Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகத்தை புதுப்பிக்கும் "புத்தகம்"....


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
அகத்தை புதுப்பிக்கும் "புத்தகம்"....
Permalink   
 


பொதுவாக இங்கே இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வாசிப்பு பழக்கம் உடையவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்......

நீங்கள் படித்து பிடித்த, படித்துக்கொண்டிருக்கிற, படிக்க நினைக்கிற படைப்புகளையும், படைப்பாளர்களையும் பற்றி இங்கே சொல்லுங்கள்.....

கதைகள் படிப்பதில் விருப்பமே இல்லாத என்னை கதைகள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தியது கல்கியின் "பொன்னியின் செல்வன்"....

கதைகள் படித்த என்னை, எழுதவும் தூண்டியது "சுஜாதாவின் சிறுகதைகள்".....

 

அவர்களின் படைப்புகளை பற்றி நேரம் கிடைக்கும்போது சொல்றேன்..... நீங்களும் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்களை பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் சொல்லுங்க.....

 



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
எண்டமூரி வீரேந்திரநாத்
Permalink   
 


பள்ளியிறுதி நாட்களில் என்னை வற்புறுத்தி, மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக்கிய என் டியூஷன் தோழன் “ஞானப்பிரகாச”த்திற்குக் கண்டிப்பாக இந்த பதிவின் மூலம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

அப்படி நான் உறுப்பினராகி.. இன்ன புத்தகம் தான்.. இன்ன ஆசிரியரைத்தான்.. வாசிக்க வேண்டும் என்கிற நியதியில்லாமல் வாசிக்க ஆரம்பித்தபோது.. “எண்டமூரி வீரேந்திரநாத்” அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தமிழாக்கத்தை வாசிக்க நேர்ந்தேன்.

கதையின் தலைப்பு ஞாபகம் இல்லை. ஆனால் அந்த கதை அமானுஷ்யம், உளவியல், விஞ்ஞானம் -  இம்மூன்றும் கலந்த கலவையாக இருந்தது. 

ஆந்திரத்து சுஜாதா என்னும் பேர் சொல்லும் அளவிற்கு இவரது கதைகள் அங்கே பிரபலம்.

http://en.wikipedia.org/wiki/Yandamuri_Veerendranath

http://www.yandamoori.com/english/yandamoori.html

http://kinige.com/kbrowse.php?via=author&id=355 



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: அகத்தை புதுப்பிக்கும் "புத்தகம்"....
Permalink   
 


இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் "வனவாசம்".... கவியரசு கண்ணதாசன் அவர்களின் சுயசரிதை என்று சொல்லலாம்.... மூன்று வருடங்களாக நான் தேடி அலைந்து இப்போ கிடைத்திருக்கும் புத்தகம்..... தமிழக அரசியலின் இன்னொரு முகத்தை நமக்கு காட்டியுள்ளார் கண்ணதாசன்.... எதையும் அவர் மறைக்கவில்லை என்பது படிக்க படிக்க தெரிகிறது......

அந்த புத்தகத்தின் ஒரு சாம்பிள் சொல்றேன்....
"இன்றைக்கு தமிழக அரசியலின் முதுபெரும் தலைவர் அப்போது கண்ணதாசனுடன் நெருங்கிய நண்பராக இருந்தவர்.... அந்த தலைவரும் கண்ணதாசனும் ஒருமுறை விபச்சாரம் நடக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்.... அங்கு ஒரு அப்பா தன் பெண்களை வைத்து வியாபாரம் செய்திருக்கிறான்.... ஆளுக்கொரு பெண்ணாக அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.... அரை மணி நேரம் கழித்து வெளியே ஏதோ சத்தம் கேட்க, வெளியே வந்த கண்ணதாசன் அதிர்ச்சியாகிருக்கிறார்.... அந்த தலைவர் விபச்சாரம் நடத்தும் அந்த தந்தையுடன் சண்டை போடுகிறார்... "உன் பொண்ணு எனக்கு சரியா ஒத்துழைக்க மாட்ரா... ஒழுங்கா பணத்தை திருப்பி கொடு, இல்லைனா போலிஸ்'ல சொல்லுவேன்" என்று கூற பயத்தில் அந்த ஆள் பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார்.... காவலர்களை அழைத்திருந்தால் முதலில் கைது செய்யப்படுவது தான்தான் என்று தெரிந்தும் அந்த தலைவர் அப்படி செய்ததை அதிர்ச்சி விலகாமல் பார்த்தார் கண்ணதாசன்..... அத்தோடு முடியாமல், தன் நண்பர்களிடம் அந்த தலைவர், "பார்த்தியா.... எல்லாத்தையும் முடிச்சுட்டு, காசையும் திரும்ப வாங்கிட்டேன்" என்று பெருமை பேசி இருக்கிறார்..... இன்றைக்கு முதுபெரும் தலைவரான அந்த அரசியல்வாதி கூட இந்த வனவாசத்துக்கு இதுவரை மறுப்பு சொல்லவில்லை... பக்கத்துக்கு பக்கம் பயங்கரமான அரசியல் உண்மைகளை இறைத்திருக்கிறார் கவியரசர்.... முடிந்தால் வாங்கி படியுங்கள் நண்பர்களே....


__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 92
Date:
Permalink   
 

நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருக்கும் புத்தகம் வனவாசம். அது எங்கே கிடைக்கிறது என்று சொன்னால் உபயோகமாயிருக்கும்

__________________


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

கல்யாண முருங்கை. பாலகுமாரனின் நாவல் ..ஒரு திருமணம் என்பது எப்படி பட்ட உறவு என்று நிதர்சனமாக விளக்கும் கதை. கல்யாண முருங்கை மரம் இருகிறதே .அது மிக பெரிய மரமாக தோற்றம் தரும். ஆனால் லேசான காற்றுக்கு கூட எதிர்த்து நிற்க வலிமை இருக்காது. அப்படிதான். கல்யாண பந்தமும்.
அதில் ஒரு வரி ..." கவலைபடாதே ..கடவுள் காப்பாத்துவார்.!"
"மயிர காப்பாத்துவார்....! பொது ஜன ஊடகத்தில் இந்த துணிவு யாருக்கு வரும்.

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@tvl....
நானும் பல நாட்களாக தேடி சமீபத்தில் திருச்சி சென்றபோது எதேச்சையாக கிடைத்தது..... திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இருக்கும் புத்தக கடைகளில் கிடைக்கிறது.....


@முத்து.....
உங்க ஆள் கதையான "இனிது இனிது காதல் இனிது" கதை இன்னும் சிலநாட்களில் படிக்க போறேன்.... எங்க சுஜாதா சொல்லாத எந்த விஷயத்தை உங்க பாலகுமாரன் சொல்லிருக்கார்னு பார்ப்போம்.....


__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

நானும் ‘வனவாசத்தை’ ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். வர்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்னு நம்புறேன். ராதா ராஜேஷின் அறிவுரைப்படி “பொன்னியின் செல்வன்” படிக்கப் போறேன்.

தமிழ் வாசக உலகின் பாதிக்கும் மேற்பட்டோரின் தலைவர் சுஜாதா தான் என் தல!



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

உண்மைதான் நண்பா.... எனக்கு தெரிந்தவரை "பொன்னியின் செல்வன்" படிக்காதவர்கள் தமிழின் ஒரு அருமையான சுவையை சுவைக்க தவறியவர்கள் என்று சொல்வேன்..... அப்போதல்லாம் நான் கதைகள் படிக்க விரும்ப மாட்டேன்.... என் நண்பன் ஒருவன் வற்புறுத்தி பொன்னியின் செல்வன் படிக்க சொன்னான்....... இப்போ நான் அதிகம் படிப்பதே கதைகள்தான்....... ஆயிரம் நண்பர்களின் அரவணைப்பை ஒரு நல்ல எழுத்தாளனின் கதை கொடுக்கிறது....... அப்படி என்னை உணரவைத்தது பொன்னியின் செல்வன்..... கல்கியே நினைத்தால் கூட பொன்னியின் செல்வனை விட இன்னொரு சிறந்த வரலாற்று புதினத்தை உருவாக்க முடியாது.... கடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் குழப்பங்கள் இருக்கிறது.... அந்த அழகான புதினத்திற்கு அதுவும் திருஷ்டிக்கு அழகாகவே இருக்கிறது....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

பொன்னியின் செல்வன், தமிழ் வரலாற்றில் ஒர் மணிமகுடம் என்றே சொல்வேன்.

நான் பொன்னியின் செல்வன் படித்து முடித்த பொது என் வயது 14. நானும் என் தந்தையும் தஞ்சாவூர் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களுக்கு சென்று நிறைய கோயில் கல்வெட்டுகளையும், இடிந்த கோவில்களையும், அங்கு உள்ள கிராம மக்களிடம் உலவும் கதைகளையும் கேட்டும் பார்த்தும், அறிந்தோம்; மகிழ்ந்தோம்.

என் தந்தை அந்த காலத்தில் இதை திரைப்படமாக எடுத்திருந்தால் யார் எந்த கதாபத்திரத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி சொல்வார்.

நாமும் இந்த காலத்தில் இத்தனை தொழில் நுட்பவசதிகள் உள்ளபோது இப்படம் தயாரிப்புகுள்ளகினால், யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அலசி ஆராய்வோமா?

எனக்கு பிடித்த கதை மாந்தர்களுக்கு இவர்கள் பொருந்துவார்கள் என்று நினைக்கிறன்,

பொன்னியின் செல்வன் --> சூர்யா
வந்தியதேவன் --> விஜய்
ஆதித்தன் --> அஜித் /விக்ரம்
குந்தவி --> அனுஷ்கா
நந்தினி --> ரீமாசென் /சிம்ரன்
பூங்குழலி --> அஞ்சலி
சேந்தன் அமுதன் --> கார்த்திக்
வானதி --> அமலா பால்
சுந்தர சோழர் --> சிவகுமார்
ஊமை நாச்சியார் --> லக்ஷ்மி ( ஆரோகணம் இயக்குனர் )
அழ்வர்கடியான் --> செந்தில்
பழுவேற்றயர்கள் --> சத்யராஜ் & பிரபு
அநிருத்தர் --> நாசர்
குடந்தை ஜோதிடர் --> பட்டாபி
கந்தமாறன் --> ஜீவா
பல்லவன் --> ஸ்ரீகாந்த்
மதுராந்தக சோழன் --> அஜ்மல்
செம்பியன் மாதேவி--> கே ஆர் விஜயா
கொடும்பாளுரர் --> ஜெய பிரகாஷ்

__________________
அன்புடன்,
ஆதர்ஷ். !


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

எனக்கு தெரிந்தவரை "பொன்னியின் செல்வன்" படிக்காதவர்கள் தமிழின் ஒரு அருமையான சுவையை சுவைக்க தவறியவர்கள் என்று சொல்வேன்....the same words frm my sister...she always advise me to stop reading my shidney sheldon(english) and to read this book...but book size parthalai payama iruku...ippo neengalarum sonathala try panalmnu iruken...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

உண்மைதான் நண்பா..... பொன்னியின் செல்வன் படிங்க..... வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை அனுபவிச்ச திருப்தி கிடைக்கும்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

sure I will read...anabai thedi forem vanthavudan tamila neriya miss paniruken thonuthu...but ennoda tamil reading just kumutham,ananda vikaten,rajesh kumar navel antha level than...so lovely rascal solerukura characters list partha small hesistation but ethavthu doubtna ungla than ketpen okva...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Any time favourite is . பொன்னியின் செல்வன்

1.sujatha's all stories/concepts
2.Indira Soundharaajan crime with devotional concepts
3.Rajesh Kumar's crime novels
4.anuratha ramanan's novels
5.Vidhya subramaniyam's "sorkkam pakkathil"
6.Shiva Shankari's "paalangal" -- fentastic one
7.Pattukootai Prabhar's novels &

lots ...

=================================
Hi ஆதர்ஷ். !

சேந்தன் அமுதன் --> கார்த்திக் \\ which karthik ?

பொன்னியின் செல்வன் --> சூர்யா with வானதி --> அமலா பால் \\ its bit odd combination ya

Apart from this ... evrything may be perfect ....well selections ... :)

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@cutenellaimdu....
நீங்க இவ்வளவு படிக்கிற ஆளா?..... நம்பவே முடியலப்பா..... அப்போ நீங்களும் கதை எழுதலாமே, ஒருவரி விமர்சனத்தோடு நிறுத்திடாம.....

பொன்னியின் செல்வன் படிக்கும் ஒவ்வொருவருக்கும் படித்து முடித்ததும் தோன்றும் ஒரு விஷயம், படமாக எடுத்தால் யார் நடிச்சா நல்லா இருக்கும்?....


அருண்மொழி வர்மன்- சூர்யா
வந்தியத்தேவன் - விஜய்
ஆதித்த கரிகாலன் - விக்ரம்
ஆழ்வார்க்கடியான் - பிரபு
குந்தவை நாச்சியார் - சினேகா,
வானதி - அஞ்சலி
நந்தினி தேவி - சமந்தா
மணிமேகலை - பிரியாமணி
பெரிய பழுவேட்டரையர் - ராஜ்கிரண்
சிறிய பழுவேட்டரையர் - பசுபதி
சேந்தன் அமுதன் - விமல்
பூங்குழலி - ஜெனீலியா
மதுராந்தகன் - மாதவன்
சுந்தர சோழர்- விஜயகுமார்
கொடும்பாளூர் வேளார்- சத்யராஜ்
செம்பியன் மாதேவி - மனோரமா
அணிருத்தர் - ஜெயபிரகாஷ்


இயக்குனர்கள் - மணிரத்னம் (திரைக்கதை மற்றும் நுணுக்கங்களுக்காக) + சேரன் அல்லது அமீர் (நேட்டிவிட்டி காக)
இசை - ரகுமான்

குறைந்தபட்சம் சில நூறு கோடிகள் செலவு செய்து எடுத்தால்தான், கல்கி அவர்கள் சொன்ன பிரம்மாண்டத்தை நமக்கு திரையில் காட்ட முடியும்.....

யார் தயாரிக்க போறீங்க?





__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

naan rasiththu padiththadhu jeyakandhan, sujatha kadhaikal dhaan.......

ivargal iruvaridamum enakku pidiththa otrumaikaamaththayum kaamamum virasamum illamal ezhudhuvadhu...............//////////

 

 konja naal munnadi naan padiththa puththagam, "pls indha pukkai vaangathinga" neeyaa naana gopi ezhuthiyaadhu,  vaazhkayin thaththuvaththai naadaga nadayil solli iruppaar arumai...........

pona vaaram naan padiththadhu "ilam paruvaththu kaadhal jadhai" by mohamed, indha kadhai naan padiththu mudiththadhu andha kadhalin azhagu sogam anaiththu andha naal muzhuvadhum en manadhil oru oviyamaai irundhadhu..............

 

naan oththukolgiren enakku kadhal kadhai, kadhal saarndha naavalkalai padikkave pidikkum, appadi patta nulgalaithth dhaan naan idhu varai thedi thedi padikkiren.............

 

idhu thavarillaye?????????????.............



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@நரேஷ்.....
தவறல்லாம் ஒண்ணுமில்ல நண்பா.... ஆனால், நிறைய வித்தியாசமான களங்களை உடைய கதைகளை, நாவல்களை படித்தால் நிறைய தெரிஞ்சுக்கலாம்.....
எனக்கு திகில், த்ரில்லர் கதைகள் ரொம்ப பிடிக்கும்..... காவிய கதைகள் ஒருமுறை படிச்சா, அடுத்தும் அதே போல படிக்க தூண்டும்....


இப்போ நான் பாலகுமாரனின் "உயிர்ச்சுருள்" படிச்சேன்..... ரொம்ப பிடிச்சிருக்கு.....
ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பும் படிக்கிறேன்.... ஒருசில கதைகள் "அப்பப்பா!!!!" ரகம்.....
"இரண்டு குழந்தைகள்"னு ஒரு சிறுகதை.... ஒரு ஜாதிய ஏற்றத்தாழ்வை இரண்டு குழந்தைகள் மூலம் அவ்வளவு அழகா புரிய வச்சிருக்கார்.....
பொதுவா சிறுகதைனா கடைசி வரியில் "ட்விஸ்ட்" இருக்கணும் என்கிற என் எண்ணத்தை மாற்றியது அந்த சிறுகதை.... எளிதாக நாம் யூகிக்கும் முடிவு, ஆனால் அதை செலுத்திய விதம் "அவருக்கு நிகர் அவரே"னு சொல்ல வைக்கும்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

@msvijay

time is the issue ya & thanks a lot for your wordzz :)

//// suray & anjali new thought ... it may be nys (but anjali will be looking little maturity as surya face is still having babyness )

so suggess some other actress ... :p

===================
குந்தவி --> அனுஷ்கா
நந்தினி --> ரீமாசென் /சிம்ரன் idea by ஆதர்ஷ். itz quite right
==================

################# Urs is
குந்தவை நாச்சியார் - சினேகா,
வானதி - அஞ்சலி
நந்தினி தேவி - சமந்தா

சினேகா is ok
but சமந்தா for நந்தினி தேவி it wont match at all ya

##################



-- Edited by cutenellaimdu on Friday 25th of January 2013 01:17:24 AM

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@cutenellai.....
முதலில் குந்தவை பற்றி பேசலாம்.... தைரியமான, தமிழ் முக சாயலில் இருக்க வேண்டிய பெண்..... அதற்கு சினேகாவை தவிர இப்போதைக்கு வேறு சாய்ஸ் இல்லை...
அடுத்து வானதி.... கொஞ்சம் அப்பாவியான, பயந்த சுபாவமுள்ள, அழகான பெண்..... அதற்கு என்னை பொருத்தவரை "அனன்யா" சரியாக இருப்பார்....
மணிமேகலை - தமிழ் சாயலில், கொஞ்சம் வெகுளிப்பெண் - பிரியா மணி.....
பூங்குழலி - துறுதுறுப்பான, கலகலப்பான அழகான பெண்.... வேறு சாய்ஸ் இல்லாம ஜெனீலியா தான்....

இவங்க நால்வருமே மாநிறமான பெண்கள்... தமிழ் பெண்கள் என்பதால் "சேட்டு துப்புன பான்பராக் மூஞ்சி மாதிரி சிகப்பா" இருக்க கூடாது.... தமிழ் சாயல் இவங்களுக்குத்தான் இருக்கும்.....

அடுத்து முக்கியமான பாத்திரம் நந்தினி......
பேரழகான, காந்த பார்வையுடைய பெண்.... பார்க்கும் அத்தனை பேரும் சொக்கும் அழகு, அதீத புத்திசாலித்தனம், கொஞ்சம் வில்லத்தனம்.....
அனுஷ்கா சரியாக இருப்பார், ஆனால் இப்போ அவங்களுக்கு கொஞ்சம் வயதானது போல இருக்காங்க.....
காஜல் அகர்வால் "மகாதீரா" படத்தில் அப்படி இருப்பார், அவர் சரியாக இருக்கலாம், இல்லைனா சமந்தா தான் ......

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

gud xplanation ..thnx vij

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

இப்போ நான் படிக்கும் புத்தகம் "சோபா சக்தி" எழுதிய "ம்....".....
எஸ்.ராம கிருஷ்ணனால் தமிழின் இதுவரை வெளிவந்த சிறந்த நூறு படைப்புகளில் ஒன்றாக இந்த புத்தகமும் பரிந்துரை செய்யப்பட்டது.....

ஈழத்தில் நடக்கும் ஒரு சாதாரண குடிமகனை வைத்து சொல்லப்படும் கதை... ஆனாலும், கதை போல தெரியவில்லை....வெலிக்கடை நிகழ்வை அப்படியே கண்முன் படம் பிடித்து காட்டியுள்ளார்.... அங்கு சிறையில் நடக்கும் நிகழ்வுகள் தான் பெரும்பாலும் கதை.... அங்கு பொதுமக்களுக்கும் பொடியள்'க்கும் (அதான் புலிகள்) இருக்கும் ஒருவிதமான உறவை சொல்கிறது கதை... புலிகளுக்காக, புலிகளின் ஆதரவு நபர்களுக்காக தன் வீட்டு மாட்டை விற்று உணவு பரிமாறும் பெண் முதல் , கதையின் ஒவ்வொரு பாத்திரமும் நெகிழ வைக்கிறது.... ஈழத்தின் இன்னொரு முகத்தை, அவர்கள் கலாச்சாரத்தை நிச்சயம் நிறைய தெரிந்துகொள்ளலாம்.... கண்டிப்பா வாய்ப்பு கிடைத்தால் படிங்க நண்பர்களே.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@butterfly....
அருமையான கேள்வி...... ஆனால், அதற்கு ஆட்களை நாம பார்த்திருக்கனுமே.... அருண்மொழி வர்மன் நானா?... ராஜராஜன் மேல உங்களுக்கென்ன அவ்வளவு கொலைவெறி?

 

இருந்தாலும் இதுவரை பழகியதை வைத்து நாளைக்கு சொல்றேன்.....



-- Edited by msvijay on Tuesday 26th of February 2013 01:33:23 PM

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

     நான் இப்போது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம் "சுஜாதாட்ஸ் " .......

இந்த புத்தகத்தை முழுமையாய் படிக்கவில்லை..... படித்துக்கொண்டு இருக்கிறேன்..........

இந்த ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நான் ஒரு பத்து புத்தகத்தை படித்த நிம்மதி, பெருமை ,செருக்கு எல்லாம் வருகிறது. அந்த அளவுக்கு , எழுத்துக்களின் மன்னன் சுஜாதா அனைத்தை பற்றியும் பேசி இருக்கிறார். இந்த புத்தகம் சுஜாதாவின் தொகுப்புக்கள் சேர்ந்தது.......

நண்பர்கள் முடிந்தால் இந்த புத்தகத்தை படிக்கவும்.......



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Once a time i always use to stay in library...! But nowadays didn't get enough time to spend with libraries...! So i use to buy books...! Recently i'm reading 'PLS INDHA PUTHAGATHAI YAARUM PADIKADHEENGA' by 'GOPINATH'...! And i also longing for 'PONNIYIN SELVAN' but the book was always in lending...! So waiting for my turn

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@நரேஷ்....
நிச்சயமா சுஜாதா ஒரு பொக்கிஷம்.....
அவருடைய கட்டுரைகளாக இருக்கட்டும் , குறிப்பாக "கற்றதும், பெற்றதும்", "கணையாழியின் கடைசி பக்கங்கள்", "சுஜாதாட்ஸ்", "தலைமை செயலகம்", இந்த நூற்றாண்டின் இறுதியில்" இன்னும் பல.... எவ்வளவோ கற்றுக்கொள்ளலாம்.....
அதே போல அவரின் கதைகள், குறிப்பாக சிறுகதைகளில் அவர் கடைசி வரியில் வைத்திருக்கும் சஸ்பென்ஸ், அதை படிக்கும்வரை நம்மால் ஊகிக்க முடியாது.....

கணேஷ், வசந்த் பாத்திரங்களை இப்பவும் யாராலும் மறக்க முடியாது....

சுஜாதா எப்பவுமே லெஜன்ட் தான்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Vijay can you able to compare the characters of PONNIYIN SELVAN with our forum members...? But i can say that you're the arunmozhi varman of this forum...! :) ;)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Naalaikku kadhaa paathirangal yaarunnu therunjadhuku piragu soldren...!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ Butterfly

புள்ளாண்டான்... நல்ல கேள்வி தான் கேட்டிருக்கார்... பதில் சொல்லுங்கப்பா.. அப்படியாவது நான் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிக்கறனான்னு பாக்கலாம்...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@butterfly....
என்னப்பா ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுது?....

@rtheiss....
நீங்க படிக்க போறிங்களா?... காமடி பண்ணாதிங்க.....


சரி நம்ம தளத்தின் உறுப்பினர்கள் யார்யாரெல்லாம் இந்த ஆட்டத்துல உண்டு?.....
நான் பெயர்களை சொல்றேன், நான் விட்ட பெயர்களை நீங்களும் சொல்லுங்க....

thamizhan,
rotheiss,
butterfly,
basher,
samram,
dinesh,
nareshji,
praveen kumar,


வேற ரெகுலர், பாப்புலர் ஆளுங்க யாராச்சும் இருந்தா சொல்லுங்கப்பா.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Jo

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

 

வந்தியத்தேவன் மற்றும் அருண்மொழிவர்மன் – இந்த இரண்டு பாத்திரங்களும் பிரதான பாத்திரங்கள் என்பதால் , இதில் குறிப்பிட்டு ஒருவரை கூற விரும்பவில்லை.... அதனால் இதர கதாபாத்திரங்கள் தன்மையையும், நண்பர்களின் நானறிந்த குணங்களையும் வைத்து என்னை பொருத்தமட்டில் சொல்கிறேன்....

 

முதலில் “ஆதித்த கரிகாலன்” – குணத்தால் நல்லவன்.... ஆனால், முடிவுகளை அவசரமாக எடுத்துவிட்டு, அதன் விளைவை நினைத்து அதிகம் வருந்துபவன்.... ஆனாலும், போர்க்குணம் கொண்டவன்.... வேறு யார்?... நம்ம “தமிழன்” அவர்களே தான்...

அடுத்தது “சுந்தர சோழர்” – மிகவும் திறமை வாய்ந்த மன்னர்.... ஆனால், கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை கவலைப்பட்டே காட்சிகளை நகர்த்தியவர்..... இவரின் அந்தரங்க காதலி பற்றிதான் கதையின் முக்கிய திருப்பமே இருக்கும்.... திறமையான மன்னர், வீரர், நல்ல மனம் கொண்டவர்.... சிறிய விஷயத்துக்கெல்லாம் பெரியதாய்  வருந்தியே வாழ்க்கையை நகர்த்தும் நம்ம “ரோத்திஸ்” அண்ணாச்சி தான் நம் சுந்தர சோழர்.....

குந்தவை நாச்சியார்” – நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் நன்மதிப்பு பெற்ற அரசிளம் குமரி.... திறமையான, ராஜதந்திரமான குணம் படைத்தவர்... வந்தியத்தேவனின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களுக்கு பிறகு மணம் புரிந்து வெற்றி வாகை சூடியவர்..... நாட்டிற்காக அந்த நாச்சியார் சிரத்தை எடுத்ததுபோல, நம் தளத்தை மீண்டும் புத்துயிர் ஆக்கிட போராடும் நம் “வண்ணத்துப்பூச்சி” தான் குந்தவை நாச்சியார்....

ஆழ்வார்க்கடியான்”- இவர் நல்லவரா? கெட்டவரா?னு கதையின் இறுதிவரை ஒரு குழப்பம் இருக்கத்தான் செய்யும்.... வாதங்கள் புரிவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டவர்.... வீண் சண்டைகளை விரும்பி நாடுபவர்.... ஆனாலும், எல்லாம் இறுதியில் நல்லதாய் முடியும் என்பது மட்டும் உண்மை.... வேறு யார்?... நான் தான்....

பூங்குழலி” – பார்ப்பவர் எல்லோரிடத்திலும் எளிதில் பழகும் தன்மை உடையவர்.... எல்லாவற்றையும் எளிதாக கையாளும் குணத்தோர்.... அனைத்து நண்பர்களையும் உறவினராய் பாவிக்கும் அன்பு மைத்துனர் “பஷிர்” தான் அவர்....

கந்த மாறன்” – மனதளவிலும் பிறருக்கு தீங்கு நினைக்காத மனத்தினன்.... அதிர்ந்து பேசினால் கூட, பிறர் மனம் வாடுமோ? என்கிற தயக்கத்தில் அமைதி பேணுபவர்.... கதையில் கூட “ரத்தம்” விரும்பாத அன்பு நண்பர் “சாம் ராம்” தான்....

வானதி” – மனதில் குழந்தை.... அதிகமான உணர்ச்சிவயப்படுதல், அதிக தவிப்பு, அதிக மகிழ்ச்சி... எதுவாக இருந்தாலும் அளவாக இல்லாமல், அதிகமாகவே பழக்கப்பட்டவர்.... மன்னனின் மனைவியான பிறகும், அரியணை ஏறாத எளிமையானவர்.....  குழுமத்தின் உணர்ச்சி பிழம்பு நண்பர் “தினேஷ்” தான்...

மணிமேகலை” – இயல்பாக எல்லோரிடத்திலும் பழகும் நபர்.... உணர்ச்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து, திடீர் விபரீத முடிவுகளை எடுப்பவர்.... மனதளவில் நல்லவர்....  அவசர முடிவுகளால், பிறர் மனம் வருந்துவதை அறியாதவர்.... சொல்லாமல் திடீரென்று தளத்தைவிட்டு பிறிந்து சென்ற “பிரவீன் குமார்” தான்....

 

இவை நானறிந்த அளவில் பொருத்தமான நபர்கள்... சில பெண் கதாபாத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன்..... அது குணங்கள் பொருத்தம் தொடர்பானது மட்டுமே, மற்றபடி வேறு எதுவும் இல்லை....

நண்பர்கள் நரேஷ் , cutenellai, hotguru மற்றும் ஜோ ஆகியோர்கள்  பற்றியும் நான் தனிப்பட்ட முறையில் அறிந்திடாதவன்..... அதிக பழக்கம் கொண்டிராத காரணத்தால், இருவருக்கும் ஏற்ற பொருத்தமான பாத்திரம் படைப்பதில் சிரமம் உண்டாகிவிட்டதால் அதை தவிர்த்திருக்கிறேன்......

மற்ற நண்பர்களும் தங்கள் கணிப்புகளை, தாங்கள் விரும்பும் பாத்திரத்தோடு நண்பர்களை இணைத்து கருத்துகளை சொல்லுங்கள்..... உங்களின் கணிப்புகளும், கவனிப்புகளும் எப்படி இருக்கிறது? என்பதை நானும் பார்க்கவேண்டும்...



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

I think karthika nair 'll suit for nandhini devi's character...!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

Yaar andha nair?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Actress Radha's daughter...!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

ஆதித்த கரிகாலன் = விஜய்

சுந்தர சோழர் = அண்ணாச்சி

ஆழ்வார்க்கடியான் = ஜோ

பூங்குழலி = பஷிர்

கந்த மாறன் = சாம் ராம்

வானதி = தினேஷ், நரேஷ்

மணிமேகலை = பிரவீன் குமார்

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Finally i got the book 'PONNIYIN SELVAN' in lending...! And started to read it...! felt like got a treasure...!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@விஜய்

என்னைப்பற்றிய தங்களது புரிதலுக்கு நன்றி நண்பா

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@butterfly.....

