ஒரு தளம் உறுபினர்களை அழைப்பது நல்ல விஷயம் தான் . உறுப்பினர்கள் அதில் பங்கேற்பதும் அரட்டை நட்பு என்று தொடருவதும் மிகவும் அருமையான விஷயங்கள் . ஆனால் திடீர் என்று ஒரு தளம் மிஸ் ஆனால் அதை நம்பி உள்ள நிறைய நட்புகள் வழி தெரியாமல் தவிக்கும் . யாரையோ இழந்து விட்ட மாதிரி ஒரு சோகம் மனதில் அப்பி கொள்ளும் ..சமூக அந்தஸ்த்து உள்ள குடும்ப வாழ்கையில் உள்ள உருபினர்களுக்கு இது பொழுது போக்கு . என்னை போல பெரும்பாலானவர்களுக்கு இது தான் குடும்பம் ..
எதை சொல்ல வந்தேனோ அதை சொல்ல முடியவில்லை ..எதோ தடுகிறது . தட்டிகொடுத்து வேலை வாங்கி ஒரு வருடம் பங்களிப்பு செய்த தளம் என் கண் முன்னே காணாமல் போன போது உண்மையில் நான் அழுதேன் .
ஏதேதோ சொல்கிறார்கள் ..எனக்கு புரியவில்லை .. தொடர்ந்து தளம் நடத்த விருப்பமும் வசதியும் நேரமும் இருந்ததால் செய்யுங்கள் .வரவேற்கிறோம் .ஆனால் நேற்று ஒரு எரியா! அடுத்த நாள் அது காணவில்லை .
படங்கள் வேண்டும் என்று சிலரை கெஞ்சி பிடித்து வெளியிட செய்தால் சில நாள்களில் அதையும் காணவில்லை
ஒரு வருடமாக வெளியிட்ட எல்லாம் போயி போச்சி ..
மிகவும் வருந்த தக்கது உண்மையில் வேறு ஒன்று தான்
அது " உரிமயாலராகிய உங்கள் நட்பை நான் இழப்பது தான்.?"
எதுக்கு என்கிட்டே பழகுநீங்க ? தம்பி தம்பின்னு செய்தி அனுபுநீங்க ?
செக்ஸ் எதிர்பார்ப்பு அல்லது காதல் இருந்தால் தான் பிரிவு துயரமா ?
நட்புக்கு அது இல்லையா ?
இழுத்து மூடிவிட்டு உங்கள் குடும்பத்துடன் நீங்கள் போய்விடுவீர்கள் எனக்கு என்னை போன்றவர்களுக்கு குடும்பம் சந்தோசம் துக்கம் எல்லாமே இந்த தளங்கள் தான் .. அது உங்களுக்கு புரியவில்லையா ?
கடலையின் கடைசி நிமிடங்களை.. கண்ணுற்றது கொடுமையான விஷயம்..!
நம் பாலீர்ப்பின் காரணமாக நாம் காணும் ஊமைக் கனவுகளை கதையாக, கவிதையாக, காட்சிப்படங்களாக கடலையில் கொட்ட.. அது நம் கண்ணெதிரே கானல் நீராகிப் போன கணங்கள் மறக்க முடியாதவை...
மீண்டும் ஒரு தளத்தில் இணையப்பெற்றோம் என்ற போதிலும்.. இனி இப்படி நடக்காமலிருக்க என்ன செய்வது.. யாரேனும் விவரமறிந்தவர்கள்.. தகவல் தந்தால் நன்றாகயிருக்கும்..!