மௌனம் - ஒரு வகை தவம்.. அவள் கண்கள் காணாத உன் காதலை உன் செயல்கள் உணறவைக்கும்.. கண்ணாடி மீது பட்ட சூரியவொளி போல ஏதாவது ஒரு இடத்தில் பிம்பம் விழுந்தே தீரும்.. உணர்வு உரிமை ஆவது நட்பு.. உரிமை சொந்தமாவது காதல்.. செயல்களைச் செம்மையாக்கி உரிமையைச் சொந்தம்மாக்கிக்கொள்.. அவள் இதயச் சிம்மாசனத்தில் நீ அமர்ந்திருப்பாய் - ஊமையாக அல்ல.. மௌனத் தவம் புரியும் அரசனாக...