ஆனால் அவர் என்னை நோக்கி வாட் டூ யு தின்க் அபௌட் மீ என்றார்? உண்மையை சொல்லட்டுமா சார் என்று பீடிகை கேட்டேன் சும்மா சொல் என்று படபடப்புடன் கேட்டார்.
உங்களின் அறிவுக்கும் அழகுக்கும் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் என்று சொல்லவும் நீ என்னை நக்கல் தானே பண்ணுரே என்றார். பார்த்தீங்களா இப்ப தானே சொன்னேன் நீங்க பெரிய அறிவாளி சார் என்று சொல்லவும் அவர் என் காதை பிடித்து திருகினார். சார் விடுங்க சார் என் டிரஸ்லாம் கசங்கிட போகுது என்றேன்.அதுக்கு ஒரு வழி இருக்கு என்று அவர் சொல்லவும் ஆள விடுங்க சார் நாம மீட்டிங் போவோம் என்றேன். கண்டிப்பாக போகனுமா என்று என்னை நோக்கி பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.ஆமா நான் அதுக்கு தான் வந்திருக்கிறேன் என்று அழுத்தமாக சொல்லவும் அவர் ஹலோ ஹல்லோ நாங்களும் அதுக்கு தான் வந்துருக்கிறோம் என்று சொல்லியவாரே வெளியில் வந்தார். மீட்டிங் ஹால் சென்றதும் தான் தெரிந்தது எத்தனை பெரிய பெரிய மனிதர்கள் மற்றும் பல தரப்பட்ட யூனியன் லீடர்கள் என்று ஆனால் நான் பார்த்த வரை அனைவருமே தங்கள் முதலாளிகளை ஒரு விரோதி போல தான் பாவித்தார்கள் மீட்டிங் மதிய உணவிற்கு பிரேக் விட்டதும் அவரை தேடினேன் அவர் யாருடனோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்,நான் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடவும் ஹொவ் இஸ் தி மீட்டிங் என்று என்னருகே வந்தார் கொயிட் இன்றஸ்டிங் என்றேன். குட் மதியத்திற்கு மேல் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.நாங்கள் இருவரும் நண்பர்களைப்போல பேசுவதைக்கண்ட பிற யூனியன் லீடர்கள் என்னை அதிசயமாக கண்டனர். அவர் நகர்ந்ததும் என்னை மொய்த்துக்கொண்டனர். நானும் அவரும் நண்பர்களா?சொந்தமா?வேறேனும் உறவா? என்று கேட்கவும் நான் இல்லை அவர் நல்ல மாதிரி யாரையும் தொழிலாளி மாதிரி ட்ரீட் பண்ண மாட்டார் என்றேன்.நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் என்றனர்.அவர்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான் என்றெண்ணினேன்.மதிய இடைவேளைக்கு பிறகு துவங்கிய கூட்டம் மாலை 6 மணி வரை நீண்டது. இரவு எட்டு மணிக்கு அனைவரும் டின்னர்க்கு சென்றோம். இட் வாஸ் எ ஹை கிளாஸ் பார்ட்டி அனைத்து வகை மதுபானங்களும் செர்வ் செய்யப்பட்டது. எனக்கு அந்த வாசனையே ஆகாது என்பதால் நேராக உணவருந்த சென்றுவிட்டேன்.நான் சாப்பிட்டு முடித்து இவரை தேடினால் இவர் இன்னும் கையில் கோப்பையுடன் நான் மெதுவாக அவரிடம் சென்று சார் போகலாமா என்றேன் இரு இரு இப்போ தான் மூணு ரவுண்டு முடிஞ்சிருக்கு என் லிமிட் ஐந்து என்றார் சார் வேண்டாம் நாளைக்கு மீட்டிங் இருக்கு என்றேன்.ஐ நோ ஸ்வீட் ஹார்ட் என்றார். அதோடு விடாமல் 5,6,7 என்று முன்னேறிக்கொண்டே இருந்தார்.ஒரு வழியாக அவரை சாப்பிட வைத்து ரூமிற்குள் நுழையவும் வ்வா என்று சத்தமிட்டு பாத்ரூமிற்குள் ஓடியவர் கதவை திறப்பதற்குள் அனைத்தையும் வாந்தி எடுத்தார் ரூம் சர்வீஸ் அழைத்து கிளீன் செய்ய சொல்லவும் சார் முப்பது நிமிடம் ஆகும் அவரை உங்கள் ரூமில் படுக்க வையுங்கள் சார் என்றார். அவர் சொல்வது தான் சரியாக பட்டது எனக்கும். வரை மெதுவாக இழுத்துக்கொண்டு வந்தேன் பெட்டை பார்த்ததும் தொப்பென்று அதில் சரிந்தார். அவரின் உடைகளை மாற்றி அவரை படுக்க வைத்தேன்,என் பெயரை சொல்லி அழைத்தார். நான் அருகில் சென்றதும் யு ஆர் சோ ஸ்வீட் டியர் ஐ லவ் யு என்றார். நான் திக்கித்து நிற்கவும் அவர் அப்படியே கண் மூடி தூங்கினார்,என் தூக்கம்?