ஹ்ம்ம்..... கதை படிக்காமலே தான் பாத்திரங்களுக்கு ஆள் புடிச்சிங்களா?.... படிச்சிட்டு நிறைவா உங்க கருத்தை சொல்லுங்க....

@தமிழன்.....
என் கணிப்பு சரிதானே தமிழன்?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மிகச்சரி நண்பா...............,

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Padikaradhukku munnaadiye neenga thaan inga oru character analysis nadathirukingalae adhanaala thaan sonnen...! But surely i'll post my second opinion here....!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

face reading மாதிரி இது words analysisa vijay...but all are correct 90% this is my character...really u r a genius...I like the comments about u,Tamilan and especially butterfly...I too think like the same about his talents...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

////அடுத்தது “சுந்தர சோழர்” – மிகவும் திறமை வாய்ந்த மன்னர்.... ஆனால், கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை கவலைப்பட்டே காட்சிகளை நகர்த்தியவர்..... இவரின் அந்தரங்க காதலி பற்றிதான் கதையின் முக்கிய திருப்பமே இருக்கும்.... திறமையான மன்னர், வீரர், நல்ல மனம் கொண்டவர்.... சிறிய விஷயத்துக்கெல்லாம் பெரியதாய்  வருந்தியே வாழ்க்கையை நகர்த்தும் நம்ம “ரோத்திஸ்” அண்ணாச்சி தான் நம் சுந்தர சோழர்.....////


உங்க அனாலிஸிஸ் எல்லாம் சரி தான்... அதென்னவோ அந்தரங்க காதலின்னெல்லாம் போட்டிருக்கீங்களே.. அது யாருங்கண்ணா????



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Rothiess@andharanga kaadhaliya...? Akka kitta solliduven mama...!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

semma ragalaya irukku .. anyhow book reading int gets increade ..nys ..

@vijay i hv tried my best to be close to u ..but u ?!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Now i'm reading the book ''THE STRANGE CASE OF DR.JEKYLL & MR.HYDE"...! Written by 'ROBERT LOUISE STEVENSON'...!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u butterfly..........

 

naan dhaan ponniyin selvan online la padikkalaamnu try pannen...... but 3 parts dhaan padikka mudinchidhu........ thodarndhu window paaththu padikkum bodhu kannu dhaan valikkudhu........

 

i miss it........



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

பணி சுமை அதிகமாக இருப்பதால் தளத்திற்கு சில நாட்களாக வரமுடியவில்லை... இதே நிலை இன்னும் நான்கைந்து நாட்கள் நீடிக்கும்.... விரைவில் புதிய படைப்போடு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

@msvijay
இயல்பாக எல்லோரிடத்திலும் பழகும் நபர்.... உணர்ச்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து, திடீர் விபரீத முடிவுகளை எடுப்பவர்.... மனதளவில் நல்லவர்.... அவசர முடிவுகளால், பிறர் மனம் வருந்துவதை அறியாதவர்.... சொல்லாமல் திடீரென்று தளத்தைவிட்டு பிறிந்து சென்ற “பிரவீன் குமார்” தான்....


appdiya OMG hereaft change pannikiren


__________________

its me praveen



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

பொன்னியின் செல்வன் --> சூர்யா
வந்தியதேவன் --> விஜய்
ஆதித்தன் --> அஜித் /விக்ரம்
குந்தவி --> sneka
நந்தினி --> anuska
பூங்குழலி --> அஞ்சலி
சேந்தன் அமுதன் --> கார்த்திக்
வானதி --> அமலா பால்
my choice

__________________

its me praveen



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

msvijay >>>>y no reactions on my ques ! ?

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@cutenellai....
இப்போதான் கவனிக்கிறேன் நண்பா..... நான் பணி சூழலில் ரொம்ப அதிகமா சிக்கிருக்கேன்..... அதான் வரமுடியல.... உங்களுக்கு நல்லபடியாத்தானே மின்னஞ்சலில் பதிலல்லாம் அனுப்பினேன்?..... எதை சொல்றிங்கன்னு புரியலப்பா...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

1 2  >  Last»  | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard