எங்க ஆயா " சீக்கிரமே உனக்கும் டும் டும் தண்டா !" என்று சொல்லும் வரை
என்னவோ பயமா இருக்குல்ல !
எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆனால் ஏன் கல்யாணம் என்றால் பயமா இருக்கு ...
ஒரே குழப்பம் தான் ...தாலி கட்டி ...எல்லோருக்கும் போஸ் கொடுத்து நிறைய சிரிச்சி ,எல்லோருக்கும் கால் கும்பிட்டு ....மணி கனாக்க ஒரே இடத்துல குந்துரதுன்ன காண்டா இருக்கு இல்லை
அப்புறம் வெட்கத்தை விட்டு சொல்லுறேன் ..முக்கயமா ராத்திரிக்கு ஒன்னு வருமே
அதாங்க பஸ்ட் நைட் ..அத நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு ...
என்னை மாதரிதான் நீங்களும் இருக்கேங்களா ..இல்லை நான் தான் அப்படியா ?
நிதி !யப்பா ! என் வீரம் எல்லாம் செல் கமரா முன்னாடி தான் .. ஒரு லேடி யா கொஞ்சம் லேசா ட்ரஸ் விலகி பார்த்தால் நடுங்கும் . அப்புறம் ரோதீஸ் .. எல்லோரும் அப்படிதான் சொல்லுறப்போ நிஜமாவே கொஞ்சம் நம்பிக்கை வருதுங்க ....
என் "நெஜமாவா சொல்றீங்க?" கதையில் வரும் ஒரு சிறு காட்சி, ஏனோ இந்த இழையை படிக்கும்போது எனக்கு அந்த நினைவு வந்தது..... எதனால் என்று படித்தபின் நீங்க சொல்லுங்க......
"எப்போதும் கலகலப்பாக இருக்கும் மாணிக்கம் அன்று படபடப்பாக காணப்பட்டான்.... அதைக்கண்ட பிரபா சிரித்தவாறே, “என்ன மாமா இப்புடி இடிஞ்சு போயி உக்காந்திருக்க?.... படாத எடத்துல எதுவும் அடிபட்ருச்சா?” என்றான்.... முகத்தில் கொஞ்சம் சோகத்துடன் மாணிக்கம், “கிண்டல் பண்ணாதடா மாப்ள.... பயமா இருக்கு..... முதல் ராத்திரிக்கு எப்புடி, என்ன பண்றதுன்னு கொஞ்சம் பதட்டமா இருக்கு” என்றான்.... “மாமா, இது ஜனனி அத்தைக்குதான் முதல் ராத்திரி..... உனக்கு அனேகமா இது முன்நூறாவது ராத்திரியா இருக்கும்..... நீ பயப்புடுறன்னு யார்கிட்டயும் சொல்லிடாத” என்று சிரித்தான் பிரபா....
“ஐயோ... சத்தம் போட்டு சொல்லாதடா..... எத்தனையோ தடவ நாம கடைல காபி குடிக்கிறதுக்கும், நாமலே காபி போட்டு குடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல..... சரி விடு, பாத்துக்கலாம்” என்று தன்னையே ஆறுதல் படுத்தியவன், முதல் இரவுக்கு புறப்பட்டான்....."
அட .. அப்படி எல்லாம் இலலவே இல்லை விஜய். நான் காபி ரெண்டு முறை தான் குடித்திருக்கேன் . டி தான் ஜாஸ்தி ..அதுவும் கூட மறுபடியும் என்ன நடந்தது என்று நினைவுக்கு வரமாட்டேன்குது . அவசரம் பயம் .பதட்டம் எல்லாம் கலந்து ஒரு ...கலவை .. புரியவில்லை. நான் காபி ன்னு சொன்னது என்னன்னு எல்லோருக்கும் புரியும் தானே ..
//கணக்கு வழக்கில்லாத டீயாம்.// நான் எப்போப்பா அப்படி சொன்னேன் .டி ரெண்டை விட அதிகம். அது மூன்றோ நான்கோ இருக்கலாம் இல்லியா ? கிச்சா சொல்லுற மாதிரி இதில் எல்லாம் வகை தொகை இருக்கனும் இல்ல !( ஒரு கதைய படிச்சா அதில் உள்ள வரிகள் ஒரு வருஷம் மனசில் எனக்கு நிக்கும் --- பிடிச்சிருந்தா ) தவிர நீங்க வக்கீல் ஆயி இருக்கலாம் ரோதீஸ் .கிச்சாவின் முடிவுக்கு காரணம் சொல்லும்போதே நினைச்சேன். இப்படி எல்லாம் மடக்கி கேள்வி கேட்ட நாங்கள் " ஞே ' என்று விழிப்போம் . பதில் வராது ..( அது என்ன ஞே என்று விழிக்கிறது ..நேத்து ஒரு கதையில படிச்சேன் )
you are cordially invited பெற்ற அத்தனை பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம், அதில் இழையோடும் நகைச்சுவை. உங்கள் வாதம் (கிச்சாவின் ) அல்ல. அது கிச்சுகிச்சு மூட்டுகிற நகைச்சுவை அல்ல. உரக்கச் சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் அல்ல. ஆனால் படிக்கிற போதெல்லாம், படித்து முடிக்கிற போதெல்லாம் எண்ணி எண்ணி எனக்குள் நானே புன்னகை செய்து கொள்ளத் தவறியது இல்லை.
உண்மையில் மிகவும் முக்கியமான பதிவு இது. முத்து விளையாட்டாய் தலைப்பிட்டிருந்தாலும் “அப்படி ஒரு விஷயத்தை” எதிர்நோக்கும் பயம் ஓரின விரும்பிகளுக்கே உள்ளது தான்.
காரணம்.. என்ன தான் இது போன்ற தளங்களில் முழங்கினாலும்.. நம்மில் 99.99% பேருக்கு வீதியில் இறங்கி வானவில் வர்ணக்கொடி பிடித்து..
“இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா” என்றோ.. “பனைமரத்துல வௌவாலு.. எங்களுக்கே சவாலு” என்றோ.. கூவிக்கொண்டு pride march செல்லும் தைரியம் இருக்காது..
அநேகமாக எல்லாருக்குமே.. “கட்றா.. தாலிய” நிலைமை தான்.. நண்பர் roynada முன்னொரு முறை சொல்லியிருந்தது போல.. நாம் சார்ந்த தமிழ் சமூகம்.. எந்த ஒரு முன்னேறிய நாட்டிலிருந்தாலும்.. இது போன்ற முற்போக்கு சிந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை..
ஆகையால்.. விருப்பம் இருக்கிறதோ.. இல்லையோ.. திருமணத்தை எதிர்நோக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. எனவே அதை சார்ந்த விஷயங்களை பயமின்றித் துணிவுடன் எதிர்கொள்ள... நம் மன்ற உறுப்பினர்கள்.. ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தல் சாலச் சிறந்தது!
@முத்து..... காபி, டீ மட்டுமல்லாமல் பல நேரங்களில் ரெண்டும் கலந்து நீங்கள் காக்டெயில் கூட குடித்திருக்கிறதா ஒரு பேச்சு தஞ்சை பக்கம் கேக்குதே, அது நெசமா முத்து?.....
பெண்களை புரிந்துகொண்டால் அந்த பயம் உங்களுக்கு தேவை இல்லை முத்து..... நிச்சயம் திருமணத்திற்கு முன்பு பலமுறை உங்கள் வருங்கால மனைவியோட பேசுற வாய்ப்பு கிடைக்கும், அதனால முதல் இரவு உங்களுக்கு புதுசா தெரியாது.... இன்னும் சொல்லனும்னா, பல முதலிரவுகள் பேச்சோடு மட்டுமே பலரும் முடித்துக்கொள்வார்கள், அதற்கு காரணம் நீங்க சொல்ற தயக்கம்.... முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள், அதனால் உங்கள் விருப்பத்தைவிட உங்கள் மனைவியின் விருப்பத்தை புரிந்து செயல்பட்டால், உங்க வேட்டி முடிச்சுல எப்பவும் அவங்கள கட்டி வச்சிடலாம்.... (முந்தானை முடிச்செல்லாம் பழைய வசனம், இப்போலாம் அவங்களுக்கு முன்னாடி அசத்த நீங்க தயார் ஆகிட்டா உங்களுக்கு அவங்க சரண்டர் ஆகிடுவாங்க)..... மேலும் விவரங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொல்றேன்.....
நன்றி விஜய் . ஆனால் நான் வேட்டி கட்டியது இல்லை. சோ ஜீன்ஸ் ல தான் லாக் பண்ணனும். அப்புறம் நீங்களும் என் வயசு தானே ..எப்படி ஒரு மாதிரி புரிஞ்சி வச்சி இருக்கீங்க.. எதோ இருக்குயா உன்கிட்ட! ...சம திங் ஸ்பெசல் ! அப்புறம் நான் எப்பவுமே காப்பிய நினச்சி கனவு கண்டுகிட்டு டீயையும் மிஸ் பண்ணிட்டு வெறும் பச்சை தண்ணி?
( இப்போ ரோதீஸ் இதுக்கு வேற மீனிங் சொல்லணும் நித்திக்கு ) குடிக்கிற அப்பாவி பா. எனக்கு காக்டெயில் பத்தி எதுவும் தெரியாது .. நம்புங்கப்பா ...எல்லாத்துக்கும் சிரிச்சால் எப்படி ?