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நான் திக்கித்து நிற்கவும் அவர் அப்படியே கண் மூடி தூங்கினார்,என் தூக்கம்?///////////



ஒருவழியா கட்டிலுக்கு வந்தாச்சு.................ம்ம்...........

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

He sleep ,but me ? wait for next.........



__________________
nada


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@thamizhan
மீண்டு(ம்) வந்ததற்கு நன்றி
@roynada
நன்றி

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

ஏதோ என் கையில் தட்டுபட்டது போன்று உணர்ந்தேன் அது நிஜமா இல்லை பிரமையா என்று புரியவில்லை ஆனாலும் மெதுவாக அதை அசைத்திட முயன்றேன்.யாரோ என் பக்கம் ஓடி வந்தார்கள் சார் சார் என்று அழைத்தார்கள் நான் முனகினேன் அது அவர்களுக்கு கேட்டிருக்கும் போல டாக்டர் டாக்டர் என்று கூவியபடியே அந்த நர்ஸ் ஓடிப்போனாள்.எனக்கு நினைவு திரும்பிவிட்டது என்பதை சொல்ல ஓடினாளா என்று புரியவில்லை.அவர்கள் திரும்பிவரும் வரை எனக்கு இந்த சக்தி இருக்கவேண்டுமே என்று தோன்றியது.எனக்கு தூக்கம் வருவதை போன்றும் உணர்கிறேன் அதை நோக்கி செல்லவும் ஆசை ஆசையாக இருக்கிறது.


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

படபடப்புடன் காத்திருந்த என்னைப் பார்த்து உங்களின் அறிவுக்கும் அழகுக்கும் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் சார் என்று சொன்னான். நீ என்னை நக்கல் தானே பண்ணுறே என்றேன். பார்த்தீங்களா இப்ப தானே சொன்னேன் நீங்க பெரிய அறிவாளி சார் என்று சொல்லவும் அவன் காதை பிடித்து திருகினேன். சார் விடுங்க சார் என் டிரஸ்லாம் கசங்கிட போகுது என்றான்.அதுக்கு ஒரு வழி இருக்கு என்று நான் சொல்லவும் ஆள விடுங்க சார் நாம மீட்டிங் போவோம் என்றான். கண்டிப்பாக போகனுமா என்று அவனை நோக்கி சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.ஆமா நான் அதுக்கு தான் வந்திருக்கிறேன் என்று அவன் அழுத்தமாக சொல்லவும் மெலிதாக எட்டிப்பார்த்த கோபத்துடன் ஹலோ ஹல்லோ நாங்களும் அதுக்கு தான் வந்துருக்கிறோம் என்று சொல்லியவாறே வெளியில் வந்தோம்.பல மீட்டிங்குகளை பார்த்திருந்தாலும் முதன்முறையாக ஒரு முதலாளி என்று பொறுப்புடன் அமரும் முதல் மீட்டிங் அல்லவா அதனால் சிறிது உற்சாகத்துடனே கலந்து கொண்டேன்.மதிய உணவு இடைவேளையில் தான் அவனை பார்க்க முடிந்தது மிக உற்சாகமாக அவனும் இருந்ததாகவே எனக்கு தோன்றியது அவன் அருகில் சென்று ஹொவ் இஸ் தி மீட்டிங் என்று கேட்க அவன் கொயிட் இன்றஸ்டிங் சார் என்றான். குட் மதியத்திற்கு மேல் இன்னும் நன்றாக இருக்கும் என்றேன்.நாங்கள் இருவரும் சகஜமாகபேசுவதைக்கண்ட பிற யூனியன் லீடர்கள் எங்களை வித்தியாசமாக கண்டனர். மாலை மீட்டிங் முடிந்த சிறிது நேரத்தில் பார்ட்டி துவங்கியது.நான் காலேஜ் லைஃப்பில் ட்ரிங்க்ஸ் அடிக்க ஆரம்பித்தால் ஐந்து ரௌண்ட்ஸ் தான் அதை தாண்டினால் நான் ஓம்லெட் தான் ஆனால் இன்று இவனுடன் இருக்கப்போகிறோம் என்கிற மிதப்பில் கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடனே ட்ரிங்க்ஸ் அடிக்க ஆரம்பிதேன். அவன் என்னருகில் வந்து சார் போகலாமா என்றான் இரு இரு இப்போ தான் மூணு ரவுண்டு முடிஞ்சிருக்கு என் லிமிட் ஐந்து என்றேன் சார் வேண்டாம் நாளைக்கு மீட்டிங் இருக்கு என்றேன்.ஐ நோ ஸ்வீட் ஹார்ட் என்றபடியே மடக் மடக் என்று சில ரௌண்ட்ஸ் முன்னேறினேன்.என்னை அவன் அங்கிருந்து வலுக்கட்டாயமாக என்னை சாப்பிட வைத்து ரூமிற்குள் இழுத்து சென்றான். எனக்கு வயிற்றை குமட்டுவது போல் தோன்றியது அவனுக்கு தெரியாமல் பாத்ரூமிற்குள் சென்றிட பகீரத முயற்சி செய்தேன் ஆனால் கதவின் அருகிலேயே பெரிய ஓம்லெட் அடித்தேன்.எனக்கு கூச்சமாக இருந்தது அதற்கு பின் அவன் பரபரப்பாக ஏதேதோ செய்தான் என்னை அவன் அறைக்குள் அழைத்து செல்வதைப்போல தோன்றியது இன்று இரவு அவனிடம் நிறைய பேசவேண்டும் என் மனதை கொட்டவேண்டும் என்றெல்லாம் எண்ணிய நான் அங்கிருந்த .பெட்டை பாரத்ததும் அப்படியே அதில் சரிந்தேன்.அப்படியே உறங்கியும் போனேன் ஆனால் உறக்க கிறக்கத்தில் அவனிடம் யு ஆர் சோ ஸ்வீட் டியர் ஐ லவ் யு என்று என் மனதில் உள்ளதை சொல்லியேவிட்டேன்.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் எழுந்த பொழுது காலை மணி ஏழு ஆகிவிட்டது தலை கிண்ணென்று வலித்தது ச்சே இந்த ட்ரிங்க்ஸ் சாப்பிட்டாலே இப்படி தான் என்று வழக்கம் போல முனகி கொண்டே எழுந்த என்னை பார்த்து குட் மார்னிங் சார் என்ற படி என்னருகில் வந்தான் அவன். ஹே நீ என்ன செய்கிறாய் இங்கு என்றேன் ஏன் சொல்ல மாட்டேன்க ராத்திரி நீங்க பண்ண அலம்புக்கு இதுக்கு மேலயும் சொல்வீங்க என்றதும் தான் உணர்ந்தேன் நான் அவன் ரூமில் இருப்பதையும் ராத்திரி வாந்தி எடுத்ததையும் ச்சே என் மானமே போச்சே என்று தலையில் அடித்துக்கொண்டேன்.இப்படி தண்ணி அடிப்பானேன் மறுநாள் காலையில் வருந்துவானேன் என்று இலவச அட்வைஸ் செய்தான்.டேய் நான் எப்பவும் ஸ்டெடி தான் நேத்து தான் நீயிருந்த தைரியத்தில் கொஞ்சம் ஜாஸ்தி ஆகி விட்டது என்றேன்.நீங்கள் ஜாஸ்தி ரௌண்ட்சில் மட்டுமில்லை என்றபடியே என் கண்களை உற்றுப்பார்த்தான் அவன் கண்களின் வீரியத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்தபடியே ஏன் ஏதாவது நான் உளறினேனா என்று கேட்டேன்.அது உளறலா இல்லை உண்மையா என்று தெரியவில்லை என்று அவன் கூறினான்.ஏதோ சொல்லி வசமாக மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் புரிந்தது.இரு நான் குளித்து விட்டு வருகிறேன் என்ற படியே என் ரூமை நோக்கி விரைந்தேன் அப்பொழுது தான் உரைத்தது நான் நைட் ட்ரஸில் இருப்பதை நான் டிரஸ் மாறிய ஜாபகம் இல்லை கண்டிப்பாக அவன் தான் எனக்கு டிரஸ் மாற்றியிருக்க வேண்டும் அந்த நினைவே என்னை சிலிர்க்க செய்தது,என்னவன் என் உடலை ஸ்பரிசித்தான் என்பதே எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தை தந்தது.நான் சிறிது நினைவில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக் இருந்திருக்கும் எல்லாம் இந்த ட்ரிங்க்ஸ் செய்த வேலை என்று சபித்துக்கொண்டேன் ஆனால் அந்த ட்ரிங்க்ஸ் தான் இத்தனை பேருதவியும் செய்தது என்பதும் உண்மை தானே என்றும் உரைத்தது.குளித்து முடித்து அவனை இண்டர்காமில் அழைத்தேன் கதவை தட்டியபடியே வந்தான்..என்னவன் இன்று செம க்யூட்டாக இருந்தான் அப்படியே ஜொல் லிட்டர் கணக்கில் வழிந்தது இமைத்த கண் மூடாமல் அவனையே பார்த்தபடியிருந்த என்னை, சார் என்று உலுக்கினான். மீண்டும் அவன் ஸ்பரிசம் இப்பொழுது என் சுயநினைவிலேயே....


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

செம க்யூட்

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அவன் தான் எனக்கு டிரஸ் மாற்றியிருக்க வேண்டும் அந்த நினைவே என்னை சிலிர்க்க செய்தது,என்னவன் என் உடலை ஸ்பரிசித்தான் என்பதே எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தை தந்தது///////அடடடா.......என்னா பீலிங்கு.............

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வர்க்க பேதம் கடந்த காதல் அழகாக இருக்கிறது..

அப்படி ஒரு அனுபவம் எனக்கும் வாய்த்திருக்கிறது.. அப்போது வட இந்தியாவில் வேலை.. பாஸின் மகனிடம் நான் ரிப்போர்ட் செய்ய வேண்டி வரும்.. என் வயதொத்த அந்த மார்வாடியிடம் ரிப்போர்ட் கொடுக்கும் போது.. அவ்வப்போது ஏற்படும் ஸ்பரிசங்கள்.. ஆயிரம் மெகா வாட் மின்சாரம்..!!!

ஆனாலும்.. உங்கள் கதை மாந்தர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்!!

Lost in Nostalgia... buddy!!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@Basher

நன்றி

@ thamizhan
நன்றி

@Rotheiss
ஆஹா ஒரு புதிய கதை வருகிறது போலும்....



-- Edited by tvlguy on Tuesday 8th of January 2013 07:32:18 PM

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

நான் இப்படி பலவாறு யோசித்துக்கொண்டே ஐ.சி.யு வையும் ஒரு கண் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.நான் அங்கு பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீர் பரபரப்பை கண்டேன்,நர்ஸ் டாக்டரை நோக்கி ஓடுவதும் அனைவருமாக மீண்டும் ஐ.சி.யு க்குள் நுழைவதையும் கண்டேன். என் மனம் வேகமாக அடிக்கத்துவங்கியது.என் மனதில் தோன்றிய அனைத்து தெய்வங்களையும் வேண்டத்துவங்கினேன்.எனக்கென்னவோ மனதில் ஒருவித பயம் தொற்றிகொண்டது.மனம் மட்டுமல்லாமல் வாயும் சேர்ந்து அவர்க்கு ஒன்றும் இருக்காது என்று புலம்ப தொடங்கியது


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

அவர் போதையில் உளறினாரா இல்லை ஆழ்மனத்தின் வெளிப்பாடா என்று எனக்கு யூகிக்க முடியவில்லை.அந்த அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு சிறிது நேரம் பிடித்தது.இவர் என்ன சொன்னார்?என்னிடமா சொன்னார்?அவரின் வார்த்தையில் ஒரு உண்மை தெரிந்ததே எனக்கு தலையே வெடிக்கும் போல இருந்தது.அமைதியாக தூங்கும் அவரைப்பார்த்தேன் மிகவும் களைப்பாக தூங்கினார் ஆனாலும் ஏதோ ஒரு அமைதி தெரிந்தது அவரின் சாந்தமான முகத்தில்.இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.ஆனாலும் ஒரு நிமிடம் மனம் குதூகலிக்கவே செய்தது.அப்படியே ஆழ்ந்த சிந்தனையில் தூங்கியும் போனேன்.எப்பொழுதும் போல் அதிகாலையிலேயே எழுந்த நான் அவர் இன்னும் தூங்குவதை கண்டு ஒரு நிமிடம் ரசித்துப்பார்தேன் ஆனாலும் மனம் என்னவோ செய்தது.சில மணித்துளிகள் கழிந்து அவர் எழுந்தார். குட் மார்னிங் சார் என்ற படி அவரருகில் சென்றேன். ஹே நீ என்ன செய்கிறாய் இங்கு என்றவரிடம் ஏன் சொல்ல மாட்டேன்க ராத்திரி நீங்க பண்ண அலம்புக்கு இதுக்கு மேலயும் சொல்வீங்க என்றேன் நான். அவர் தலையில் அடித்துக்கொண்டார்.இப்படி தண்ணி அடிப்பானேன் மறுநாள் காலையில் வருந்துவானேன் என்று பிரசங்கம் செய்தேன்.டேய் நான் எப்பவும் ஸ்டெடி தான் நேத்து தான் நீயிருந்த தைரியத்தில் கொஞ்சம் ஜாஸ்தி ஆகி விட்டது என்றார்.நீங்கள் ஜாஸ்தி ரௌண்ட்சில் மட்டுமில்லை என்றபடியே அவர் கண்களை உற்றுப்பார்த்தேன் அவர் தலைகுனிந்தபடியே ஏன் ஏதாவது நான் உளறினேனா என்று கேட்கவும்.அது உளறலா இல்லை உண்மையா என்று தெரியவில்லை என்று நான் கூறினேன்.ஏதோ நினைத்தவராக .இரு நான் குளித்து விட்டு வருகிறேன் என்ற படியே அவர் ரூமை நோக்கி விரைந்தார்.சிறிது நேரம் கழித்து அவர் என்னை இண்டர்காமில் அழைத்தார்,கதவை தட்டிக்கொண்டு அவரின் அறைக்குள் நுழைந்தேன்.மிக அருமையான உடையில் இருந்தார்.உடைகள் மட்டும் பல ஆயிரங்களை தாண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.என்னையே உற்றுப்பார்த்த அவரிடம் சார் என்று உலுக்கினேன் சுதாரித்த அவர் என்னைபார்த்து நான் என்ன சொன்னேன் நேற்று என்று என்னிடம் கேட்டார்..எனக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது என்று புரியவில்லை.இருந்தாலும் துணிவை வரவைத்து அவர் நேற்றிரவு என்னிடம் சொன்னதை அப்படியே சொன்னேன்.அதற்கு அவர் அப்பாடா நான் எங்கே சொல்லவில்லையோ என்று நினைத்தேன் என்று மிக கூலாக சொன்னதும் நான் அவரை ஆச்சர்யமாக பார்த்தேன். நிஜமாக தான் இதை எப்படி உன்னிடம் சொல்வது என்று தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன் நல்லவேளை சொல்லிவிட்டேன் என்றார் அமைதியாக.எனக்கு தெரியும் உனக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று அதை தைரியமாக ஒப்புக்கொள் என்றார்.நான் ஒன்றும் பேசாமல் சார் நாம அப்புறமா பேசலாம் மீட்டிங்கிற்கு நேரமாகி விட்டது என்று கூறி அறையை விட்டு வெளியேறினேன்.


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அப்பா........ஒருவழியா சொல்லியாச்சு,இனிமே தான் கத சூடு பிடிக்க போகுது ன்னு நெனைக்கிறேன்

__________________



புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

கதை இப்ப ROMANTIC MOOD'இல் பயணம் செய்வதால் ரொம்ப சுவாரசியமா இருக்கு... அதனாலையே "இன்று" பகுதிய யாரும் INTEREST எடுத்து படிக்க மாட்டங்கன்னு DECIDE பண்ணிடீங்களா என்ன?? "இன்று" பகுதி ரொம்ப DULLa போற மாதிரி தெரியுது... "அன்று", "இன்று" ரெண்டு பகுதியும் ஒரே சீரான வேகத்தில் பயனிச்சா இன்னும் சுவாரசியமா இருக்கும் நண்பா....

கதையோட SLANG LAST WEEK நீங்க POST பண்ண எபிசொட்'ல நல்லா REALISTICaa இருந்தது... ஆனா இப்ப நீங்க POST பண்ண எபிசொட்'ல பழைய SLANGum.. நார்மலா நம்ம பேசற SLANGum மாறி மாறி வரது கொஞ்சம் சுவராசியத்த கெடுக்குது...

குறிப்பா சொல்லனும்னா நா கீழ குறிப்பிட்டுள்ள line'a நார்மலா நம்ம பேசற SLANGல எழுதிருக்கீங்க...

"நீங்கள் ஜாஸ்தி ரௌண்ட்சில் மட்டுமில்லை என்றபடியே அவர் கண்களை உற்றுப்பார்த்தேன் அவர் தலைகுனிந்தபடியே ஏன் ஏதாவது நான் உளறினேனா என்று கேட்கவும்."

அதுக்கான replya மறுபடியும் பழைய SLANGல எழுதிருக்கீங்க...

"அது உளறலா இல்லை உண்மையா என்று தெரியவில்லை என்று நான் கூறினேன்."

இந்த line 'la ரெண்டு SLANGum mix ஆகிவருது

"ஹே நீ என்ன செய்கிறாய் இங்கு என்றவரிடம் ஏன் சொல்ல மாட்டேன்க ராத்திரி நீங்க பண்ண அலம்புக்கு இதுக்கு மேலயும் சொல்வீங்க என்றேன் நான்."

இதை மட்டும் கொஞ்சம் CORRECT பண்ணீங்கன கதை இன்னும் சுவாரசியமா இருக்கும் நண்பா... [இது என்னோட தனிப்பட்ட கருத்து...]

அப்பறம் கதைய பதியரப்ப ஒரே பெரிய பத்தியா பதியாம... சின்ன சின்ன பத்தியா பிரிச்சி பதிஞ்சா படிக்கறதுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் நண்பா...

பின்குறிப்பு: நா OVERaa பேசிருந்தா சொல்லுங்க... Next time'la நா என்னோட கருத்த பதியும் முறையை மாத்திக்கிறேன் நண்பா....



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ஒரு வழியா மேட்டருக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கறேன்..

இனி.. கச்சேரி ஆரம்பம்?!

Cupid Kutty

////"அன்று", "இன்று" ரெண்டு பகுதியும் ஒரே சீரான வேகத்தில் பயனிச்சா இன்னும் சுவாரசியமா இருக்கும் நண்பா....////  வரவேற்கத் தகுந்த கருத்து!

Slang-னு நீங்க மீன் பண்றது.. உரைநடைத்தமிழ், பேச்சு வழக்குத் தமிழ் பற்றியா??



__________________


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

Rotheiss wrote:

ஒரு வழியா மேட்டருக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கறேன்..

இனி.. கச்சேரி ஆரம்பம்?!

Cupid Kutty

////"அன்று", "இன்று" ரெண்டு பகுதியும் ஒரே சீரான வேகத்தில் பயனிச்சா இன்னும் சுவாரசியமா இருக்கும் நண்பா....////  வரவேற்கத் தகுந்த கருத்து!

Slang-னு நீங்க மீன் பண்றது.. உரைநடைத்தமிழ், பேச்சு வழக்குத் தமிழ் பற்றியா??


 நான் முன்பொருமுறை எந்த SLANGai பற்றி குறிப்பிட்டு கருத்து பதிந்தேன்னோ அதே SLANGai இப்போதும் குறிப்பிட்டு உள்ளேன் நண்பா.... இந்த கதையின் ஆசிரியரும் மேலும் சில குழும நண்பர்களும் நான் குறிப்பிட்ட கருத்தை புரிந்துக்கொண்டு பதில் அளித்த நிலையில் உங்களுக்கு ஏன் இந்த DOUBT நண்பா??

அதுலையும் ஸ்கூல் படிக்கிறப்ப தமிழ்ல எனக்கு பிடிக்காத SUBJECTukal - "செய்யுள்", "உரைநடை" பற்றியெல்லாம் எனக்கு மறுபடியும் நியாபகபடுத்தினது... ஒரு பெரும் குற்றம் (LOL)!!!!
இதை வண்மையாக கண்டித்து மறுபடியும் கல்யாண் JEWELLERS... எங்கய்யா பிரபு... கூப்பிடுங்க உடனே.... முடிஞ்சா விக்ரம் பிரபுவையும் கும்கி COSTUME'லையே போராட்டத்துல கலந்துக்க சொல்லுங்க... அப்பத்தான் போராட்டம் நல்லா சூடு பிடிக்கும்!!!!!!!          
         


__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Cupid Kutty

///முடிஞ்சா விக்ரம் பிரபுவையும் கும்கி COSTUME'லையே போராட்டத்துல கலந்துக்க சொல்லுங்க... அப்பத்தான் போராட்டம் நல்லா சூடு பிடிக்கும்!!!!!!!////    

பிடிக்கும் பிடிக்கும்.. இல்ல.. ஏன் பிடிக்காதுன்னேன்.. அவன் அதே காஸ்ட்யூம்ல வந்தா போராட்டதுக்கு வலு சேர்த்த மாதிரியும் ஆச்சு.. அவன சைட் அடிச்சி ஜொள்ளு விட்ட மாதிரியும் ஆச்சு..

என்னே... உங்கள் உயர்ந்த போராட்ட மனப்பான்மை!!

வாழ்க உமது.. வலதுசாரி இடதுசாரி.. சிந்தனை!!!!



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நல்ல கதை பாராட்ட வார்த்தையில்லை நன்று

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@Cupid Kutty
உங்களின் கருத்திற்கு நன்றி. மேலும் தாங்கள் கூறியவற்றை கூடியவரை வரும் பதிவுகளில் சரி செய்ய முயல்கிறேன்

@Rotheiss

கச்சேரி இருக்கு ஆனா என்ன கச்சேரின்னு பொறுத்திருந்து பாருங்க

இன்று பகுதியில் ஒருவன் கோமாவில் இருக்கிறான் இன்னொருவன் ஆஸ்பத்திரியில் இவனின் உடல்நிலை பற்றி அறிய காத்திருக்கிறான் அதில் மேற்கொண்டு எழுத பெரிதாக இல்லாததால் தான் மிக சுருக்கமாக எழுதுகிறேன்.

@Dinesh
நன்றி



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

இன்று

சில நிமிடங்களில் மீண்டும் பரபரப்பும் சத்தங்களும், என்னை சுற்றி டாக்டர்கள். என்னை பெயர் சொல்லி அழைக்கிறார்கள் நான் கண்ணை திறக்க முயல்கிறேன் ஏனோ இருட்டாகத்தான் தெரிகிறது.ஆனாலும் இப்பொழுது கொஞ்சம் தெளிவாக கேட்கிறது அவர்களின் அழைப்பும் அவர்களின் அசைவையும் உணர்கிறேன் என் கையை மீண்டும் அசைக்கிறேன் அங்கிருந்து குட் கண்ணை திறந்து பாருங்கள் என்று மீண்டும் என் பெயரை கூவி அழைக்கிறார்கள். நான் மிகவும் கடினப்பட்டு கண் திறக்கிறேன்.........



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

அன்று

அவனின் ஸ்பரிசம் தந்த தைரியமும் அவனின் அருகாமையும் கொஞ்சம் மிதப்பை தந்தது.அவனைபார்த்து நான் நேற்று உன்னிடம் என்ன சொன்னேன் என்று கேட்டேன் அவன் மிகவும் சங்கடமாகி பின் நீங்கள் என்னைப்பார்த்து யு ஆர் சோ ஸ்வீட் டியர் ஐ லவ் யு என்று சொன்னீர்கள் என்றான். அப்பாடா நான் எங்கே சொல்லவில்லையோ என்று நினைத்தேன் என்று மிக கூலாக அவனிடம் நான் சொன்னதும் அவன் என்னை ஆச்சர்யமாக பார்த்தான். நிஜமாக தான் இதை எப்படி உன்னிடம் சொல்வது என்று தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன் நல்லவேளை சொல்லிவிட்டேன் என்றேன் மீண்டும் .எனக்கு தெரியும் உனக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று அதை தைரியமாக ஒப்புக்கொள் என்றேன் .அவன் ஒன்றும் பேசாமல் சார் நாம அப்புறமா பேசலாம் மீட்டிங்கிற்கு நேரமாகி விட்டது என்று கூறி அறையை விட்டு வெளியேறினான்.ஒரு நிம்டம் என்று அவன் கையை பிடித்து இழுத்து அவனின் இதழ்களில் ஒரு முத்தம் கொடுத்தேன்.அவனின் அதிர்ச்சி அப்பட்டமாக அவனின் முகத்தில் தெரிந்தது.அவன் திமிரவில்லை மறுக்கவில்லை ஆனால் மெதுவாக என்னைப்பிடித்து தள்ளினான் டோன்ட் யு ஹவ் பேசிக் மேனர்ஸ் என்று பொங்கியவனின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டது நான் மிரண்டுப்போனேன்.ஏண்டா உனக்கு என்னை பிடிக்கவில்லையா என்றேன் பிடித்திருந்தால் முத்தம் கொடுப்பீர்களோ என்றான். அவனின் கண்களில் ஒரு வெறுப்பை கண்டேன்.என்னைப்பார்க்க பிடிக்காமல் வெளியேறினான். நான் அவசரப்பட்டுவிட்டேனோ என்று கலங்கினேன்.அவனின் முகம் பார்க்கவே எனக்கு கூசியது,ஒரு நிமிட சலனத்தில் அசிங்கப்படுதிக்கொண்டேனோ என்னையே என்று எண்ணினேன்.அன்றைய செச்சென்ஸ் ஒன்றுமே மண்டையில் ஏறவில்லை. மாலை மீட்டிங் முடிந்து ஊர் திரும்பும் நேரம் வந்தது.அவன் அறைக்குள் சென்றவன் சில நிமிடங்களிலே வந்தவன் நான் கீழே ரிசெப்ஷனில் வெயிட் செய்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறினான்.நான் பிரமை பிடித்தது போல ரூமில் தவித்தேன்.



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

So sad buddy..

ஒரு உம்மா கொடுத்ததுக்கு இவ்வளவு அக்கப்போரா??? ஆனாலும் அந்த யூனியன் லீடருக்கு இவ்வளவு ஆகாதுங்க..

எனிவே.. அதுக்குப் பின்னால என்ன காரணம் இருக்கோ.. ???

சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லுங்க!!

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம்
சொல்லுங்க!!

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இந்தாளு மேலையும் தப்பிருக்கு..............,திடிர்ன்னு முத்தம் கொடுத்தா.........எப்படி ரியாக்ட் பண்றது

__________________



புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

Manager இந்த விஷயத்துல ரொம்ப FAST தான்.... Union Leader அவரை அடிக்காம விட்டாநேனு சந்தோஷ படனும்....

@tvlg அவர்களுக்கு,

என் கருத்தை ஏற்றுகொண்டமைக்கு நன்றி நண்பா!!! 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

Rotheiss wrote:

Cupid Kutty

///முடிஞ்சா விக்ரம் பிரபுவையும் கும்கி COSTUME'லையே போராட்டத்துல கலந்துக்க சொல்லுங்க... அப்பத்தான் போராட்டம் நல்லா சூடு பிடிக்கும்!!!!!!!////    

பிடிக்கும் பிடிக்கும்.. இல்ல.. ஏன் பிடிக்காதுன்னேன்.. அவன் அதே காஸ்ட்யூம்ல வந்தா போராட்டதுக்கு வலு சேர்த்த மாதிரியும் ஆச்சு.. அவன சைட் அடிச்சி ஜொள்ளு விட்ட மாதிரியும் ஆச்சு..

என்னே... உங்கள் உயர்ந்த போராட்ட மனப்பான்மை!!

வாழ்க உமது.. வலதுசாரி இடதுசாரி.. சிந்தனை!!!!

@ Rothesis

ஏதோ நாட்டுக்கு மக்களுக்கும்.. நம்ம மக்களுக்கும் என்னால முடுஞ்ச ஒரு "குட்டி" கும்கி சேவை...

ஹலோ.. ஹலோ... போராட்டமே உங்களுக்கு எதிராத்தான்... நீங்க விட்ற ஜொள்ள பார்த்தா... நீங்க completaa surrender ஆகி விக்ரம் பிரபு'வுக்கு மலர்செண்டு கொடுத்து வரவேற்பீங்க போல??

First அம்மாகிட்ட(CM) சொல்லி விக்ரம் பிரபு'வுக்கு BLACK CATS SECURITY PROTECTION தர சொல்லணும்...     




__________________


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

Rotheiss wrote:

So sad buddy..

ஒரு உம்மா கொடுத்ததுக்கு இவ்வளவு அக்கப்போரா??? ஆனாலும் அந்த யூனியன் லீடருக்கு இவ்வளவு ஆகாதுங்க..

எனிவே.. அதுக்குப் பின்னால என்ன காரணம் இருக்கோ.. ???

சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லுங்க!!


 

அதான... இதே நீங்களா இருந்திருந்தா கிஸ் பண்ண Managera திரும்ப கிஸ் பண்றேன் இங்கரபெருல அவர் உதட்ட ரத்த கலறி ஆக்கி... Hospital'la Stiches போடுற அளவுக்கு அன்பு பாராட்டி இருப்பீங்க....

எல்லாரையும் உங்கள மாதிரியே நினைக்காதீங்க நண்பா... நாட்ல சில நல்ல குட்டிகளும் இருக்காங்கன்னு மறந்துடாதீங்க....              



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@Rotheiss
அண்ணா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

@Rajspr
நன்றி உங்களின் ஆர்வத்திற்கு

@thamizhan
நன்றி யூனியன் லீடர் பக்கம் நின்றதற்கு

@Cupid Kutty
உங்களின் கருத்தை ஏற்காவிட்டால் அப்புறம் எனக்கெதிராகவும் புரட்சிபோராட்டம் துவங்கி விடுவீர்கள் எதற்கு வம்பு

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

@Rotheiss
அண்ணா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

@Rajspr
நன்றி உங்களின் ஆர்வத்திற்கு

@thamizhan
நன்றி யூனியன் லீடர் பக்கம் நின்றதற்கு

@Cupid Kutty
உங்களின் கருத்தை ஏற்காவிட்டால் அப்புறம் எனக்கெதிராகவும் புரட்சிபோராட்டம் துவங்கி விடுவீர்கள் எதற்கு வம்பு

__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard